பொருளாதார விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் செல்வது கவலையளிக்கிறது: அமைச்சர் பாண்டியராஜன்

24-01-2020 02:10 PM

சென்னை,

பொருளாதார விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசிடம் செல்வது கவலை அளிக்கிறது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்  க. பாண்டியராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க. பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு வரக்கூடிய நிதி குறைந்து கொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டிற்கு கிடைக்கூடிய 2000 கோடி ரூபாய் நிதி குறைந்துவிட்டது. ஜிஎஸ்டியில் தமிழ்நாட்டிற்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல பொருளாதார விவகாரங்களில் மாநிலங்களுக்கான அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. இது மாற்றப்பட வேண்டிய ஒன்று.

மாநிலங்களுக்கான உரிய சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என அமைச்சர் க. பாண்டியராஜன் கூறினார்.Trending Now: