இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் நிறைவு

23-01-2020 08:23 PM

மும்பை,

   இந்திய பங்குச்சந்தை 3 நாள்கள் சரிவுக்கு பின் பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று 271 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.இன்று காலை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 271.02 புள்ளிகள் உயர்ந்து 41,386.40, புள்ளிகளில் நிலைபெற்றது

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 73.45 புள்ளிகள் உயர்ந்து 12,180.35 புள்ளிகளில் நிலைபெற்றது.
லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி) இன்று ஒரே நாளில் மட்டும் 2.98 சதவீதம் உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து எஸ்பிஐ 2.26 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 1.41 சதவீதமும், கோடக் வங்கி 1.14 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 0.96 சதவீத பங்குகள் உயர்ந்தன.  
இதைபோல் எம் அண்ட் எம், டைட்டன், இன்போசிஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
டெக் மஹிந்திரா, பவர் கிரிட், டி.சி.எஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று வீழ்ச்சியை கண்டது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இன்று காலை (23-01-2020) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.71.22 காசுகளாக இருந்தது. இன்று  மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.26  காசுகளாக நிலைபெற்றது.

நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.19 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.Trending Now: