ஆஸ்திரேலியாவில் வனத் தீயை அணைக்க வந்த அமெரிக்க விமானம் தீயில் விழுந்தது; அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் பலி

23-01-2020 06:18 PM

சிட்னி,

   ஆஸ்திரேலியாவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி -130 விமான விபத்தில் மூன்று அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பல வாரங்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீயை அணைக்கும் பணியில் அந்நாட்டு தீயணைப்பு வீரா்கள் கடுமையாக போராடி வருகின்றனா். அவா்களுடன் இணைந்து, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு தீயணைப்பு வீரா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தீவிபத்தில் சிக்கி இதுவரை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி -130 விமானம்  இன்று விபத்துக்குள்ளானது.

இதில் அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்ததாக அங்கிருந்து வெளியாகும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.Trending Now: