இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு காண உதவ தயார்: மீண்டும் டிரம்ப் உறுதி

22-01-2020 08:00 PM

டாவோஸ்

உலகப் பொருளாதார அரங்கின் ஆண்டு மாநாட்டில் கலந்துகொள்ள ஸ்விஸ் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை இன்று மாநாட்டு அரங்குக்கு வெளியே சந்தித்து பேசினார்.

அப்பொழுது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய தகவல்கள் வருமாறு:

இந்திய-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் பிரச்சனைகளையும் அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு உதவியாக பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  மீண்டும் இம்ரான்கான் இடம் உறுதியளித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை இந்த சந்திப்பின்போது எனது நண்பர் என்று டிரம்ப் அழைத்தார். 

காஷ்மீர் பிரச்சனையில் தோன்றியுள்ள மாற்றங்கள் குறித்து நீங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக பேச வேண்டும் என்று டிரம்ப் ஆலோசனை கூறினார்.

இந்திய பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா உதவ முடியும் என்றால் நிச்சயம் நான் உதவி செய்வேன் என்று அமெரிக்க அதிபர் கூறினார். 

இந்திய-பாகிஸ்தான் உறவுகளின் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேச்சு நடத்த வாய்ப்பு கிடைத்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன் எனவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.Trending Now: