பட்டாசு தொழிலாளி மகள் துணை ஆட்சியர்! – சுமதி

22-01-2020 06:28 PM

சமூ­கத்­தில் சாதனை புரி­ப­வர்­கள் எல்­லாம் பெரும் பணக்­கார வர்­கத்­தி­னரை சேர்ந்­த­வர்­கள் அல்ல. பெரும்­பா­லும் நடுத்­த­ரம் மற்­றும் ஏழ்மை நிலைச் சார்ந்­த­வர்­களே. அப்­ப­டி­தான் பட்­டா­சுத் தொழி­லா­ளி­யின் மக­ளான மகா­லட்­சுமி துணை ஆட்­சி­ய­ராக தேர்­வா­கி­யுள்­ளார்.

சிவ­காசி அரு­கி­லுள்ள திருத்­தங்­க­ளைச் சேர்ந்த பட்­டாசு தொழி­லா­ளி­க­ளான கருப்­பு­சாமி, ராஜேஸ்­வரி ஆகி­யோ­ரின் மக­ளான மகா­லட்­சுமி லட்­சி­யத்­து­டன் படித்து டிஎன்­பி­எஸ்சி குரூப் 1 தேர்­வில் 362 பேர் கொண்ட தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் மாநில அள­வில் நான்­கா­வது இடம் பிடித்­துள்­ளார்.

"நாங்க ஆரம்­பத்­திலே தீப் பெட்­டித் தொழி­சா­லை­யில் பணிப் புரிந்­தோம். இப்ப வீட்­டி­லேயே பூ மத்­தாப்­புக் குமிழ்­களை குடிசை தொழி­லாக செய்­கி­றோம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்­பா­தித்­தாலே அதி­கம். நாங்க கஷ்­டப்­ப­டு­கிற மாதிரி மகள் படக்­கூ­டாது என்­ப­தற்­காக அவள நன்கு படிக்க வைச்­சோம். அவ­ளும் எங்க கஷ்­டத்தை புரிஞ்­சுக்­கிட்டு நல்லா படிச்சு இன்­ஜி­னி­யர் ஆனா. இப்ப துணை ஆட்­சி­ய­ராக மாறப் போறா" என்­கி­றார் மகா­லட்­சு­மி­யின் தாயார்

ராஜேஸ்­வரி.

மகா­லட்­சுமி அவர் குடும்­பத்­தில் முதல் பட்­ட­தாரி என்­ப­தோடு, முதல் அரசு ஊழி­ய­ரும் கூட். " நான் அரசு பள்­ளி­யில் தமிழ் வழி­யி­லா­தான் படித்­தேன். பத்து மற்­றம் பன்­னி­ரண்டு வகுப்­பு­க­ளில் பள்­ளி­யி­லேயே நான்­தான் முதல் மாண­வி­யாக வந்­தேன். மருத்­து­வம் படிக்­க­வேண்­டும் என்­ப­து­தான் என்­னோட ஆசை. இரண்­டாம் கவு­ச­னில்­தான் மருத்­து­வம் படிக்க தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் இடம் கிடைத்­தது. அதற்கு லட்­சக் கணக்­கில் செல­வா­கும் என்­ப­தா­லும் அந்த பாரத்தை தாங்­கக் கூடிய சக்தி என் குடும்­பத்­திற்கு இல்­லா­த­தால் அந்த ஆசையை முட்டை கட்­டி­விட்டு இறு­தி­யில் இன்­ஜி­னி­யர் படிக்க முடிவு செய்­தேன்" என்­கி­றார் மகா­லட்­சுமி

கல்­விக் கடன் பெற்­று­தான் பொறி­யி­யல் பட்­டம் பெற்று இருக்­கி­றார். பள்­ளி­யில் படிக்­கும் சம­யத்­தில் ஆசி­ரி­யர்­கள் அரசு வேலை வாய்ப்பு பற்றி பெரு­மை­யாக கூறி­யது கேட்டு தானும் அர­சாங்க ஊழி­யர் ஆக­வேண்­டும் என்ற எண்­ணம் சிறு­வ­ய­தி­லேயே பசு மரத்து ஆணி­போல மகா­லட்­சுமி மன­தில் பதிந்து விட்­டது. இன்­ஜி­னி­யர் பட்­டம் பெற்­ற­வு­டன் தன் ஊரி­லுள்ள தனி­யார் ஐஏ­எஸ் பயிற்சி மையத்­தில் கோசிங் எடுத்­துள்­ளார். அதற்­கான புத்­தங்­களை வாங்­கக் கூட அவ­ரி­டம் காசு இல்லை. அந்த பயிற்சி மையத்­தி­லி­ருந்த ஆசி­ரி­யர் பொன்­வள்­ளி­தான் அப் புத்­தங்­களை வாங்­கிக் கொடுத்­துள்­ளார். இப்­போட்டி தேர்­வுக்கு நாளி­தழ் படிக்க வேண்­டும் என்­பது முக்­கி­யம். அதற்­காக  நூலத்­திற்கு சென்று தமிழ மற்­றும் ஆங்­கில நாளி­தழ்­களை படித்­துள்­ளார். அதில் குறிப்­பாக தலை­யங்­கத்­திற்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­துள்­ளார். அதோடு முக்­கிய செய்­தி­களை குறிப்பு எடுத்­துக் கொள்­வார். ஆங்­கி­லம் சரி­யாக வாராது என்­ப­தால் ஆங்­கில நாளி­தழ்க்கு கூடு­தல் நேரத்தை ஒதுக்கி படித்து தன்­னு­டைய ஆங்­கில அறிவை வளர்த்­துக்­கொண்டு இருக்­கி­றார்.

"தமி­ழ­நாடு பாட­நூல் நிறு­வ­னம் வெளி­யிட்ட பாடப்­புத்­தங்­க­ளைப் படிப்­பது. பழைய போட்­டித் தேர்­வு­க­ளில் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதில் எழு­திப் பழ­கு­வது போன்ற அடிப்­படை விஷ­யங்­களை நான்கு ஆண்­டு­க­ளாக

செய்­தேன்" என்­கி­றார் மகா­லட்­சுமி.

"என் பொண்ணு போட்­டித் தேர்­வுக்கு தயா­ரா­கிக் கொண்டு சம­யத்­தில் பொண்­ணுக்கு எப்ப கல்­யா­ணம் செய்­ய­போ­றீங்க, வயசு வேர ஏறிக்­கிட்­டுப் போகு­வது அல்ல என்று பல பேர் என்­னி­டம் கேட்­டார்­கள். என் வீட்­டிலே கல்­யாண வய­சிலே பொண்ணு இருக்­கி­றத கேள்­விப் பட்டு அவள கல்­யா­ணம் செய்­து­கொள்ள வந்­துக் கேட்­டாங்க. ஆனா எனக்கு மட்­டும் என் பொணணு பெரிய அர­சாங்க ஆபீ­ச­ரா­கு­ணும் என்ற எண்­ணம் மன­தில் தீக்கு தீக்­குன்ணு எரிந்­துக் கொண்டே இருந்­தது. அத­னா­லேயே அவள பெண் கேட்டு வந்த விஷ­யத்­தை­யெல்­லாம் அவள் காதுக்கு போகாம பார்த்­துக்­கொண்­டேன்" என்­கி­றார் மகா­லட்­சு­மி­யின் தந்தை கருப்­பு­சாமி.

"என் அப்­பா­வு­டன் சேர்ந்து பட்­டாசு தொழி­லைப் பார்த்து அவ­ருக்கு உத­வி­யாக இருந்­தேன். வறு­மை­யான சூழ்­நி­லை­யி­லும் என் பெற்­றோர் என்­னைப் போட்­டித் தேர்­விற்­காக சென்­னைக்­குப் படிக்க அனுப்­பி­னர். எனது திரு­ம­ணத்­திற்­கா­கச் சேர்த்து வைத்த நகையை அடகு வைத்து என்­னைப் படிக்க அனுப்­பி­னர். எனக்கு மட்­டு­மல்­லா­மல் என் பெற்­றோ­ருக்­கும், அரசு வேலையா? திரு­ம­ணமா? என்று யோசிக்­கை­யில் அரசு வேலை­தான் பெரி­தா­கத் தெரிந்­தது. கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக குரூப் தேர்­வு­களை எழுதி தோல்­வி­ய­டைந்­தேன். சிவில் சர்­வீஸ் தேர்வை எழு­தி­னேன். அதி­லும் தோல்­வி­தான் அடைந்­தேன்" என்­கி­றார் மகா­லட்­சுமி.

2016 ம் ஆண்டு நடை­பெற்ற குரூப் 1 தேர்­வில் 103ம் இடைத்­தைப் பிடித்­துள்­ளார். ஆனால், அப்­போது 85 அர­சுப் பணி­கள் மட்­டுமே ஒதுக்­கப்­பட்­ட­தால் மகா­லட்­சு­மிக்கு வேலை கிடைக்­க­வில்லை. ஆனால் முயன்­றால் முடி­யா­தது ஒன்­று­மில்லை என்­பதை மன­தில் கொண்டு கடந்த ஆண்டு நடை­பெற்ற குரூப் 1 தேர்வு எழுதி தற்­போது மாநி­லத்­தி­லேயே நான்­காம் இடத்தை பிடித்து துணை ஆட்­சி­ய­ராக உள்­ளார்.

"ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்­டுமே படிக்க நேரம் கிடைக்­கும். மீத­முள்ள நேரம் வீட்டு வேலை­யும் அப்­பா­வுக்கு உத­வி­யாக பட்­டாசு மூலப்­பொ­ருள்­கள் தயா­ரிப்­பி­லும் ஈடு­பட்டு வந்­தேன். பல­முறை தோல்­வி­யைக் கண்­டா­லும் நான் சோர்­வ­டை­யா­மல் எப்­ப­டி­யா­வது அர­சுப் பணி­யில் சேர வேண்­டும் என்ற வைராக்­கி­யத்­து­டன் தேர்­விற்­கா­கப் படித்து வந்­தேன்.

செய்­தித்­தாளை அதி­கம் வாசிப்­பேன். செய்­தி­கள் மூலம் ஒவ்­வொரு நிகழ்­வை­யும் ஆர்­வத்­து­டன் கவ­னித்து சேக­ரித்து படித்­தும் வந்­ததே எனது வெற்­றிக்­கான கார­ணம். அர­சுப் பணி­யில் ஏழை எளிய மக்­க­ளின் தேவை­களை அறிந்து அரசு வரம்­பிற்கு உட்­பட்ட முறை­யில் உட­ன­டி­யா­கச் செய்து தர முனைப்பு காட்­டு­வேன்'' என்­றார் நம்­பிக்­கை­யு­டன்.Trending Now: