கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 23–1–2020

22-01-2020 06:27 PM

பொங்கல் இஸ் த ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் ஆப் தமிழ்நாடு

Pongal is the harvest festival of Tamizh Nadu.

பொங்­கல் தமிழ் நாட்­டின் அறு­வ­டைப் பண்­டிகை.

வாக்­கி­யத்­தின் சப்­ஜெக்­டாக (எழு­வாய்) பொங்­கல் என்ற பெயர்ச் சொல் அமைந்­தி­ருக்­கி­றது.

பொங்­கல் தொடர்­பான வேறு பெயர்ச் சொற்­களை எண்­ணிப்­பார்ப்­போம்: கரும்பு (சுgகர்­கேன் sugarcane), வெல்­லம் (ஜாgக்g­­கரி Jaggery), மஞ்­சள் (tடர்­ம­ரிக் turmeric).

ஜாgக்­கரி இஸ் யூஸ்ட் டு மேக் சர்க்­க­ரைப் பொங்­கல். Jaggery is used to make Sarkkaraip Pongal.

சர்க்­க­ரைப் பொங்­கல் செய்ய வெல்­லம் உப­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது.

யூஸ்dட் (used) என்ற சொல் எப்­ப­டிப் பயன்­ப­டு­கி­றது என்று சில எடுத்­துக்­காட்­டு­கள்:

ஹீ யூஸ்ட் dத பிளேஸ் ஆஸ் ஹிஸ் ஆஃப்­பிஸ் He used the place as his office. அந்த இடத்தை அவன் தன்­னு­டைய அலு­வ­ல­க­மா­கப் பயன்­ப­டுத்­தி­னான்.

கடந்த காலத்­தில் செய்­த­தைக் குறிக்­க­வும் யூஸ்ட் (used) பயன்­ப­டு­கி­றது.

மணி யூஸ்ட் டு வர்க் தேர். Mani used to work there. கடந்த காலத்­தில் மணி அங்கே வேலை செய்­தான்.

ஐ யூஸ்ட் டு ரெஸ்­பெக்ட் ஹிம். I used to respect him. முன்பு அவன் மீது எனக்கு மரி­யாதை இருந்­தது (இப்­போது மரி­யாதை இருப்­பது சந்­தே­கம் தான் போலும்).

ஹீ யூஸ்ட் டு ஈட் மீட். He used to eat meat. கடந்த காலத்­தில் அவன் மாமி­சம் உண்­டான், அதா­வது அவ­னுக்கு மாமிச உண­வு­கள் உண்­ணும் வழக்­கம் இருந்­தது.

யூஸ்ட் (used) என்­பது பயன்­ப­டுத்­தப்­பட்ட என்ற பொரு­ளி­லும் வரு­கி­றது.

ஹீ bபாட் அ யூஸ்ட் கார். He bought a used car.

ஏற்­க­னவே பயன்­ப­டுத்­தப்­பட்ட (யூஸ்ட் used) காரை அவன் வாங்­கி­னான். அதா­வது செகண்ட் ஹேண்dட் (second hand) காரை அவன் வாங்­கி­னான். bபய் (buy) என்­ப­தன் கடந்­த­கால வடி­வம் பாட் (bought).

Bought என்­பது வாங்­கு­த­லைக் குறிக்­கும் கடந்­த­கால வினைச்­சொல், brought (bபிராட்) என்­பது கொண்­டு­வ­ரு­த­லைக் குறிக்­கும் கடந்­த­கால வினைச்­சொல்.

ஹீ பிராட் டு dத ஆஃபிஸ் dத சுgகர்­கேன் dதேட் ஹீ bபாட் இன் dத மார்க்­கெட். He brought to the office the sugar that he bought in the market. மார்க்­கெட்­டில் வாங்­கிய கரும்பை அவன் அலு­வ­ல­கத்­திற்கு எடுத்து வந்­தான்.

பொங்­கல் இஸ் அ ஃபோர் டே ஃபெஸ்­டி­வல். Pongal is a four-day festival. பொங்­கல் ஒரு நான்கு நாள் பண்­டிகை.

dத ஃபர்ஸ்ட் dடே இஸ் bபோகி வென் ஓல்dட் ஐடெம்ஸ் ஆர் dடிஸ்­கார்d­­டெdட். The first day is Bhogi when old items are discarded. முதல் நாள் போகி என்­ப­து…­­அப்­போது பழைய பொருட்­கள் களைந்­தெ­றி­யப்­ப­டு­கின்­றன.

'' ஆன் பொங்­கல் dடே, ஸ்வீட் பொங்­கல் இஸ் மேdட் இன் அ பாட். ஸம் மில்க் இஸ் போர்dட் இண்டு இட் ஆண்ட் வென் dத மில்க் ரைஸெஸ், மெம்­பர்ஸ் ஆஃப் dத ஃபேமிலி ஷவுட், பொங்­கலோ பொங்­கல்''. On Pongal day, sweet Pongal is made in a pot. Some milk is poured into and when the milk rises, members of the family shout, Pongalo Pongal.

ஆன் பொங்­கல் dடே On Pongal

day = பொங்­கல் நாள் அன்று.

இன் அ pபாட்   in a pot   = ஒரு பானை­யில்.

ஸ்வீட் பொங்­கல் இஸ் மேdட்  sweet Pongal is made = சர்க்­க­ரைப் பொங்­கல் செய்­யப்­ப­டு­கி­றது.

ஸம் மில்க் இஸ் போர்dட் இண்டு இட்   Some milk is poured into it = அதில் கொஞ்­சம் பால் ஊற்­றப்­ப­டு­கி­றது.

ஆண்ட் வென் dத மில்க் ரைஸெஸ் and when the milk rises  = அந்­தப் பால் பொங்கி வரும் போது.

மெம்­பர்ஸ் ஆஃப் த ஃபேமிலி ஷவுட், 'பொங்­கலோ பொங்­கல்' and when the milk rises, members of the family shout, 'Pongalo Pongal' = பால் பொங்கி வரும் போது, குடும்­பத்­தின் அங்­கத்­தி­னர்­கள் 'பொங்­கலோ பொங்­கல்' என்று உரக்­கப் கூவு­வார்­கள்.

'த தர்ட் டே ஆஃப் த பொங்­கல் ஃபெஸ்­டி­வல் இஸ் கால்dட் மாட்­டுப் பொங்­கல்'. The third day of the Pongal festival is called Maattup pongal. பொங்­கல் பண்­டி­கை­யின் மூன்­றாம் நாளுக்கு மாட்­டுப் பொங்­கல் என்று பெயர்.

'ஆன் மாட்­டுப் பொங்­கல் dடே, dத காட்­டில் ஆர் gகிவன் அ bபாத், நைஸ்லி dடெகோ­ரே­டெdட் அண்ட் டேகென் அர­வுண்ட்'. On Maattup Pongal day, the cattle are given a bath, nicely decorated and taken around.

மாட்­டுப் பொங்­கல் அன்று, மாடு­கள் குளிப்­பாட்­டப் பட்டு, நன்­றாக அலங்­க­ரிக்­கப்­பட்டு சுற்றி அழைத்­து­வ­ரப்­ப­டு­கின்­றன.

மாட்­டுப் பொங்­கல் அன்று = ஆன் மாட்­டுப் பொங்­கல் டே On Maattup Pongal day

மாடு­கள் குளிப்­பாட்­டப் பட்டு = த காட்­டில் ஆர் கிவன் அ பாத் the cattle are given a bath

நன்­றாக அலங்­க­ரிக்­கப்­பட்டு = நைஸ்லி டெகோ­ரே­டெdட் nicely decorated

சுற்றி அழைத்­து­வ­ரப்­ப­டு­கின்­றன = (ஆர்) டேகென் அர­வுண்ட் (are) taken around.

மாட்­டுப் பொங்­கல் ஷோஸ் த குலோஸ் பாண்ட்ஸ் பிட்­வீன் த டாமிள்ஸ் அண்ட் தேர் காட்­டில். Maattup Pongal shows the close bonds between the Tamils and their cattle. மாட்­டுப்­பொங்­கல் தமி­ழர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் ஆவி­னத்­திற்­கு­மான நெருங்­கிய பிணைப்­பு­க­ளைக் காட்­டு­கி­றது.

த ஃபோர்த் டே ஆஃப் த பொங்­கல் பெஃஸ்­டி­வல் இஸ் கால்dட்  காணும் பொங்­கல். இட் இஸ் ஆல்ஸோ கால்dட் கணுப் பொங்­கல் ஆர் கன்­னிப் பொங்­கல். The fourth day of the Pongal festival is called Kaanum Pongal. It is also called Kanup pongal or Kannip Pongal. பொங்­கல் பண்­டி­கை­யின் நான்­கா­வது நாள் காணும் பொங்­கல் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. அதைக் கணுப் பொங்­கல் என்­றும் கன்­னிப் பொங்­கல் என்­றும் கூறு­வார்­கள்.

இட் இஸ் அ டைம் ஆஃப் விசி­டிங் ஃபிரெண்ட்ஸ் அண்ட் ரெலெ­டிவ்ஸ் அண்ட் கோயிங் அவுட். It is a time of visiting friends and relatives and going out. அது நண்­பர்­க­ளை­யும் உற­வி­னர்­க­ளை­யும் சென்று சந்­திக்­கும் நாள், வெளியே சுற்­றிப்­பார்க்­கும் நாள்…

இந்­தப் பொங்­கல் பண்­டி­கை­யின் விளை­வாக, ஆங்­கில மாண­வர்­கள் அனை­வ­ருக்­கும் மிக சுல­ப­மாக ஆங்­கில அறிவு வள­ரட்­டும்.
Trending Now: