மின்சாரம் குடிக்காத 'பிரிஜ்!'

22-01-2020 06:06 PM

மின் தட்டுப்பாடு உள்ள வெப்ப நாடுகளில், உணவுப் பொருட்களை பாதுகாக்க குளிர்பதனப் பெட்டிகளை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டு. கடைகளில் வெகு நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், பெட்டியிலுள்ள உணவுப் பொருட்கள் கெட்டு விடும். இதற்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த, 'கூல் இன்பினிடி' தற்போது, 'ஐஸ் வோர்ட் 300' என்ற புதிய குளிர் பதனப் பெட்டியை உருவாக்கியுள்ளது.

இதற்கு, ஆறு மணி நேரம் மின்சாரம் இருந்தால் போதும். அந்த நேரத்திற்குள், பெட்டியைச் சுற்றி நிரப்பப்பட்டுள்ள சாதாரண நீரை ஐஸ் கட்டிகளாக மாற்றி விடும். பிறகு மின்சாரம் இல்லாவிட்டாலும், அடுத்த, 48 மணி நேரத்திற்கு, பெட்டிக்குள் உள்ள உணவுகளை, 6 டிகிரிக்கும் குறைவான குளிர்ச்சியில் வைத்திருக்கும்.

ஆசிய நாடுகளில் ஐஸ் கட்டிகளை வெளியில் வாங்கி வந்து, தெர்மாகோல் பெட்டிகளில் கொட்டி, அதில் நேரடியாகவே உணவுப் பொருட்களை புதைத்து வைப்பர். அதைவிட, 'ஐஸ் வோர்ட் 300' பெட்டியில், நல்ல குளிர்ச்சியை கூடுதல் நேரத்திற்கு பெற முடியும் என்கின்றனர், அதை உரு வாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

உருகும் இமயத்தில் வளரும் செடிகள்!

பொதுவாக, கடல் மட்டத்திலிருந்து, 6 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் செடி, கொடிகள் வளராது என்பது தாவரவியல் உண்மை. ஆனால், அமெரிக்க நாசாவின், 'லேண்ட்சாட்' செயற்கைக் கோள்கள், 1993 முதல், 2018 வரை எடுத்த புவிப் படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு, ஒரு ஆச்சரியம் தென்பட்டது.அந்த புகைப்படங்களில் தெரியும் இமயமலை பகுதிகளில், படிப்படியாக பனி உருகி வருவதையும், அந்த இடங்களில் தாவரங்கள் முளைக்கத் துவங்கி யிருப்பதையும், பிரிட்டனைச் சேர்ந்த எக்செட்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பருவநிலை மாறுபாட்டால், இமயமலையைப் போர்த்தியிருந்த பனிப் படலம் உருகி, நதியாக ஓடுவது அதிகரித்திருக்கிறது. இதனால், சூரிய ஒளி படும் இடங்களில், 5 ஆயிரம் முதல், 5 ஆயிரத்து 500 அடி

களில், அடர் பனிக்குளிரால் தாவரங்கள் வளராமல் இருந்தன. ஆனால், இப்போது அந்த உயரத்தில் வெப்ப நிலை மாறி தாவரங்கள் வளர ஏற்றதாகியிருக்கிறது. இது, பருவநிலை மாற்றத்தின் வருந்தத்தக்க விளைவே தவிர, மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.Trending Now: