டி.வி. பேட்டி: ரஜினிக்காக ‘வாய்ஸ்’ கொடுத்தேன்! – ‘ஊர்வம்பு’ லட்சுமி

22-01-2020 06:04 PM

* “செம்பருத்தி”யில் ப்ரியாராமன் தங்கை ‘வனஜா’வாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார், ‘ஊர்வம்பு’ லட்சுமி.

* சில வருடங்களுக்கு முன், ராஜ் டிவியில் ஒளிபரப்பான ‘ஊர்வம்பு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அதில் ஒரு பெண்ணிடம்  நாட்டு நடப்புகளை நையாண்டி பண்ணி பேசுவார். அந்த நிகழ்ச்சியி லிருந்துதான் வெறும் லட்சுமியாக இருந்த அவர், ‘ஊர்வம்பு’ லட்சுமியானார்.

* மே 17,1983 அவருடைய டேட் ஆப் பெர்த்.

* சென்னை,  அவருக்கு பூர்வீகம்+ வசிப் பிடம்.

* 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர்.

* எடை – 64 கிலோ.

* பியூர் தமிழச்சி.

* பட்டதாரி.

* திருமணமாகி கறிவேப்பிலை மாதிரி ஒரே ஒரு மகன் இருக்கிறான்.

* ‘சூப்பர் சுந்தரி,’ ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

* “வம்சம்,” “அகல்யா” ஆகியவை அவர் ஏற்கனவே நடித்த சீரியல்கள்.

* கே. பாலசந்தர் டைரக்ஷனில் உருவாகி, ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த “பார்த்தாலே பரவசம்” படத்தில் லட்சுமி அறிமுகமானார்.

* “ரெட்டை வாலு,” “வில் அம்பு,” “மன்னவன் வந்தானடி” ஆகியவை அவர் நடித்த மற்ற படங்கள்.

* கண்ணியமாக நடந்து கொள்வது அவரிடமுள்ள பாசிட்டிவான விஷயம்.

*    தனக்கு தெரிந்தவர்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால், அந்த சமயத்தில் அவர்களுக்கு துணை நிற்பது அவருடைய கேரக்டர்.

* இசையில், ஹிப் ஹாப், கிளாசிக்கல் இரண்டையும்  ரசிப்பார்.

* சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகை.

* முன்பு ஒரு சமயம் ஸ்டர்லைட் போராட்டம், அதன் தொடர்பான மரணம் குறித்து ரஜினி வெளியிட்ட கருத்து, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு கண்டனத்துக்குள்ளானார். அப்போது ரஜினி சொன்ன கருத்து என்ன, அது எப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு வீடியோவை லட்சுமி தயாரித்து போஸ்ட் செய்தார். மேலும், ரஜினி சொல்லாததை சொன்னதாக சொன்னவர்களை வன்மையாக கண்டிக்கவும் செய்தார்.

* வெளிர் சிவப்பு, நீலம் ஆகியவை பிடித்த வண்ணங்கள்.

* பழங்களில் சீதாப்பழமும் லேசான புளிப்பு ஆப்பிளும் பிடித்தமானவை.

– இருளாண்டி

Trending Now: