மிரட்ட முடியாத நடிகைக்கு ஒரு பயம்!

22-01-2020 06:03 PM

மும்­பை­யில் நடந்த நிகழ்ச்­சி­யில் நடிகை கங்­கனா ரணா­வத்­தின் அதி­ரடி பேச்சு:

‘‘என்னை யாரா­லும் மிரட்ட முடி­யாது. எந்த மிரட்­ட­லுக்­கும் நான் பயப்­படமாட்­டேன். அதி­கா­ரம் நிறைந்த, சக்­தி­வாய்ந்த நபர் யாரும் இது­வரை என்னை மிரட்­டி­ய­தில்லை.

அதி­கா­ரம், உங்­களை அட்ஜஸ்ட் செய்­ய­வும் சர­ண­டை­யு­மா­றும் மிரட்­டும். அதற்­குப் பணிந்­தால், கோழை­யாகி விடு­வோம். எனவே, அதை எதிர்­கொள்­வது முக்­கி­யம்.

துணிச்­ச­லும், தன்­னம்­பிக்­கை­யும் என்­னு­டைய இயற்கை குணம். அவற்­றின் மூலம்­தான் வெற்­றி­க­ளைச் சாதித்­தி­ருக்­கி­றேன். இந்த வெற்­றி­கள்­தான் எனக்கு அந்­தஸ்து, மரி­யா­தை­யைத் தரு­கின்­றன. ஆனால், இந்த வெற்­றி­கள்­தான் எனக்கு பயத்­தை­யும் ஏற்­ப­டுத்­து­கின்­றன’’.

இப்­படி அதி­ர­டித்த அவ­ரி­டம், ‘உங்­களை யார் எளி­தா­கச் சர­ண­டைய வைக்க முடி­யும்?’ என்று கேட்­கப்­பட்­டது.

கங்­க­னா­வின் பதில் : ‘‘ஒரு­வரை மிக­வும் மதிப்பு வாய்ந்­த­வர் என்று நான் கரு­தி­னால், அவ­ரி­டம் முத­லில் சர­ண­டை­ப­வ­ராக நான்­தான் இருப்­பேன். அதற்கு முன், அவர் மதிப்பு வாய்ந்­த­வர்­தானா என்­பதை பல வகை­களி­லும் சோதித்­துப் பார்ப்­பேன்’’.Trending Now: