பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 26 –1–2020

22-01-2020 05:46 PM

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக் கண்காட்சி நடந்து முடிந்துவிட்டது. இந்த புத்தகக் கண்காட்சியில் கிளம்பிய சர்ச்சைகளைப் பார்த்தேன். முதலில் ஒரு பத்திரிகையாளர் தன்னுடைய புத்தக அரங்கில் அரசாங்கத்திற்கு எதிரான புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதை புத்தகக் கண்காட்சி நடத்தும் பப்பாசி அமைப்பினர் எதிர்ப்பு தெரி வித்தனர். அதற்கு அந்த பத்திரிகையாளர் உடன்படாமல் தகாத வார்த்தைகளை  பயன்படுத்தினார். அதனால் காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

உடனே எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்து அந்த அரங்கில் பேசிய ஒரு எழுத்தாளர் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பேசினார். அதனால் எதிர்ப்பு கிளம்பியது.

பத்திரிகையாளர் கைது, பிறகு எழுத்தாளர் பேச்சுக்கான எதிர்ப்பு இரண்டையும் சில ` முற்போக்கு’ சிந்தனையாளர்கள் கண்டித்திருக்கிறார்கள். கருத்து சுதந்திரத்தை முடக்குவதா? புத்தகக் கண்காட்சி அரங்கம் பல விஷயங்களையும் விவாதிக்கக்கூடிய அறிவுஜீவித் தளமாக இருக்க வேண்டாமா  என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

முதலில் இந்த புத்தகக் கண்காட்சி யைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இந்த  புத்தகக் கண்காட்சி என்பது 42 ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கப் பட்டது. இது துவங்கப் பட்டதன் நோக்கத்தை முதலில் இந்த எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாங்கள் வெளியிடும் புத்தகங் களை பதிப் பாளர்கள் தங்கள் அலுவலகங்களில்தான் ஆரம் பத்தில் விற்பார்கள். உதாரணமாக, அலையன்ஸ் என்பது நூற்றாண்டு பதிப்பகம். ஒரு காலத்தில் அவர்கள் புத்தகங்களை வாங்க வேண்டும் என்றால் மயிலாப்பூரில் உள்ள அவர்கள் கடைக்குத்

தான் போக வேண்டும்.  என்ன புத்தகம் வந்திருக்

கிறது என்பது பலருக்கும் தெரியாது. விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு எந்த தமிழ்ப் பதிப்பாளருக்கும் வசதி இருக்காது. இப்படித்தான் பல பதிப்பகங்களிலும் நடக்கும். வானதி பதிப்பக புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால் தி.நகரிலுள்ள வானதி பதிப்பகத்திற்குத்தான் செல்ல வேண்டும்.  இதையெல்லாம் மனதில் கொண்டு தான் ஆண்டுதோறும் எல்லா பதிப்பாளர்களும் ஒன்றுகூடி ஒரு பொது இடத்தில் புத்தகங் களை மக்கள் பார்வைக்கு வைத்தால், அவர்கள் வாங்கு வதற்கு எளிதாக இருக்கும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம். ஆரம்பத்தில் சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த புத்தகக் கண்காட்சி இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. 800 அரங்குகள், மக்கள் வந்து போக வாகன நிறுத்து

மிடங்கள், புத்தகங்களை வெளியிடவும், பேச்சாளர்கள் நல்ல கருத்துக்களை பேசுவதற்கும் பொது அரங்கம், உணவு  அரங்குகள் என்று பல்வேறு வசதிகளோடு வளர்ந்திருக்கிறது.

 இதை நடத்துவது ‘பப்பாசி’ என்கிற புத்தக வெளியிட்டாளர் சங்கம், இவர்களுக்கென்று  பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  ஆரம்ப காலங்

களில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு துறையில் பொது நூலகம் இருக்கும். செய்தித்

தாள் படிப்பதிலிருந்து நல்ல புத்தகங்கள் வரை இந்த நூலகங்களில் கிடைக்கும். அதனால் அரசாங்கம் பதிப்பகத்தாரிடமிருந்து  சலுகை விலை

யில் மொத்தமாக புத்தகங்கள் வாங்கு வார்கள். பெரும்பாலான பதிப்பகங்களின் ஆயுள் நீடித்திருப் பதற்கு காரணமே  அரசின் கொள்முதல்தான். அதனால் எந்த அரசாங்கம் வந்தாலும் பதிப்பகத் தார் அந்த அரசை சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.

 மேலும், இப்போது புத்தகம் வாசிக்கும் வழக்கம் அடியோடு குறைந்து கொண்டே வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் பல வீடுகளில் ஒரு சின்ன புத்தக அலமாரியாவது இருக்கும். இப்போது  ஒரு சில வீடுகளைத் தவிர, எந்த வீட்டிலும் புத்தகத்திற்கென்று இடம் ஒதுக்குவது கிடையாது.

 இதையெல்லாம் மனதில் கொண்டுதான் பொது இடத்தில் புத்தகங்களை வைப்பதற்காகத்தான் இந்த புத்தகக் கண்காட்சி. மேலும் இந்த கண்காட்சியை நடத்தவேண்டுமென்றால், அந்த அமைப்பாளர்கள் அரசுத் துறையிடம் பல அனுமதிகளைப் பெற வேண்டும். அதனால் அவர்களுக்கு ஏராளமான கட்டுத்திட்டங்கள் இருக்கின்றன.

மக்களுக்கு படிக்கிற ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், அதே சமயம் அரசாங்கத்தின் ஆதரவும் இந்த கண்காட்சிக்கு தேவை என்பதை மனதில் கொண்டுதான் இந்த புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இங்கு வந்துதான் என் சுதந்திர கருத்தை சொல்லுவேன் என்பது இந்த கண்காட்சியின் அடிப்படை நோக்கத்தையே நாசமாக்கும் முயற்சி. இங்கே சர்ச்சையை கிளப்ப விரும்பும் எழுத்தாளர்கள் அவர்கள் எழுதும் புத்தகங்களை கண்காட்சியில் வைக்காம்  இருந்து பாருங்கள் ஒரு பொது இடத்திற்கு வரும்போது அந்த இடத்தின் கட்டுத்திட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்த அடிப்படை பொறுப்பில்லாதவர்களுக்கு  என்ன கருத்து இருந்து விட முடியும்?  பொறுப்பற்றவர்களின் கருத்து என்பது பொது ஜன விரோத எண்ணங்களாகவே கொள்ள வேண்டும்.

ரசித்தது !

சில புத்தகங்கள் வாங்கி அலமாரியில் வைத்து

விட்டால், புதிய புத்தகங்கள் வந்தவுடன் முன்பு வாங்கிய புத்தகங்கள் மறந்து போகின்றன. தற்செயலாக அந்த புத்தகம் கண்ணில் பட்டது. எழுத்தாளர் ஆ. மாதவன் எழுதி 2015ம் வருடம் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற ‘இலக்கிய சுவடுகள்’ (திறனாய்வுக் கட்டுரைகள் )  தொகுப்பை படித்து முடிக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று. அத்தனை ஆழம். இந்த சேகரிப்பிற்காக ஆ. மாதவன் செய்திருக்கும் உழைப்பு என்பது அபாரமானது. நாவல் இலக்கியம் என்பது மலிந்து கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல நாவல்கள் வரவதுண்டு.

ஆனால், அந்த நாவலுக்கு ஏதாவது விருது கிடைத்தால் மட்டுமே அந்த நாவலும், எழுத்தாளரும் பிரபலமடைகிறார்கள். இந்த ஒரு காலகட்டத்தில்  ஆ. மாதவனின் ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள். கட்டுரையின் தலைப்பு இரண்டு மொழிகளின் – முதல் நாவல்கள்.

தமிழ் மொழியில் முதல் நாவல் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதி 1879ல் வெளிவந்த ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பது. மலையாள மொழியில் முதல் நாவல் ‘ஒய்யாரத்து சந்து மேனவன்’ என்பவர் எழுதி 1889ல் வெளிவந்த  ‘இந்து லேகா’ தமிழிலும், மலையாளத்திலும் இந்த கால

கட்டங்களுக்கு முன்னதாகவும், சில புதினங்கள் வந்துள்ளனவென்றும் அதனால் இதுவல்ல முதன்மை என்ற முன்னணி  வரிசையில் வைக்கப்பட வேண்டி யது என்றெல்லாமான வேறுபட்ட கருத்துக்கள் ஒருபுறமிருந்தாலும், இலக்கிய உலகம் இன்று பரவலாக ஒப்புக்கொண்டுள்ள,` பிரதாப முதலியார் சரித்திரம்’.‘இந்து லேகா’ இவ்விரண்டு நாவல்களையும் பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

 வங்க மொழியில் – சரத் சந்திரர் எழுதிய  ‘துர்கேச நந்தினி’தான் முழு வடிவமைப்பையும் கொண்ட முதல் இந்திய நாவல் என்பார்கள். நாவல் என்பது ஒரு வகையில் ஆங்கில நாகரீகமும் அதன் மொழி தாக்கமும் தந்த அழுத்தத்தின் காரணமாக நம் மொழிகளிலும் வந்து சேர்ந்திட்ட புதுமை என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

இந்திய இலக்கியங்கள் – நமது பண்பாடு, உயரிய கலாசாரம், ஆழ்ந்த நாகரீகம் இவற்றையெல்லாம் உட்கொண்ட, வேதம், இதிகாசங்கள், காப்பியங்கள் என்றெல்லாம் அகண்டாகாரமானது. பொழுது போக்கிற்காகவும், அதே நேரத்தில் நீதிநெறிகளைப் புகட்டுவதற்காகவும் பிற்காலத்தில் பஞ்சதந்திர கதைகள் முதலியவை தோன்றின. தமிழில் சங்ககால இலக்கியச் செல்வங்கள் தொடங்கி பிற்காலத்தில் பல்வேறு வகையிலான சிற்றிலக்கியங்கள் யாவும் செய்யுள் முறையில் அடங்கியனவாகவே இருந்தன. மலையாள மொழியிலும், சமஸ்கிருத காவியங்களின் மொழி மாற்ற சிருஷ்டிகள் தோன்றின.  ‘சண்டச ராமாயணம்’ ; துள்ளல் கதை வகைகள், கிளிப் பாட்டுக்கள் எல்லாமே செய்யுள் வகைப் பட்டவையாகவே இருந்தன.

 இந்த நிலையில்தான் மேற்கத்திய நாகரீகத்தையும் ஆங்கில பாஷையையும் சுமந்து கொண்டு ஆங்கி லேயன் நம்மை ஆதிபத்தியம் கொள்ள வந்தான். அவனது ஆதிபத்தியச் சிறுமையில் – நமக்குக் கிடைத்த ஒரு பெருமை உரைநடையில் – அதாவது பாட்டு மொழியை விட்டு பேசும் மொழி வழியில், நாவல் என்ற இலக்கிய பாணி.

`பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆங்கிலேய துரைத்தன அரசாட்சியில் – நீதித்துறையில் நீதிபதியாக பணி புரிந்தவர். 1826 முதல் 1889 வரையிலானது இவரது காலகட்டம். ஏறத்தாழ அறுபத்திமூன்று ஆண்டுகால வாழ்வு கொண்ட இவர், ஆங்கிலக் கல்வியில் மிகுந்த மேம்பாடு கொண்டவராக இருந்தார். நீதிபதியாக பணிபுரிந்த காலங்களில் மாறுபட்ட குணநலன்கள் கொண்ட பல்வேறு மனிதர்களையும், அவர்களது சிறப்பு, சிறுமை போன்றவற்றையெல்லாம் கண்டு, அறிந்து, ஒரு பக்குவ நிலை எய்திருந்தார். அந்த பண்பட்ட அறிவுத்திண்மை அவருக்கு தமிழில் உரைநடை நாவல் என்ற இலக்கிய சாளரம் அமைந்திட உறுதுணையாக இருந்தது. அதுபற்றி ஆய்வு நூலொன்று இவ்வாறு சொல்கிறது.

 இந்த புத்தகத்தில்தான் எத்தனை அரிய தகவல்கள். இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க நினைக்கும் எல்லோருக்குமே இந்த புத்தகம் ஒரு கையேடு. ஆ. மாதவன் போன்ற சிறந்த நாவலாசிரியரின் இந்த பணிக்கு அவருக்கு கிடைத்த ‘சாகித்ய அகாடமி’ விருது பொருத்தமானதே.

***Trending Now: