சேவை தவறல்ல...

22-01-2020 03:40 PM

கோவை, சபர்­பன் மேல்­நி­லைப் பள்­ளி­யில், 1987ல், 9ம் வகுப்பு படித்­த­போது, வகுப்­பா­சி­ரி­ய­ராக இருந்­த­வர் தங்­கம்.

அடிக்­கடி மதிய உணவு வாங்கி வர சொல்­வார்; வீட்­டில் சிறிய வேலை­க­ளை­யும் செய்ய சொல்­வார். அது எனக்கு பிடிக்­க­வில்லை.

சலிப்­ப­டைந்து என் தந்­தை­யி­டம் கூறி­ய­போது, 'ஆசி­ரி­ய­ருக்கு உரிய பணி­வி­டை­களை செய்­வது உன் கடமை. முற்­கா­லத்­தில் நாட்­டின் இள­வ­ர­சர்­களே, குரு­வின் ஆடை­களை துவைத்து, சேவை செய்து, கலை­கள் பயின்­ற­தாக வர­லாறே உள்­ளதே...' என்­றார்.

பின், எவ்­வித சலிப்­பும் இன்றி, ஆசி­ரி­ய­ருக்கு உதவ துவங்­கி­னேன். அவர் குடும்­பத்­தில் ஒரு­வன் ஆனேன்.

பாடத்­தில் வரும் சந்­தே­கங்­களை, அவ்­வப்­போது கேட்டு தீர்க்க முடிந்­தது. இதன்­மூ­லம், தேர்­வு­க­ளில் நல்ல மதிப்­பெண் பெற்­றேன். கல்­லுா­ரி­யில் சேர்­வ­தற்­கும் நல் வழி­காட்­டி­னார். என் பள்ளி, கல்­லுாரி நாட்­கள் சிறப்­பாக அமைந்­தன.

இப்­போது, என் வயது, 45; வாழ்­வின் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும், அந்த ஆசி­ரி­யரை நன்­றி­யு­டன் நினைத்­துக் கொள்­கி­றேன்.

–-- சித. பழ­னி­யப்­பன், மதுரை.Trending Now: