தாய்மையே அன்பு!

22-01-2020 03:39 PM

சிவ­கங்கை மாவட்­டம், தேவ­கோட்டை, புனித மரி­யன்னை பெண்­கள் மேல்­நி­லைப் பள்­ளி­யில், 2017ல், 10ம் வகுப்பு படித்­தேன்.

அந்த பள்ளி வளா­கம், புத்­தக கல்­வி­யைத் தாண்டி, வாழ்க்­கை­யை­யும் கற்­றுத் தந்­தது.

ஆண்டு பொதுத்­தேர்வு நெருங்­கிக் கொண்­டி­ருந்த போது, என் பேனாக்­கள் அனைத்­தும் திருடு போயின.

விடு­தி­யில் தங்­கி­யி­ருந்த எனக்கு, புதிய பேனா வாங்க, போதிய அவ­கா­சம் இல்­லா­த­தால், கலங்கி நின்­றேன். இந்த விவ­ரம் என் வகுப்பு ஆசி­ரியை ஆட்­லின் கவ­னத்­துக்கு சென்­றது.

என்னை அழைத்­த­வர், 'பெண் பிள்­ளை­கள் எப்­போ­தும் கண் கலங்க கூடாது; தன்­னம்­பிக்­கை­யு­டன் வாழ்­வில் வரும் பிரச்­னை­களை எதிர் கொள்ள பழக வேண்­டும்...' என்று அறி­வு­ரைத்து, ஒரு பேனாவை கொடுத்­தார். என்னை தேற்­றி­ய­து­டன், 'தைரி­ய­மாக தேர்வை எதிர்­கொள்...' என்று, நம்­பிக்கை ஊட்­டி­னார்.

அவ­ரது செயல் தாயின் அன்­புக்கு இணை­யாக இருந்­த­தால் நெகிழ்ந்­தேன்.

அவர் கூறி­யது எப்­போ­தும் உத­வும் அமுத மொழி. அது, என் வாழ்க்­கையை வழி நடத்­தும் என, நம்­பிக்கை பிறந்­தது. அவ­ரது பண்­புக்­கும், அன்­புக்­கும் தலை­வ­ணங்­கு­கி­றேன்.

–- ஜா.ஜெனிசா, சிவ­கங்கை.Trending Now: