காலம் பிறக்கிறது...

22-01-2020 03:38 PM

விழுப்­பு­ரம் மாவட்­டம், திருக்­கோ­வி­லுார், விளந்தை, அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1967ல், 9ம் வகுப்பு படித்த போது, ஆண்டு விழா நிகழ்ச்­சி­யில் குடு­கு­டுப்­பைக்­கா­ரன் வேடத்­தில் நடித்­தேன்.

தலைமை ஆசி­ரி­யர் சூரி­ய­மூர்த்தி, மேடை­யில் அமர்ந்­தி­ருந்­தார். அவர் சிதம்­ப­ரத்தை சேர்ந்­த­வர். அவ­ரது மனைவி அப்­போது கர்ப்­ப­மாக இருந்­தார். அதை நினை­வில் கொண்டு, 'பெரிய வாத்­தி­யா­ருக்கு ஆண் வாரிசு பிறக்­கப் போகுது... நல்ல காலம் பொறக்­குது... நல்ல காலம் பொறக்­குது...' என்று, குறி சொல்­வது போல் நடித்­தேன்.

பலத்த கைத்­தட்­ட­லு­டன் சிரித்து ரசித்­த­னர்.

நான் சொன்­னது போல், ஆண் குழந்தை பிறந்­தது. மகிழ்ந்த தலை­மை­யா­சி­ரி­யர், இறை வணக்க கூட்­டத்­தில், கைத்­தறி துண்டு, கற்­றல் தொடர்­பான புத்­த­கங்­களை பரி­சாக வழங்­கி­னார்.

அவர் வழங்­கிய புத்­தக வழி­காட்­டு­த­லு­டன், ஆங்­கி­லம் கற்­றேன். திருக்­கு­ற­ளில் அறத்தை பயின்­றேன்.

அதே பள்­ளி­யில், சத்­து­ணவு பொறுப்­பா­ள­ராக பணி செய்து ஓய்வு பெற்­றேன்.

எனக்கு இப்­போது, 71 வய­தா­கி­றது; அந்த தலைமை ஆசி­ரி­யர் பெயரை, அவர் நினை­வாக என் தங்கை மக­னுக்கு சூட்­டி­யுள்­ளேன்.

-–- சி.ஆதி­மூ­லம், விழுப்­பு­ரம்.Trending Now: