ஆப்பிள் பணியாரம்!

22-01-2020 03:34 PM

தேவையான பொருட்கள்:

சிவப்பு ஆப்பிள் - 1

இட்லி மாவு - 1 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிளை, தோல் நீக்கி நறுக்கவும்; அத்துடன், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து, இட்லி மாவுடன் சேர்க்கவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும்.

குழிபணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை ஊற்றி, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான, 'ஆப்பிள் பணியாரம்' தயார். வித்தியாசமாக இருக்கும். சத்துக்கள் நிறைந்தது. சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.

- – எஸ்.ப்ரியம்வதா, சென்னை.



Trending Now: