‘மொக்க’ ஜோக்ஸ்!

22-01-2020 03:30 PM


‘‘மன்னரை புகழ்ந்து பாடி, பரிசு பெறவே வந்துள்ளேன்...’’

‘‘சத்தம் போடாதீர்... மன்னரும், புலவர் வேடத்தில்தான், எதிரி நாட்டுக்கு சென்றுள்ளார்... இங்கு, கஜானா காலி!’’

– அழகு, கன்னியாகுமரி

‘‘மன்னா... தங்கள் வாளுக்கு இனி வேலையே இல்லை...’’

‘‘ஏன்... எதிரி போருக்கு வர மாட்டானா?’’

‘‘அதில்லை... மகாராணி காய்கறி வெட்டும் கருவி வாங்கிட்டார்!’’

– பர்வீன், பொட்டல்புதுார்.

‘‘ஆப்ரேஷன் தியேட்டடர்ல, மயக்க மருத்துவருக்கு பதிலா, வித்வான் உட்கார்ந்திருக்காரே ஏன்?’’

‘‘அதுவா.... அவர் பாட்டுக்கு  மயங்காதவர் யாரும் இல்லையாம்!’’

– குமார், மார்த்தாண்டம்.

‘‘அங்க ஜிம் வச்சிருக்க்கிறவருக்கு தைரியம் அதிகம்...’’

‘‘எதை வச்சு சொல்ற?’’

‘‘சிபிஐ அதிகாரிகளுக்கு சுவர் ஏறி குதிக்க பயிற்சி அளிக்கப்படும்னு போர்டு வச்சிருக்காரே!’’

– சந்திரன், கழுகுமலை.Trending Now: