அப்பம் ஒன்று ஆள் இரண்டு!

22-01-2020 03:26 PM

கல்­லுப்­பட்டி என்ற ஊரில், மனை­வி­யு­டன் வசித்து வந்­தான் சேக­ரன். இரு­வ­ரும் கரு­மி­கள். சம்­பா­திக்­கும் பணத்­தில், சில்­ல­ரைக் காசு இருந்­தால் தான் செலவு செய்து சாப்­பி­டு­வர். ரூபாய் நோட்­டுக்­கள் முழு­வ­தை­யும், அப்­ப­டியே சேமித்து வைத்­துக் கொள்­வர்.

ஒரு நாள் -

கையி­லி­ருந்த சில்­ல­றைக் காசுக்கு, ஒரு அப்­பம் தான் சுட முடிந்­தது. இரண்டு பேரும், ஒரு அப்­பத்தை எப்­படி சாப்­பி­டு­வது... ஒரு­வர் தான் சாப்­பிட முடி­யும். 'யார் சாப்­பி­டு­வது...' என்ற சண்டை ஏற்­பட்­டது.

சேக­ரன், 'நான் தான் சம்­பா­தித்து பணம் கொண்டு வந்­தேன்; அத­னால், சாப்­பி­டும் உரிமை எனக்­குத்­தான்...' என்­றான்.

'இல்லை... இல்லை... வீட்டு வேலை முழு­வ­தை­யும் செய்­கி­றேன்; இந்த அப்­பத்­தை­யும் சுட்­டேன்; அத­னால், நான் தான் சாப்­பி­டு­வேன்...' என்­றாள் மனைவி.

இவ்­வாறு சண்டை நடந்த போது, உற­வி­னர் ஒரு­வர் வந்­தார். வழக்கை கேட்­ட­வர், 'இந்த அப்­பத்­தில், இரு­வ­ருக்­கும் உரிமை உள்­ளது; நான் சொன்­ன­படி செய்­யுங்­கள்; அதில், வெற்றி பெற்­ற­வ­ருக்கே அப்­பம்...' என்­றார்.

'என்ன செய்ய வேண்­டும்...' என, ஆவ­லாக கேட்­ட­னர்.

'இரு­வ­ரும் கண்ணை மூடி நன்­றாக துாங்க வேண்­டும்; யார், பின்­னால் எழுந்­தி­ருக்­கி­றாரோ, அவ­ருக்கே உரி­யது இந்த அப்­பம்...' என்­றார்.

இரு­வ­ரும் கண்ணை மூடி­ய­தும், சந்­த­டி­யில்­லா­மல், அந்த அப்­பத்தை எடுத்து போய் விட்­டார், உற­வி­னர்.

மறு­நாள் காலை -

கண­வ­னும், மனை­வி­யும் படுக்­கையை விட்டு எழவே இல்லை. முத­லில் எழுந்து விட்­டால், அப்­பம் கிடைக்­கா­மல் போய் விடுமே என்ற அச்­சம் தான். அன்று மாலை­யும் கடந்­தது.

மறு­நாள் விடிந்­தது. அண்டை அய­லா­ருக்கு சந்­தே­கம் வர, 'இரண்டு நாளாக எழவே இல்­லையே... இறந்து தான் போய் விட்­ட­னரோ' என்று எண்­ணி­னர்.

வீட்­டுக்­குள் சென்று எழுப்­பி­னர்; இரு­வ­ரும் அசை­ய­வில்லை. இறந்து விட்­ட­தாக முடிவு செய்து, இறுதி சடங்­குக்­கான ஏற்­பா­டு­களை செய்­த­னர். உடல்­களை சுடு­காட்­டிற்கு எடுத்து சென்று, நெருப்பு மூட்­டி­னர்.

நெருப்பு எரிந்து, முத­லில் கண­வன் காலைச் சுட்­டது. சூடு பொறுக்க முடி­யா­மல் எழுந்து, 'ஐயோ... அப்­பம் போனதே...' என்று ஓல­மிட்­ட­ப­டியே ஓடி­னான்.

கண­வன் எழுந்­தது தெரிந்­த­தும், 'அப்­பம் எனக்கு தான்...' என்று கூவி­ய­ப­டியே எழுந்து ஓடி­னாள் மனைவி.

ஊரா­ருக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை; வியப்­பு­டன் இரு­வ­ரை­யும் பார்த்து நின்­ற­னர். அவர்­க­ளுக்கு போட்டி வைத்த உற­வி­னர், நடந்­த­வற்றை விவ­ர­மாக விளக்­கி­னார்; ஊரார் சிரித்­த­னர்.

தளிர்­களே... உங்­க­ளுக்­கும் சிரிப்பு வருதா... இப்­படி ஒரு கஞ்­சத்­த­ன­மான வாழ்க்கை தேவை தானா என்­பதை, முடிவு செய்து கொள்­ளுங்­கள்.Trending Now: