துணுக்குச் செய்தி!

22-01-2020 03:26 PM

முப்பரிமாண வெளியில் ஒரு மேற்பரப்பு பக்கமும், ஒரு எல்லையும் கொண்டது, மோபியஸ் நாடா. கசகஸ்தானின் தேசிய நூலகத்தை இந்த மோபியஸ் நாடா வடிவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது பிக் எனும் ஒரு கட்டட நிறுவனம். நூலகத்திற்குள் பாதை மேலும் கீழுமாக சுருள்வதுபோல அமைக்கப்பட இருக்கிறது. நூலகத்தின் சுவர், கூரை, தரை என, அனைத்துமே இங்கே ஒன்று தான். என்ன! நூலகத்திற்கு வருபவர்கள், புத்தகம் படிப்பதில் கவனத்தைச் செலுத்துவார்களா அல்லது கட்டடத்தைப் பார்த்து வியந்தபடியே இருப்பார்களா என்பது தான் சந்தேகம்.Trending Now: