பாட்டிமார் சொன்ன கதைகள் – 252 – சுதாங்கன்

22-01-2020 03:21 PM

போஜன பிரியன்!

சுபத்­தி­ரை­யை போன்ற கட்­ட­ழகி அர்ச்­சு­னனை ஒத்த வீர­னுக்கே அணி­க­லம். மேலும் அவன் நமக்கு அத்தை மகன் அல்­லவா?’ என்று சொன்­னார் கிருஷ்­ணர்.

கிருஷ்­ணன் சொன்­னதை யாதவ வீரர்­கள் ஒப்­புக்­கொண்­டார்­கள். பிறகு பல­ரா­மர் முத­லான வீரர்­க­ளெல்­லோ­ரும் சுபத்­தி­ரைக்கு சீர் கொடுக்­க­வேண்­டு­மென்று விசே­ஷ­மான பொருட்­களை எடுத்­துக் கொண்டு அர்ஜுனனை தொடர்ந்து சென்­றார்­கள்.

அர்ஜுனன் சுபத்­தி­ரை­யோடு தன் ஊருக்­குத் திரும்­பி­னான். குந்­தி­யும் திரவு­ப­தி­யும் சுபத்­தி­ரையை ஆசீர்­வ­தித்­தார்­கள். அர்ஜுனன் தாயா­ருக்­கும் சகோ­த­ரர்­க­ளுக்­கும் தீர்த்த யாத்­திரை கதை­யைச் சொன்­னான். அவர்­கள் அர்ச்­சு­ன­னு­ டைய வீரத்­தை­யும் சுபத்­தி­ரை­யின் அழ­கை­யும் குணத்­தை­யும் பெரி­தும் பாராட்­டி­னார்­கள்.

`கிருஷ்ணா! என்ன தாபம்! அக்னி கொளுத்­து­கி­றதே! நாம் யமு­னைக் கரைக்­குப் போய் விளை­யா­டி­விட்டு வரு­வோம்’ என்­றான் அர்ஜுனன். தன் உயிர்த்­தோ­ழ­ரான கிருஷ்­ண­ரைப் பார்த்து, `வேண்­டி­ய­வர்­க­ளு­டன் அங்கே போய் வர­லாம் என்­பது எனக்கு இஷ்­டம்­தான் ‘ என்­றார் கிருஷ்ண பக­வான்.

யமு­னைக் கரை­யில் பூந்­தோட்­டங்­க ­ளோடு கூடிய காடு­க­ளைப் பார்த்­துக்­கொண்டே, ஆயு­த­பா­ணி­க­ளா­கக் காண்­டவ வனத்­திலே புகுந்­தார்­கள். அந்த வனத்­தைச் சுற்­றிப் பார்த்­து­விட்டு யமுனை நதியை அடைந்­தார்­கள். நதிக்­க­ரை­யில் கிருஷ்­ணார்ச்­சு­னர்­க­ளும் அவர்­க­ளு­டைய பந்­து­மித்­தி­ரர்­க­ளும் தங்­கள் தங்­கள் விருப்­பப்­படி விளை­யாடிக் கொண்­டி­ ருந்­தார்­கள்.

கிருஷ்­ண­னும் அர்ஜுனனும் தனி­யாக ஒர் இடத்­தி­லி­ருந்து முன் நடந்த விஷ­யங்­க­ளை­யும் மற்­று­முள்ள விஷ­யங்­க­ளை­யும் பேசிக்­கொண்­டி­ருந்­தார்­கள். அந்த சம­யம் ஒரு பிரா­ம­ணன் வந்­தான். `அடடா, எப்­பேர்ப்­பட்ட பிரா­ம­ணன்! ஏதோ ஒரு பெரிய மரம் எரி­யுது போலத் தோன்­று­கி­றது அவன் தோற்­றம். உருக்கி ஓட­விட்ட தங்­கம் போல மின்­னு­கி­றது தேக­காந்தி. அவன் விரைந்து வரும்­போதே! தாடை­யும் மீசை­யும் செம்­பட்­டை­யா­கப் பிர­கா­சிப்­பது, அக்­கினி சிகை­கள்­தான் அப்­படி ஜொலிக்­கின்ற்­னவோ என்று தோன்­று­கி­றது!’ என்று வியந்து போனான் அர்ஜுனன்.

`ஐயோ! என்ன தாபம்! என்ன பசி!’ என்று சொல்­லிக்­கொண்டே வந்­தான் பிரா­ம­ணன். பிறகு சொன்­னான், ` நான் போஜ­னப் பிரி­யன்; அதிக போஜ­னம் செய்­ப­வன். எனக்கு உணவு கொடுங்­கள்’

இந்­தப் பிரா­ம­ண­னுக்கு எந்த வித­மான ஆகா­ரம் சித்­தஞ் செய்­ய­லா­மென்று கிருஷ்ணனும் அர்ஜுனனும் யோசித்­திக்­கொண்­டி­ருக்­கும்­போதே அவன் ` எனக்­குத் தகு­தி­யான ஆகா­ரம் கொடுங்­கள். பருப்பு, வடை, பாயாச  வகை­கள் வேண்­டாம். அந்­தக் காண்­டவ வனத்­தையே உண­வா­கக் கொடுங்­கள் ‘ என்று வேண்­டி­னான். அர்ஜுனனுக்கு பளி­சென்று சிரிப்பு வந்­தது

` இந்த வினோ­த­மான பைத்­தி­யக்­கா­ரன் யாரோ?’ என்று அவன் யோசிக்­கும்­போதே அவன் சொன்­னான் ` ஒரு பெரிய யாகத்­தில் நெய்­யைக் குடித்து குடித்து எனக்­குப் பசி மந்­தித்­துப் போய்­விட்­டது. ஒளி குறைந்து வாட்­ட­ம­டைந்­தேன் வலிமை இழந்­தேன் அப்­போது பிர­ம­தே­வன் வந்து என் தளர்ச்­சிக்­கா­க­வும் அரோ­ச­கத்­திற்­கா­க­வும் இரங்கி, `நீ துஷ்­டர்­க ­ளும் துஷ்­டப் பிரா­ணி­க­ளும் நிறைந்த காண்­டவ வனத்தை பட்­சித்து விட்­டால் இந்த நோயி­லி­ருந்து விடு­ப­டு­வாய் ‘’ என்­றார். நான் மிகுந்த வேகத்­து­டன் காற்­றால் தூண்­டப்­பட்டு காண்­டவ வனத்தை எரிக்­கத் தொடங்­கி­னேன் ஆனால் ஏழு முறை திரும்ப திரும்ப அவிக்­கப்­பட்­டேன். இந்­தி­ர­னும் மழை பெய்­வித்து அணைத்­து­வி­டு­கி­றான். எனக்கு இப்­போது பசி­யும் அதி­க­மா­யி­ருக்­கி­றது.’ இது கேட்ட அர்ஜுனன் திகைத்­துப் போனான். கிருஷ்ண பக­வான் புன்­ன­கை­யோ `` இவன் தான் அக்னி பக­வான்‘ என்று அர்ஜுனனிடம் சொன்­னான்.

பிறகு அக்­கினி பக­வான், அர்ச்­சு­ன­னுக்­குத் தேர் முத­லி­ய­வற்­றைக் கொடுத்­தான். காண்­டி­வம் என்ற ஒரு வில்­லை­யும் கொடுத்­தான் அர்ச்­சு­னன் அந்த வில்­லில் நாண் பூட்டி உற்­சா­கத்­தோடு அக்­கி­னிக்கு உத­வி­யா­கக் காண்­ட­வ­னத்­திலே நெருப்­பைக் கக்­கும் அஸ்­தி­ரங்­க­ளைப் பிர­யோ­கிக்­கச் சித்­த­மா­னான்.

பிரா­மண ரூபம் திடீ­ரென்று மறைந்­து­விட்­டது ஏழு நாக்­கு­கள் போன்ற ஜ்வாலை­க­ளோடு அக்­கினி காண்­டவ வனத்­தில் பற்­றிக் கொண்­டது. கிருஷ்­ணார்ச்­சு­னர்­கள் காட்­டிற்கு இரு­பு­ற­மும் இர­தங்­களை விரை­வா­கச் செலுத்­திக் கொண்டு பாணங்­களை பிர­யொ­கித்த வண்­ண­மா­யி­ருந்­தார்­கள். பயங்­க­ர­மான் கூச்­சல்­கள் இடி முழுக்­கம் போலக் கிளம்­பின. பெரிய ஜ்வாலை­கள் ஆகா­யத்­தில் கிளம்­பின.

தேவேந்­தி­ரன் மேகங்­களை ஏவிக் காண்­டவ வனத்­துக்கு நேராக வானத்தை மறைத்து மழை பொழி­யச் செய்­தான். மேலும் மேலும் மேகங்­க­ளை­யும் மகா மேகங்­க­ளை­யும் ஏவிக்­கொண்­டே­யி­ருந்­தான். எங்கே பார்த்­தா­லும் இடி­யும் மின்­ன­லும் மழைத் தாரை­க­ளும் புகை­யும் அக்­கினி ஜ்வாலை­க­ளும்­தான்.

இந்­தி­ரன் பெய்­வித்த மழையை அர்ச்­சு­னன் தன் அம்பு மழை­க­ளால் தடுத்­தான். இந்­தி­ரன் கல் மழை­க­ளும் பொழிந்து பார்த்­தான். பனி சந்­தி­ரனை மறைப்­பது போல் அர்ஜுனனுடைய பாணங்­கள் காண்­டவ வனத்­தை­யெ­லாம் மறைத்­து­விட்­டன. பெரிய கோஷத்­தோடு கூடிய காற்று ஆகா­யத்­தி­லி­ருந்து சமுத்­தி­ரங்­க­ளை­யெல்­லாம் பொழிந்து கொண்­டே­யி­ருந்­தது. ஆனால் அர்ஜுனன் பாணங்­க­ளால் அந்த மழை­யும் வற்றி மின்­னல்­க­ளும் மறைந்து வானத்­தி­லுள்ள கலக்­க­மும் இரு­ளும் நீங்­கிப் போயின. சூரிய மண்­ட­லம் வழக்­கம் போல பிர­கா­சிக்க, காற்­றும் அனு­கூ­ல­மாக வீச ஒரே அக்­கி­னிக் கடல் காடெங்­கும் பரவி பச்சை  மரங்­க­ளை­யும் பஸ்­பம் செய்­து­விட்­டது. கொடிய ராட்­ச­சர்­க­ளை­யும் பல்­வேறு துஷ்­டப் பிரா­ணி­க­ளை­யும் வம்ச நாசம் செய்­து­விட்­டது.

கடை­சி­யா­கத் தேவேந்­தி­ரனே வஜ்­ரா­யு­தத்தை ஓங்­கிக்  கொண்டு வெள்ளை யானை மேல் ஏறி வந்­தான். அவ­னுக்கு உத­வி­யாக யம­னும் கால­தண்­டத்தை எடுத்து வந்­தான். ஆனால் புரு­ஷோத்­த­மர்­க­ளான கிருஷ்­ணார்ச்­சு­ னர்­கள் கொஞ்­ச­மும் பய­மின்றி அம்­பு­க­ளைப் பிர­யோ­கித்த வண்­ண­மி­ருந்­தார்­கள். தேவேந்­தி­ர­னா­லும் தேவர்­க­ளா­லும் அவர்­களை ஜெயிக்­க­வும் முடி­ய­வில்லை.Trending Now: