21-01-2020 03:45 PM
நடிகர்கள் : வினய் ராய், கே.எஸ்.ரவிக்குமார், ப்ரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், சத்யன் சிவகுமார், லஷ்மி ராய், சாம்ஸ், கீதா சிங் மற்றும் பலர். இசை : கே, ஒளிப்பதிவு : செல்லத்துரை, எடிட்டிங் : பி. சாய்சுரேஷ், தயாரிப்பு : எஸ். சிவகுமார், ஆர். சிவகுமார், திரைக்கதை, இயக்கம் : பி.டி. செல்வகுமார்.
இனிய முகூர்த்த வேளையில் மண மகனை காணாமல் திருமணமண்டபத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. மாப்பிள்ளை குருவை (சாம்ஸ்) பற்றி விசாரிப்பதற்காக மணமகள் குருவின் நண்பன் பில்லாவுக்கு (வினய் ராய்) போன் செய்கிறாள். குருவை தேடியலையும் பில்லாவின் பார்வையில் பிளாஷ்பேக் கண்முன் விரிகிறது.
அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து தப்புவதற்காக பில்லா மற்றும் நண்பர்கள் ரங்கா (சத்யன் சிவகுமார்), கோச்சடையான் (அரவிந்த் ஆகாஷ்) ஆகியோர் பேச்சிலர்களாக வாழ முடிவெடுக்கிறார்கள். தங்களது நெருங்கிய நன்பன் குருவையும் அழைக்க அனைவருமாக கொண்டாட்டத்திற்காக பெங்களூருக்கு செல்கிறார்கள். தங்களுக்கு திருமணமானதை மறைத்து பேச்சிலர்களாக வாழ்வதென்று சபதம் எடுக்கிறார்கள். கல்லுாரியில் தங்களுடன் படித்து தற்போது கோடீஸ்வரனாக இருக்கும் சார்லஸை சந்திக்கிறார்கள். கல்லூரியில் இவர்களால் கேலிக்கு உள்ளாகிய சார்லஸ் முதலில் இவர்களை பார்த்து மிரண்டாலும் பின்னர் அவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டு பார்ட்டிக்கு அழைத்துச் செல்கிறான். பார்ட்டியில் மாடல் சஞ்சனாவை (லஷ்மி ராய்) சந்திக்கும் நன்பர்கள் அவளுடன் நடனமாடுகிறார்கள். சார்லஸின் பங்களாவில் தங்கும் நன்பர்கள் அங்கு சஞ்சனாவை பார்த்து அவளுடன் நெருங்கிப்பழக தனித்தனியாக முயற்சிக்கிறார்கள்.
திருமணத்திற்கு சில நாள்களே உள்ள நிலையில் குரு தனது திரும ணத்திற்காக பேச்சிலர் பார்ட்டி தருகிறான். அடுத்த நாள் காலை போதை தெளிந்த நிலையில் போலிஸ் உடையில் இருக்கும் பில்லா, ரங்கா மற்றும் கோச்சடையான் டிஎஸ்பி பல்ராம் நாயுடுவிடம் (கே.எஸ். ரவிக்குமார்) மாட்டுகிறார்கள். மனைவியை பிரியாமல் காதலோடு சேர்ந்து வாழுமாறு நன்பர்களுக்கு அறிவுரை கூறி அனுப்புகிறார் பல்ராம் நாயுடு. போதையில் செய்த அட்டகாசங்கள் மறந்த நிலையில் மூவரும் தங்களது நண்பன் குருவை தேடுகிறார்கள். கொடவுன் ஒன்றில் சஞ்சனாவை கேங்க்ஸ்டராக பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.
குருவை கடத்தி வைத்திருக்கும் சஞ்சனா, காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மூவரும் தன்னிடம் கெஞ்சியதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுகிறாள். வீடியோ வெளியாகாமல் இருப்பதற்கும் திருமண மாப்பிள்ளை குருவை ரிலீஸ் செய்வதற்கும் இரண்டு கோடி ரூபாய் கேட்கிறாள். பெரும்போராட்டத்திற்கு பிறகு நன்பர்கள் மூவரும் பணத்தைக் கொடுத்து குருவை மீட்கிறார்கள். பெங்களூருவிலிருந்து திரும்பும் நண்பர்கள் இனி எப்போதும் சஞ்சனாவை சந்திப்பதில்லை என்றும் தங்கள் மனைவிகளின் அருமை புரிந்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்றும் உறுதி எடுத்துக்கொள்கி றார்கள்.
முகூர்த்த நேரத்தில் வந்து சேரும் நண்பர்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி குருவின் திருமணத்தை நடத்த முயற்சிக்கி றார்கள். அங்கு வரும் பில்லாவின் மனைவி (கீதா சிங்) தன்னை தவிக்கவிட்டு ஓடிய பில்லாவையும் நண்பர்களையும் பழிவாங்க தனது உடலில் வெடிகுண்டினை கட்டியபடி வந்து திருமணத்தை நிறுத்துகிறாள். மனைவியின் அன்பை புரிந்து கொண்ட பில்லா அவளை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்கிறான். திருமணம் முடிந்து நண்பர்கள் அனைவரும் தங்களது துணையுடன் இருக்கும்போது மண்டபத்திற்கு சார்லஸும் தனது புதுமனைவியுடன் வருகிறான். மகிழ்ச்சியான நேரத்தில் மறுபடியும் நன்பர்கள் அனைவரும் காணாமல் போக, மறுபடியும் பழையபடி நண்பர்கள் போதையில் தங்களை மறந்திருக்க, மறுபடியும் நண்பனின் மனைவி தனது கணவனைத்தேடி பில்லாவுக்கு அழைக்கிறாள். கலாட்டாக்கள் தொடர்கிறது.