சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 20–1–2020

20-01-2020 11:20 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

அமெ­ரிக்கா, ஈரான் பிரச்­ச­னை­கள் சிறிது தணி­யத் தொடங்­கி­ய­தும் சந்­தை­கள் வெற்றி நடைப்­போ­டத் துவங்­கின. அது தொடர்­வது சந்­தோ­ஷ­மான தரு­ணங்­கள். பலர் நல்ல லாபங்­க­ளில் இருப்­பார்­கள்.

இந்த வாரத்­தில் மும்பை பங்­குச் சந்தை அதி­க­பட்­ச­மாக 42000 புள்­ளி­க­ளை­யும் கடந்து சென்­றது குறிப்­பி­ட­தக்­கது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று மும்பை பங்­குச் சந்தை 13 புள்­ளி­கள் கூடி 41945 புள்­ளி­க­ளு­ட­னும், தேசிய பங்­குச்­சந்தை புள்­ளி­கள் 3 புள்­ளி­கள் குறைந்து  12352 புள்­ளி­க­ளு­ட­னும் முடி­வ­டைந்­தன.  மும்பை பங்­குச் சந்தை சென்ற வாரத்தை விட இந்த வாரத்­தில்   446    புள்­ளி­கள் கூடி   முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது

எப்.எம்.சி.ஜி. ஸ்டாக்ஸ்

இந்த செக்­டார் நன்கு பரி­ண­மித்து வரு­கி­றது. பிவி­ஆர், இமாமி, டாடா குளோ­பல், யுனை­டெட் பிரி­வ­ரீஸ் ஆகிய கம்­பெ­னி­கள் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் வாங்கி வைக்­க­லாம்.

சுமால் மற்­றும் மிட்­கேப்

சுமால் அண்ட் மிட்­கேப் மறு­படி தலை தூக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. அமெ­ரிக்க, ஈரான் பிரச்­ச­னை­கள் இருந்த  சம­ய­மும் இந்த வகை பங்­கு­கள்  

இந்த வாரம் 7 சத­வீ­தம் சுமால் கேப், 5 சத­வீ­தம்  மிட் கேப் கூடி­யி­ருக்­கி­றது.

அது­வும் இந்த செக்­டா­ரில் நல்ல கம்­பெ­னி­கள் மட்­டுமே ஏறி­யி­ருக்­கி­றது.

காலாண்டு முடி­வு­கள்

ரிலை­யன்ஸ் இண்ட்ஸ்­டீ­ரீஸ் நல்ல காலாண்டு முடி­வு­களை கொடுத்­துள்­ளது. ரிலை­யன்ஸ் ரீடெய்ல் க்ரே மார்க்­கெட்­டில் ஒரு பங்­கின் விலை சுமார் 1000 ரூபாயை தாண்டி விட்­டது. ஆத­லால் ரிலை­யன்ஸ் இண்ட்ஸ்­டீ­ரீஸ் கம்­பெ­னி­யின் பங்­கு­களை நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் வாங்கி வைக்­க­லாம்.

ஹெ.டி.எப்.சி. பாங்க் சிறந்த காலாண்டு முடி­வு­களை கொடுத்­துள்­ளது.

இந்­தஸ் இந்த் பாங்க் சென்ற வரு­டத்­தில் இதே காலாண்டை விட சிறிது குறை­வான லாபங்­களை கொடுத்­துள்­ளது. கார­ணம் வாராக்­க­டன் கூடி­யி­ருப்­பது தான். இது போல இன்­னும் சில வங்­கி­க­ளுக்­கும் வாராக் கடன் பிரச்­ச­னை­கள் இந்த காலாண்­டில் இருக்­கும். அது அவர்­க­ளின் வரப்­போ­கும் காலாண்டு முடி­வு­க­ளில் தெரிய வரும்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

இந்த ஏற்­றங்­களை ப்ரி-பட்­ஜெட் ஏற்­றம் என்றே கூற­லாம். பட்­ஜெட்­டில் நல்ல பல அறி­விப்­பு­களை எதிர்­பார்த்து ஏறிக் கொண்­டி­ருக்­கி­றது. 100க்கும் மேற்­பட்ட பங்­கு­கள் 10 முதல் 60 சத­வீ­தம் வரை கூடி­யி­ருக்­கி­றது.

 சந்­தை­யில் புதி­தாக வாங்க நினைப்­ப­வர்­கள் விலை­கள் குறைய காத்­தி­ருக்­க­வும். அப்­போது நுழை­ய­வும்.

சந்­தை­கள் அடுத்த வார­மும் சிறிது மேலேயே இருக்க வாய்ப்­பு­கள் அதி­கம்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com

Trending Now: