ஏரியை புனரமைத்த வனத்துறை அதிகாரி!

17-01-2020 01:12 PM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரியில் மீண்டும் தண்ணீர் நிரம்பியுள்ளது. பறவைகளும் வருகின்றன. ஒரு காலத்தில் இந்த ஓட்டேரி ஏரி ஆயிக் கணக்கான வலசை வரும் பறவைகளின் புகழிடமாக இருந்தது. காலப்போக்கில் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. பறவைகளும் வருவதை நிறுத்திவிட்டன. தற்போதைய இந்த மாற்றத்திற்கு காரணம் இளம் வனதுறை அதிகாரி சுதா ஐ.எப்.எஸ்.

இவரது அணுகுமுறையும், கடின உழைப்புமே மீண்டும் ஓட்டேரி ஏரி புது பொழிவு பெற்று இருப்பதற்கு காரணம் எனலாம். உயிரி–மருத்துவ பொறியாளரான (பயோ–மெடிக்கல்) சுதா, ஐ.எப்.எஸ் தேர்ச்சி பெற்று வனத்துறை அதிகாரியானார். இவர் வடிவமைத்த ‘ஆப்’பிற்கு 2019ம் வருடத்திய டாக்டர்.கலாம் புதுமை ஆளுமை விருதும் கிடைத்துள்ளது. எதற்கும் தீர்வு உண்டு என்று கூறுகிறார் சுதா.  

“இந்த ஓட்டேரி ஏரி காய்ந்து வறண்டு விட்டது. இதனால் வலசை வரும் பறவை களும் வருவதை நிறுத்திவிட்டன. நாங்கள் கடுமையாக உழைத்து புத்துயிர் ஊட்டி புனரமைத்துள்ள ஏரிகளில், இந்த ஏரியும் ஒன்று. இப்போது தண்ணீர் நிரம்பியுள்ள ஏரியில், முன்பு போலவே பறவைகள் வரத்தொடங்கியுள்ளன என்று. 2019, டிசம்பர் 5ம் தேதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சுதா. இவர் தற்போது சென்னையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இணை இயக்குநராக உள்ளார்.

“சில வருடம் முன் வரை ஓட்டேரி ஏரியில் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான வலசை வரும்  பறவைகள் வந்து தங்கும். நெடுந்தொலைவில் இருந்து வரும் இந்த பறவைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கடந்த சில வருடங்களாக வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஓட்டேரி ஏரியும் மெல்ல மெல்ல அழிவை நோக்கி சென்றது. வர்தா புயலினால் அழிவு, அதற்கடுத்த வருடங்களில் வறட்சியால் ஏரி முழுவதும் வறண்டு விட்டது” என்று கூறுகின்றார் சுதா.

சென்ற வருடம் பிப்ரவரியில் சுதா, இந்த ஏரியை புனரமைத்து மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியை தொடங்கினார். அவரது கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. சென்ற அக்டோபர் மாதம் பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. டிசம்பர் மாத வாக்கில் மீண்டும் வலசை வரும் பறவைகள் ஏரியில் தஞ்சமடைய தொடங்கியுள்ளன. இந்த தொழில்நுட்ப வல்லுநரால் சாத்தியப்படாது என்று இருந்தது, சாத்தியமாகியுள்ளது.

அவர் மனீஷ் மச்சையாவுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: ஓட்டேரி ஏரி புனரமைத்த பணியை பற்றி கூறுங்கள்? இதை எப்படி தொடங்கி, செய்ய முடியாததை செய்து முடித்தீர்கள்?

பதில்: சில வருடங்கள் வரை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள ஓட்டேரி ஏரியில் குளிர்காலத்தில் ஆயிரக் கணக்கான வலசை வரும் பறவைகள் வந்து தங்கும். சில வருடங்களாக குளிர்காலத்தில் வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது.ஏரியும் படிப்படியாக சிதில மடைய தொடங்கியது. 2016ல் வர்தா புயலுக்கு பிறகு, தொடர்ந்து நிலவிய வறட்சியால் ஏரி முழுவதும் காய்ந்து விட்டது. 18 ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில், சில இடங்களில் தவிர, மற்ற பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டது.

சென்ற வருடம் நாங்கள் இந்த ஏரியை உயிர்பிக்கும் பணியை தொடங்கினோம். 2018ம் வருடம் நிலவிய கடும் வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு, சென்னையில் வாழும் மக்களுக்கு தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியது. ஒரு சொட்டு மழை தண்ணீரை கூட வீணாக்க கூடாது என்பதை உணர்ந்தோம். இந்த ஏரியை தூர்வார தொடங்கினோம். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக இந்த ஏரிக்கு போதுமான மழை தண்ணீர் வரவில்லை. இந்த ஏரி தண்ணீர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கு பயன்படுகிறது. அத்துடன் வருகை தரும் பறவைகளுக்கு அடைக்கலம் அளிக்கும் இடமாகவும் உள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்து, இதை புனரமைக்க வேண்டும் என்று நினைத்தோம்.

இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தியதற்கு பிறகு, தண்ணீரின் கொள்ளவு அதிகரித்துள்ளது. அத்துடன் ஏரியை சுற்றி கரைகள், தடுப்புச் சுவர்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க உயிரியல் பூங்காவை சுற்றி பல குளங்களும், மழை நீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப் பட்டுள்ளன. இவை பூங்காவில் உள்ள விலங்கு களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உதவியாக இருக்கும்.

கேள்வி: டாக்டர்.கலாம் புதுமை ஆளுமை விருது பெற்றது பற்றி கூறுங்களேன்?

பதில்: நான் ஐ.எப்.எஸ் அதிகாரியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது, 2015ல் தோட்டம் அமைப்பது சுலபம் (Plantation Made Easy) என்ற ‘ஆப்’ வடிவமைத்தேன். நான் வனத்துறையில் சேர்ந்த பின், நாங்கள் 2018ல், இதை தமிழ்நாடு புதுமையான முயற்சி கள் திட்டத்தின் கீழ் [Tamil Nadu Innovative Initiatives Scheme (TANII)] மொபைல் பயன்பாட்டில் வெளியிட்டோம். இந்த மொபைல் பயன்பாட்டை உபயோகித்து, விவசாயிகள், வீட்டில் தோட்டம் அமைப்ப வர்கள், தொழில் நிறுவனங்கள், தனி நபர்கள் தோட்டங்கள் அமைக்க தேவையான மரக்கன்று வகைகளை தேர்வு செய்யலாம். இந்த ஆப் தோட்டம் அமைக்கும் முறை, ஊடுபயிர் பற்றியும், மரங்கள் குறைவது பற்றியும் எடுத்துரைக்கிறது.

ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்த ஆப், நிபுணர்களுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கிறது. விவ சாயிகளுக்கு தோட்டம் அமைக்க கிடைக்கும் பல்வேறு மரக்கன்றுகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும். இதுவே செல்போனில் இயங்கும் முதல் ஆப். இதன் முக்கிய நோக்கம் தோட்டம் அமைப்பவர்களுக்கு அதன் நுட்பத்தை கற்றுத் தருவதும், மரங்களை பராமரித்து பாதுகாப்பதுமே. இந்த ஆப்பை தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்து கின்றனர். இந்த ஆப் வடிவமைத்தற்காக டாக்டர். கலாம் புதுமை ஆளுமை விருது பெற்றேன். இதை தகவல் தொழில்நுட்ப துறையும் அங்கீகரித்துள்ளது.

கேள்வி: நீங்கள் ஈடுபட்டுள்ள மற்ற திட்டங்கள்?

பதில்: நான் தமிழ்நாட்டில் அதிக மக்கள் வருகை தரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இணைய தளத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். 2016ல் அப்போதைய முதலமைச்சர் அறிவித்த திட்டப் படி, நான் இருபத்து நான்கு மணி நேரமும், இணைய நேரலை வாயிலாக மிருகங்களை கண்டு களிப்பதையும், இணையதளம் வாயிலாக நுழைவு சீட்டு பெறுவதையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். இதுவே உலக அளவில் 14 மிருகங்களை மிக தெளிவாக, இலவசமாக எல்லா நேரமும் பார்க்கும் வசதியுள்ள ஒரே இணையதளம். வண்டலூர் உயிரியல் பூங்கா மொபைல் அப்ளிகேஷன் வடிவமைப்பதிலும் ஈடுபட்டுள்ளேன். இது உயிரியல் பூங்காவிற்குள் பல இடங்களுக்கு செல்லும் வழியை காண்பிப்பதுடன், இதில் மிருகங்கள், விலங்குகள் உட்பட பல்வேறு தகவல்கள் கிடைக்கும். உலகத்தில் எந்த மூலையில் இருந்தும், எவ்வித இடர்பாடும் இல்லாமல், உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை தத்து எடுக்கும் இணையதளத்தை வடிவமைத்துள்ளேன்.  

நாங்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் மாணவர்கள், பொதுமக்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். மராத்தான் ஓட்டம், வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். இந்தியாவில் முதன் முறையாக 24 மணி நேரமும் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்கள், பறவைகள் போன்றவைகளை கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி கேமிரா நிறுவியுள்ளோம். இதனால் அவற்றை பராமரிக்கவும், பாதுகாக்கவும், தேவைப்பட்டால் மருத்துவ உதவி அளிக்கவும் முடியும்.

கேள்வி: உயிரி மருத்துவ பொறியாளரான நீங்கள் எப்படி வனத்துறையில் இணைந் தீர்கள்?

பதில்: எனக்கு சுற்றுச்சூழல், மரம், செடி போன்றவைகள் மீது இருந்த ஆவலாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தகவல் தொழில் நுட்ப துறையை விட்டு விட்டு, இந்திய வன சேவை பணியில் சேர்ந்தேன். வனத்துறை அதிகாரி பயிற்சியின் போது, காடுகள், வன விலங்குகள் பற்றி அறிந்து கொண்டேன்.

கேள்வி: இதில் நீங்கள் எதிர் கொண்ட் சவால்கள் என்ன?

பதில்: முழு ஈடுபாடும், கடின உழைப்பும் உரிய பலன்களை தரும் என்று நம்புகின்றேன். இதுவே குறுகிய காலத்தில் சாதிக்கவும், வெற்றி பெறவும் உதவியது. எனது மேல் அதிகாரிகள் எப்போதும் அனுசரனையாக உள்ளனர். வேலை செய்வதற்கு சாதகமான சுழல் நிலவுகிறது.

கேள்வி: வனப்பாதுகாப்பில் உங்கள் எதிர்கால திட்டமென்ன?

பதில்: வனத்துறைக்கு உதவிகரமாக இருக்கும் டூல் (சாதனம்) வடிவமைக்க போகின்றேன். நான் மிருகங்கள் கடத்தல் போன்றவைகளை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்புகின்றேன். காடுகள், வனவிலங்குகள், சமுதாயத்திற்கு பயன்படக் கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த விரும்புகின்றேன்.

கேள்வி: வனங்களை பாதுகாக்க எப்படி உயிரியல் பூங்காக்கள், மிருக்காட்சி சாலைகள் பயன்படுகின்றன?

பதில்: மக்கள் உயிரியல் பூங்கா போன்றவை களை சுற்றுலா தலமாக நினைக்கின்றனர். பொழுது போக்கவும், மிருகம், விலங்குகளை பார்க்கும் இடமாகவும் கருதுகின்றனர். அதே நேரத்தில் உயிரியல் பூங்காக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுகின்றன. அங்கு நடக்கும் மிருகங்கள் மீட்பு, மறுவாழ்வு பணிகள் பற்றி பலருக்கு தெரியாது. காடுகளை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயிரியல் பூங்காக்களில் அழிவை நோக்கி இருக்கும் பல மிருகங்கள், விலங்குகள் பாதுகாக்கபட்டு, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன. மிருகங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுதல், அவை நடமாடும் பாதைகளை மறித்தல், ஆக்கிரமிக்கும் தாவரங்கள் ஆகியவை பல மிருகங்களின், வன விலங்குகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம். எதிர்காலத்தில் உயிரியல் பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கும். உயிரியல் பூங்காக் களில் கல்வி, மேம்பாட்டு நடவடிக்கை, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியம்.

கேள்வி: இளம் வனப்பாதுகாவலர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

பதில்: உங்களுக்கு தெளிவான திட்டம் வேண்டும். வனப்பாதுகாவலர் என்ற முறையில் யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டு, மேம்படுத்துவதற்கு யோசிக்க வேண்டும். அப்போதுதான் நடைமுறை சாத்திய

முள்ள நல்ல திட்டங்களை தீட்டி, பலன்களை பெற முடியும். இந்த துறையில் உள்ள சவால்கள் கடினமானவை, சவால் நிறைந்தவை. எல்லாவற்றுக்கும் தீர்வு காண்பது சாத்திய மில்லாதது. ஆனால் எப்போதும் தீர்வு உண்டு.

நன்றி: வனவிலங்கு பாதுகாப்பு சங்கம். கவுண்டர்வியூ இணையதளம்.


Trending Now: