பாட்டிமார் சொன்ன கதைகள் – 251 – சுதாங்கன்

16-01-2020 04:37 PM

மனநோய்!

அர்ச்­சு­னன் தீர்த்த் யாத்­தி­ரைக்கு பொயி­ருப்­ப­தாய்ச் சன்­யாசி சொன்­ன­தும் சுபத்­தி­ரை­யின் தோழி­யொ­ருத்தி ` அர்ச்­சு­னன் இந்த ஊருக்கு வரு­வானா ? அவனை எப்­போது காண்­போம் என்ற ஆசை எங்­க­ளுக்கு எப்­போ­தும் உண்டு’ என்ற் சொன்­னாள். சுபத்­தி­ரை­யும் அந்­தக் கேள்­விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆவ­லா­யி­ருந்­தாள் என்­பதை அறிந்து கொண சன்­யாசி, `அவன் இந்த ஊருக்கு இதற்­குள் வந்­தி­ருக்க வேண்­டுமே. நீங்­க­ளும் பார்த்­தி­ருப்­பீர்­களே? ஆனால் நம் கண்ணே சில சம­யங்­க­ளில் நம்மை ஏமாற்­ற­வும் செய்­கி­றது?’ என்று சொன்­னான். ``ஏதேதோ வேதாந்­தம் பேசு­கி­றதே  என்று சுபத்­திரை சிரித்­துக் கொண்டே சன்­யாசி முகத்­தைப் பார்த்­தாள். பளிச் சென்று தலை குனிந்­தாள்.

சுபத்­திரை உள்­ளம் குழப்­ப­ம ­டைந்­தது` என்ன பேச்சு? ஆ என்ன பார்வை?’ என்று எண்ண எண்ண, மனக்­கு­ழப்­பம் அதி­க­ரித்­தது. இடை இடையே சன்­யா­சிக்­குப் பணி­விடை செய்­யும்­போது அந்த முகத்­தை­யும் ரூபத்­தை­யும் உற்று நோக்­கி­னாள். ``அந்த புஜங்­கள் ஏன் அப்­படி வடுப்­பட்­டி­ருக்­கின்­றன? ஆம், வில் உறை­த­லால் ஏற்­பட்ட வடு?’ என்று நினைத்­தாள். அவள் கண்ணை மறைத்த மாயை பளிச்­சென்று வில­கு­வது போலி­ருந்­தது. தன்­னை­ய­றி­யா­மலே ஆனந்­தம் உண்­டா­யிற்று. எனி­னும் சன்­யாசி தன்­னைப்­பற்­றி­யொன்­றும் வெளிப்­ப­டை­யா­கச் சொல்­லி­வி­ட­வில்லை.

சுபத்­திரை மெல்ல மெல்­லத் தைரி­ய­ம­டைந்து `முனி­வரே! உம்­மு­டைய தீர்த்த யாத்­தி­ரை­க­ளைக் குறித்து கதை­கள் சொல்ல வேணும் ‘ என்று கேட்­டாள். சன்­யாசி மிகுந்த சந்­தோ­ஷத்­து­டன் பல­வி­த­மான கதை­க­ளைச் சொன்­னான். வேடிக்கை வேடிக்­கை­யா­க­வும் பேசி­னான்; அந்த வார்த்­தை­கள் அந்த ஆசி­ர­மத்­தின் கெள­ர­வத்­திற்கு அவ்­வ­ளவு பொருத்­த­மா­ன­தல்ல. இது சுபத்­தி­ ரைக்கு நன்­றா­கத் தெரிந்­து­விட்­டது. எனி­னும் அவற்றை அமி­த­மா­கப் பரு­கி­னாள். அப்­ப­டி­யெல்­லாம் பேசிக்­கொண்­டி­ருக்­கும் போதும் சன்­யாசி தன்­னைப் பற்­றிய உண்­மை­யைப் பூர­ண­மாக வெளி­யி­ட­வில்­லையே என்று எண்­ணி­னாள்.

 ஒரு நாள் தோழி­மார் இல்­லாத சம­யத்­தில் சுபத்­திரை சன்­யா­சி­யி­டம் சென்று `சுவா­மி­களே! தேச­சஞ்­சா­ரம் செய்­த­போது எங்­கள் அத்­தை­யா­கிய குந்­தி­யைக் கண்­ட­துண்டா?’ என்று கேட்­டாள்.

சன்­யாசி புன்­ன­கை­யோடு ` ஆம் ‘ என்­றான்.

`தர்­ம­புத்­தி­ரர் சகோ­த­ரர்­க­ளோடு ஷேம­மா­யி­ருக்­கி­றாரா?’ என்று கேட்­டாள்.

`சகோ­த­ரர்­க­ளோடு கூட’ என்­பதை அவள் அழுத்­திச் சொன்­ன­தாக சன்­யாசி எண்­ணி­னான்.

 பிறகு பீம­னைப் பற்றி விசா­ரித்­தாள். அப்­பால் நகுல சகா­தே­வ­னைக் குறித்து விசா­ரித்­தாள். கடை­சி­யா­கத்­தான் அர்ச்­சு­ன­னைக் குறித்து விசா­ரித்­தாள். ஆனால் அந்த குர­லும் குழப்­ப­முமே சன்­யா­சிக்கு அமிர்­த­மா­யி­ருந்­தன. அர்ச்­சு­னன் தீர்த்த யாத்­திரை செய்து கொண்­டி­ருக்­கும் விவ­ரங்­க­ளை­யும் சன்­யாசி நேரி­லி­ருந்து பார்த்­தது போலச் சொல்லி வந்­தான். அவ­னும் சலிப்­பில்­லாம் சொல்­லிக் கொண்­டே­யி­ருந்­தான். அவ­ளும் சலிப்­பில்­லாம் கேட்­டுக் கொண்­டே­யி­ருந்­தாள்.

 அந்­தத் தீர்த்த யாத்­தி­ரையை படிப்­ப­டி­யா­கச் சொல்லி வந்து ` அர்ச்­சு­னன் சன்­யாசி ரூபத்­தோடு துவா­ர­கை­யில் வசிக்­கி­றான். ‘ என்று முடித்­த­தும் சுபத்­திரை வெட்­க­மும் மயக்­கு­ம­டைந்­தாள். அது முதல் சன்­யா­சிக்­கு­ரிய பூஜையை அவள் செய்­ய­வில்லை அவ­ளு­டைய தோழி­மார்­களே சன்­யா­சிக்கு போஜ­னம் முத­லி­யவை கொடுத்து வந்­தார்­கள். அவர்­கள் சுபத்­தி­ரை­யின் நிலை­மையை ருக்­கு­மணி முத­லா­ன­வர்­க­ளுக்­குத் தெரி­வித்­தார்­கள்.

 கல்­யா­ணமே சுபத்­தி­ரை­யின் மன நோய்க்கு மருந்து என்று கிருஷ்ண பக­வான் தீர்­மா­னித்­தார். யாத­வர்­கள் எல்­லோ­ரும் சமுத்­திர யாத்­திரை போயி­ருந்த சம­யத்­தில் சுபத்ரா திரு­ம­ணம் நடை­பெற்­றது. மாப்­பிள்ளை அந்த அர்ச்­சுன சன்­யா­சி­தான்.

 கல்­யா­ணத்­திற்­குப் பின் பெண்­ணும் மாப்­பிள்­ளை­யும் கிருஷ்­ண­னு­டைய அழ­கான ரதத்­தில் ஏறிக்­கொண்டு புறப்­பட்­டார்­கள். அப்­போது சுபத்­திரை அர்ச்­சு­ன­னி­டம், ` கடி­வா­ளம் பிடிப்­ப­தில் எனக்கு ஈடா­ன­வர்­கள் இந்த நாட்­டி­லில்லை ‘ என்று சொன்­னாள். சன்­யாசி வேஷத்­தைக் களைந்து கவ­ச­ம­ணிந்து, வில் ஏந்­தித் தூய வெள்ளை  வஸ்­தி­ரத்­து­ட­னி­ருந்த மாப்­பிள்­ளை­யை­யும் கையும் கடி­வா­ள­மு­மா­கத் தேரை செலுத்­திக்­கொண்டு சென்ற சுபத்­தி­ரை­யை­யும் கண்ட மக்­கள் ஆச்­ச­ரி­யத்­தோடு கல­க­ல­வென்று இரைச்­ச­லிட்­டுக் கொண்டு ஓடி வந்­தார்­கள்.

 அவர்­க­ளில் சிலர், ` அர்ச்­சு­ன­னும் சுபத்­தி­ரை­யும் காத­லித்து மணம் செய்து கொண்டு போகி­றார்­கள் ‘ என்று மகிழ்ந்­த­னர். சிலர் கோபத்­தோடு, `அடி­யுங்­கள்; பிடி­யுங்­கள்‘ என்று கூச்­ச­ லிட்­டார்­கள். அப்­போது சுபத்­திரை அர்ச்­சு­னனை நோக்கி ` புருஷ சிரேஷ்­டனே! நீ யுத்­தம் செய்­யும் போது உன் தேரை நடத்த வேண்­டு­மென்­பது நான் வெகு­நா­ளா­கக் கொண்­டி­ருந்த எண்ண ‘’ என்று சொன்­னாள். உடனே அர்ச்­சு­ன­னும்  `இதோ என் கைவன்­மை­யைப் பார் ‘ என்று பாணங்­களை பிர­யோ­கிக்­கத் தொடங்­கி­னான். எதி­ரி­கள் சுபத்­தி­ரை ­யின் பந்­துக்­க­ளா­ன­தால் அவர்­களை கொல்ல விரும்­பா­மல் வில்­லும் கவ­ச­மும் இர­த­மும் இல்­லா­த­வர்­க­ளாக்­கிக் காத­லியை நோக்கி ` பார் ‘ என்று காண்­பித்­தான்.

 நடந்­த­தைக் கேள்­வி­யுற்று பல­ரா­மர் கிருஷ்­ண­னைப் பார்த்து ` தம்பி ! உன் தோழ­னான அர்ச்­சு­னன் செய்த காரி­யத்­தைப் பார். அவன் நம்­மை­யெல்­லாம் அவ­ம­திக்­கத் துணிந்­தானே ‘ என்று கர்­ஜித்­தார். கிருஷ்­ணனோ அமை­தி­யாக,  `அப்­போதே நான் சொன்­னேனே, அந்த சன்­யாசி கன்­யா­மா­டத்­தின் சமீ­பத்­தில் வசிப்­பது தகா­தென்று. அண்ணா நான் சொன்­னதை கேளா­மற் போனீரே! போனது போன­து­தான் . எனி­னும் நான் இப்­போது ஒன்று சொல்­கி­றேன். இதற்­கா­வது செவி கொடுக்க வேணும். அர்ச்­சு­னன் தமது குலத்­திற்கு அவ­மா­னம் செய்­ய­வில்லை. விசேஷ கெள­ர­வம் தான் செய்­தி­ருக்­கி­றான். காத­லியை அழைத்­துக் கொண்டு  காத­லன் செய்­வது சத்­தி­ரிய தர்­மத்­திற்கு விரோ­த­மன்று.

Trending Now: