ஸ்டார்ட் அப் : உதிரி பாகங்­கள் கிடைக்­க­வில்­லையா... இந்த ஸ்டார்ட் அப் உத­வும்

13-01-2020 05:13 PM

கம்­பெ­னி­கள் வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு தான் தெரி­யும் சில சம­யங்­க­ளில் ஒரு சிறிய ஸ்பேர் பார்ட்­டுக்­காக எவ்­வ­ளவு தூரம் அலைய வேண்­டி­ய­தி­ருக்­கும் என்­பதை.  அந்த ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்­கா­த­தால் சில சம­யம் புர­டெ­க்ஷ­னை­யும் நிறுத்தி வைக்க வேண்­டிய சூழ்­நிலை வந்­தி­ருக்­கும்.  

இது போன்ற சூழ்­நி­லை­கள் தற்­போது குறைந்­தி­ருக்க கார­ணம் எல்லா சப்­ளை­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து வந்­தி­ருக்­கும் ஆன்­லைன் ஸ்டோர்­கள் தான்.  சிங்­கப்­பூர்யை தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு இயங்கி வரும் மோக்­ளி­கஸ் (Moglix)  என்ற கம்­பெனி  இண்­டஸ்­டி­ரி­யல் சப்­ளைஸ் துறை­யில்  இந்­தி­யா­வில் பெரும் பங்­காற்றி வரு­கி­றது.  

உல­க­ள­வி­லான விற்­ப­னை­யில் 80 சத­வீத விற்­ப­னையை இந்­தி­யா­வின் மூலம்­தான் இந்த கம்­பெ­னிக்கு கிடைக்­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்க விஷ­ய­மா­கும்.

குறிப்­பிட்­டுச் சொல்ல வேண்­டு­மா­னால் இந்த பி2பி கம்­பெனி 45க்கும் மேற்­பட்ட புரா­டக்ட் கேட்­ட­க­ரி­க­ளில் சுமார்  ஐந்து லட்­சம் இண்­டஸ்­டி­ரி­யல் புரா­டக்­டக்ளை தன்­ன­கத்தே வைத்­தி­ருக்­கி­றது.

 இந்­தி­யா­வில் 20,000 பின் கோடு­களை ஆன்­லைன் மூல­மாக சென்­ற­டை­கி­றது.  இந்த கம்­பெனி ஆயி­ரம் பெரிய மேனுஃ­பாக்­ச­ரிங் கம்­பெ­னி­க­ளுக்­கும், 5 லட்­சம் சிறிய மற்­றும் நடுத்­தர இன்­ஜி­னி­ய­ரிங் கம்­பெ­னி­க­ளுக்­கும் இண்­டஸ்­டி­ரி­யல் புரா­டக்ட்­க­ளின்  தேவை­களை பூர்த்தி செய்­யும் கம்­பெ­னி­யாக இருக்­கி­றது.

இந்­தி­யா­வில்  இன்­ட­டி­ரி­யல் புரா­டக்ட் சப்ளை துறை­யின் இன்­றைய மதிப்பு 50 பில்­லி­யன் டாலர் ஆகும் (அதா­வது 350,000 கோடி ரூபாய்­க­ளா­கும்). இந்த துறை வரு­டத்­திற்கு 20 சத­வீ­தம் வளர்ந்து வரு­கி­றது. 2025ம் ஆண்­டில் இந்த துறை­யின் மதிப்பு 700,000 கோடி ரூபாய் அள­வில் இருக்­கும்.

இந்த கம்­பெனி இந்­தி­யா­வில் 25 இடங்­க­ளில் தன்­னு­டைய புரா­டக்ட்­களை வைத்து சப்ளை செய்து வரு­கி­றது. இது தவிர 25 மாநி­லங்­க­ளில் கிட்­ட­தட்ட 5000 சப்­ளை­யர்­க­ளும்  இவர்­கள் லிஸ்­டில் இருக்­கி­றார்­கள்.

கடந்த மூன்று வரு­டத்­தில் இந்த கம்­பெனி 11,000 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்­தி­ருக்­கி­றது என்­றால் பார்த்­துக்­கொள்­ளுங்­கள்.

உங்­க­ளுக்கு சம­யத்­தில் கிடைக்­காத இண்­டஸ்­டி­ரி­யல் புரா­டக்ட்­களை இவர்­க­ளின் இணை­யத்­த­ளத்­தில் தேடிப்­பா­ருங்­கள்.


இந்­தி­யா­வின் வீட்டு உப­யோக பொருட்­கள் மற்­றும்  கன்ஸ்­யூ­மர் எலக்ட்­ரா­னிக்ஸ் துறை 2019ம் வரு­டத்­தில் 76,400 கோடி ரூபாய் மதிப்­புள்­ள­தாக இருந்­தது. இது 2025ம் ஆண்டு கிட்­ட­தட்ட இரட்­டிப்­பாக, அதா­வது 148,000 கோடி ரூபாய் மதிப்­புள்­ள­தாக கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதில் அடங்­கி­யுள்ள முக்­கி­ய­மான பொருட்­கள் வீட்டு ஏர்-­கண்­டி­ஷ­னர்­கள், ரெப்­ரி­ஜி­ரேட்­டர்­கள், டி.வி., வாஷிங் மிஷன் ஆகி­யவை அடங்­கும்.  இவற்­றில் குறிப்­பி­ட­தக்க அளவு இறக்­கு­மதி செய்து விற்­கப்­பட்­டா­லும், இந்­தி­யா­வி­லும் பெரிய அள­வில் இந்த பொருட்­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. நாம் வாங்­கும் போது இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்­டதா என்று பார்த்து வாங்­கி­னால் அது நமது “மேக் இன் இந்­தியா” திட்­டத்­திற்­கும் உத­வும், நாட்­டிற்­கும் உத­வும், வீட்­டிற்­கும் உத­வும்.Trending Now: