ஒரு பேனாவின் பயணம் – 240 – சுதாங்கன்

13-01-2020 05:06 PM

நேருவால் வந்த வினை

காஷ்­மீர் பிர­த­ம­ராக பக் ஷி குலாம் முக­மது இருந்­த­போது முதல் நட­வ­டிக்­கை­யாக நெல் கொள்­மு­தல் விலையை உயர்த்­தி­னார். அடுத்து பள்­ளிக் கல்­வியை இல­வ­ச­மாக்­கி­னார். புதிய பொறி­யி­யல் மற்­றும் மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­னார். ஜம்மு- காஷ்­மீர் மற்­றும் இதர இந்­திய பிராந்­தி­யங்­க­ளுக்கு இடை­யே­யான சுங்­கச்­சா­வ­டி­ களை ஒழித்­தார்.

1954 அக்­டோ­ப­ரில் ஸ்ரீந­க­ரில் செய்­திப் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளின் மாநாடு ஒன்று நடை­பெற்­றது. மாநில அரசு எல்லா தடை­க­ளை­யும் விலக்­கிக்­கொண்டு விருந்­தி­னர்­களை மிகச்­சி­றந்த ஓட்­டல்­க­ளில் தங்க வைத்­தது. காஷ்­மீர் உணவு வகை­கள் பரி­மா­றப்­ப­டும் விருந்­து­க­ளில் அவர்­கள் அனை­வ­ரை­யும் கலந்து கொள்ள செய்­தது.'புதிய ஆட்சி பத­விக்கு வந்த ஓர் ஆண்டு மட்­டும் ஆகி­யி­ருந்­தா­லும், பக்‌ஷி­யின் அர­சாங்­கம் சில துறை­க­ளில் முன்­னர் நடை­மு­றை­க­ளில் இருந்த ஷேக் அப்­துல்­லா­வின் ஆறு வருட ஆட்­சி­யில் கொண்டு வந்­ததை விட அதி­க­மான சீர்­தி­ருத்­தங்­களை கொண்டு வந்து இருப்­ப­தாக கூற­லாம்’ என்­றும் ஒரு விசு­வா­ச­மான பத்­தி­ரிக்கை ஆசி­ரி­யர் எழு­தி­னார்.

பொது­மக்­கள் மற்­றும் பத்­தி­ரி­கை­யா­ளர் வரு­கையை அடுத்து ஜனா­தி­பதி வருகை அடுத்த நிகழ்ச்­சி­யா­யிற்று. 1955 அக்­டோ­ப­ரில் டாக்­டர். ராஜேந்­திர பிர­சாத் ஸ்ரீ நக­ருக்கு வந்­தார். அப்­போது பெரும் ஆர்­வத்­து­டன் வந்த மக்­களை முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் கண்­கா­ணித்து கட்­டுப்­ப­டுத்தி இருந்­த­னர். அவர்­கள் விமான நிலை­யத்­தில் இருந்து சாலை நெடு­கி­லும் வரி­சை­யாக நின்று வர­வேற்­ற­னர். ஜீலம் நதி­யில் படகு பவனி நடை­பெற்­றது. அனு­ம­திக்­கப்­பட்ட பல வளர்ச்சி  திட்­டங்­க­ளில் ஒன்­றான ஒரு நீர்­மின் திட்­டத்தை தொடங்கி வைப்­ப­தற்­காக வந்­தி­ருந்­தார் டாக்­டர். ராஜேந்­திர பிர­சாத். அப்­போது ஷேக் அப்­துல்லா சிறை­யில் அமை­தி­யாக ஓய்­வெ­டுத்­துக் கொண்­டி­ருந்­தார். குளிர்ச்­சி­ யான மலை பங்­க­ளா­வுக்கு மாற்றி தங்க வைக்­கப்­ப­டு­முன், முத­லில் அவர் உதம்­பூர் பழைய அரண்­மனை ஒன்­றில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்­தார். தீவிர இந்­திய எதிர்ப்­பா­ள­ராக மாறி­யி­ருந்­தார்.

காஷ்­மீ­ருக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் பக் ஷி வரம்பு மீறி ஆட்­சி­யைப் பற்­றிக் கொண்­ட­வர் என்று கரு­தப்­பட்­டார். டில்லி ஜும்மா மசூ­தி­யில் வெள்­ளிக்­கி­ழமை தொழுகை பற்­றிய இரண்டு ரக­சிய காவல்­துறை அறிக்கை குறிப்­பு­களை தரு­வது பொருத்­த­மாக இருக்­கும். 1953 அக்­டோ­பர் இரண்­டாம் தேதி­யன்று காஷ்­மீர் பார்­லி­மென்ட் உறுப்­பி­னர்­கள் இரு­வர் தொழு­கைக்கு வந்­தி­ருந்­த­னர். மசூதி அலு­வ­லர் ஒரு­வர் காஷ்­மீர் நிலை குறித்து ஒரு கூட்­டம் கூட்ட கூறி­ய­போது 'ஷேக் அப்­துல்­லா­வின் விடு­த­லைக்கு திரை­ம­றை­வில் வேலை செய்து கொண்­டி­ருப்­ப­தால் இது சரி­யான நேரம் அல்ல’ என்று கூறி­னார். அவர்­கள் மேலும் கூறு­கை­யில்,'எல்லா காஷ்­மீ­ரி­க­ளும் இந்­தி­யா­வி­லேயே இருப்­பர். அதற்­கா­கவே இறப்­பர். ஆனால் ஷேக்கை தொடர்ந்து சிறை­யி­லேயே வைத்­தி­ருந்­தால், மாநி­லம் அப்­போது ஆத்­தி­ர­ம­டைந்து பாகிஸ்­தா­னுக்கு செல்­லக்­கூ­டும். அப்­படி நடந்­தால் அதற்­குப் பொறுப்பு அவர்­க­ளு­டை­யது அல்ல என்­றும் கூறி­னர்.’

மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு, பக் ஷி குலாம் முகம்­மது ஜும்மா மசூ­தி­யில் தொழு­கைக்கு வந்­தார். ஷாஜ­ஹா­னால் 1௭ம் நூற்­றாண்­டில் கட்­டப்­பட்ட அந்த மசூதி துணைக்­கண்­டத்­தின் அதிக கம்­பீ­ர­மா­ன­தும் மிக­வும் மதிக்­கப்­ப­டு­வ­தும் ஆகும். பக் ஷியின் வருகை அவ­ரு­டைய பத­விக்­கான சட்­ட­பூர்­வ­மான உரி­மையை உறுதி செய்­து­கொள்ள ஒரு வழி­யாக அமை­யும். மசூதி காப்­பா­ளர்­க­ளும் பக் ஷியின், டில்­லி­யு­ட­னான உறவு நெருக்­கத்தை அறிந்து உரிய மரி­யா­தை­யு­டன் வர­வேற்­ற­னர். ஆனால், காவல் துறை அறிக்கை ஒன்று தொழு­கைக்கு வந்­தி­ருந்த காஷ்­மீ­ரி­கள் உள்­ளிட்ட சில இஸ்­லா­மி­யர்­கள், பக் ஷி குலாம் முகம்­ம­துக்கு எதி­ராக கிசு­கி­சுப்­பான குர­லில் பேசிக்­கொண்­டதை குறிப்­பி­டு­கி­றது. அவ­ரு­டைய குரு ஷேக் அப்­துல்­லாவை கம்பி எண்ண வைத்து விட்டு காஷ்­மீ­ரின் பிர­த­மர் ஆகி­விட்­டார் என்று பேசிக் கொண்­ட­தாக அந்த குறிப்பு தெரி­விக்­கி­றது.

1940களைப் போலவே 1950களி­லும் காஷ்­மீர், தொல்­லை­க­ளுக்கு உட்­பட்ட நிச்­ச­ய­மற்ற நிலை­யில் இருந்­தது. 1940ல் தொல்­லை­கள், மகா­ராஜா இந்­தி­யா­வு­டனோ, பாகிஸ்­தா­னு­டனோ சேரா­மல் போதிய அவ­கா­சம் இருந்­தும் தயங்கி நின்­ற­தால் விளைந்­தவை. நாட்டை முற்­று­கை­யிட்ட பழங்­கு­டி­க­ளின் பேரா­சை­யும் ஆர்­வக்­கோ­ளா­றும் பின்­ன­ணி­யாக அமைந்­தன. ஐம்­ப­து­க­ளில் ஷேக் அப்­துல்லா மற்­றும் ஷியாமா பிர­சாத் முகர்­ஜி­யின் பெரும் கன­வு­கள் பின்­ன­ணி­க­ளாக இருந்­தன. இரு­வ­ருமே ஜன­நா­யக அர­சி­ய­ல­மைப்பு சட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு இயங்க விரும்­ப­வில்லை. இரு­வ­ரும் அர­சி­யல் போராட்­டங்­க­ளில் சிலம்­பாட்­டம் ஆடி, இரு­வ­ருமே சோக­மான விளை­வு­களை அனு­ப­வித்­த­னர். காஷ்­மீ­ரில் நடை­பெற்­று­வந்த சச்­ச­ர­வு­கள் இந்­தி­யர்­க­ளுக்கு மட்­டுமே கவலை அளிப்­ப­தாக இருந்­து­வி­ட­வில்லை. 1947ல் இந்­தி­யப் படைக்கு தலைமை ஏற்­றி­ருந்த பிரிட்­டிஷ் தள­பதி, 'அவை இந்­தியா, பாகிஸ்­தான் உறவை மோச­மாக்­கும்'என அஞ்­சி­னார். காஷ்­மீர் பாது­காப்­பின் போது, அவர் ஷேக்,  பக் ஷி இரு­வ­ரை­யும் நன்கு அறிந்­தி­ருந்­தார். 'ஷேக் மாபெ­ரும் மனி­தர் அல்ல, என்­றா­லும், நேர்­மை­யி­லும் சொந்த நாட்­டின் மீதான பற்­றி­லும் உண்­மை­யா­ன­வர் 'என்­பது அவர் கருத்து. மாறாக, `பக் ஷி உண்­மை­யா­ன­வர் அல்ல; பண்­பற்ற ஒரு மனி­தர்’ என்று அவர் கரு­தி­னார். உண்­மை­யில் பக் ஷியி­டம்  கட்­ட­மைக்­கும்திறன் கொஞ்­சம் உண்டு. தன்­னைப் பலப்­ப­டுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­ய­மும் உண்டு. தனக்­குள்ள நெருக்­கத்தை மாநி­லத்­துக்கு மத்­திய நிதி தொடர்ந்து கிடைப்­ப­ தற்கு அவர் பயன்­ப­டுத்­திக் கொண்­டார். அந்த நிதி உத­வி­கள் அணை­கள், சாலை­கள், மருத்­து­வ­ம­னை­கள், மலை குடை­வு­கள், ஓட்­டல்­கள் ஆகி­ய­வற்­றுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டன. புதிய தலை­மைச் செய­ல­கம், புதிய விளை­யாட்டு அரங்­கம், புதிய சுற்­றுலா பய­ணி­கள் வளா­கம் என பல புதிய கட்­ட­டங்­கள் எழுந்­தன. எனி­னும், பக் ஷி அரசு மேற்­கொண்ட வளர்ச்­சித் திட்­டங்­க­ளில் எப்­போ­தும் அவ­ரு­டைய குடும்­பத்­திற்­கும் நண்­பர்­க­ளுக்­கும் ஒரு சத­வீ­தம் உண்டு. விரை­வில் அவர் அரசு, பிபிசி (பக் ஷி பிர­தர்ஸ் கார்ப்­ப­ரே­ஷன்) என்ற பெய­ரைப் பெற்று விட்­டது.

1952-–53 ஆண்­டு­க­ளில் நிகழ்ந்த சம்­ப­வங்­கள் பள்­ளத்­தாக்­கின் மீதான இந்­தி­யா­வின் நியா­ய­மான உரி­மை­களை கேள்­விக்­கு­றி­யாக்கி விட்­டன. 1947 முற்­றுகை நடை­பெற்று ஆறு ஆண்­டு­கள் முடிந்து விட்­டன. உல­கம் அந்த ஊடு­ரு­வலை மறப்­ப­தற்­கும், பள்­ளத்­தாக்கு என்­றால் இஸ்­லா­மி­யர்­கள்; பாகிஸ்­தா­னி­லும் அப்­ப­டியே என்­பதை மட்­டும் நினை­வில் வைப்­ப­தற்­கும், அது போது­மான கால அவ­கா­சம். மேலும் காஷ்­மீர், இந்­தி­யா­வுக்கு சொந்­தம் என அணி­வ­குத்து நின்ற காஷ்­மீர் தலை­வர், இந்­தி­யா­வால் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்­தார். இவ்­வாறு இல்­லா­மல், வேறு வித­மாக போக்கு மாறி இருக்­குமா? இருக்­க­லாம்! ஒரு­வேளை ஷேக் அப்­துல்­லாஹ் சியாமா பிர­சாத் முகர்ஜி பொறுப்­பு­ட­னும் கட்­டுப்­பா­டு­க­ளும் நடந்து கொண்­டி­ருந்­தால்! பெங்­க­ளூ­ரி­லி­ருந்து வெளி­வந்­து­கொண்­டி­ருந்த, பெயர் பிர­ப­ல­மா­காத, மிகக் குறை­வான அளவே விற்­ப­னை­யான, லிப­ரல் கொள்கை கொண்ட ஆங்­கி­லேயே பத்­தி­ரி­கை­யின் கருத்­துச் சுதந்­தி­ரத்தை ஜவ­ஹர்­லால் நேரு இந்­திய அர­சாங்­க­மும் கேட்­டி­ருந்­தால், ஒரு­வேளை மாறி இருக்­க­லாம்!

1952–53 களில் டாக்­டர். முகர்ஜி நேருவை பாகிஸ்­தான் மீது படை­யெ­டுத்து வடக்கு காஷ்­மீரை மீட்க வலி­யு­றுத்­திய போது, பிலிப் ஸ்ப்ராட் வேறொரு தீர்வை கூறி­னார். இந்­தியா, பள்­ளத்­தாக்­கின் மீதான உரி­மை­களை கைவிட்­டு­விட வேண்­டும். ஷேக்­கின் சுதந்­திர காஷ்­மீரை அனு­ம­திக்க வேண்­டும். காஷ்­மீ­ரி­லி­ருந்து தன் படை­களை விலக்­கிக்­கொள்ள வேண்­டும். ஜம்­மு-–­காஷ்­மீர் கடன்­களை ரத்து செய்­து­விட்டு மத­சார்­பற்ற நாடாக இயங்க தங்­கள் பய­ணத்தை காஷ்­மீர் தொட­ரட்­டும். இந்த சிக்­க­லில் மாட்­டிக்­கொண்டு, நம் கவு­ர­வம், நம் செல்­வங்­கள், நம் எதிர்­கா­லம் ஆகி­ய­வற்­றை­யும் வீண­டிக்­கா­மல், பாது­காப்­பான தூரத்­தில் நின்று கொண்டு, அவர்­கள் என்ன செய்­கி­றார்­கள் என்­பதை பரி­வு­டன் பார்த்­துக் கொண்­டி­ருப்­போம்'.

ஸ்ப்ராட்­டின் தீர்­வில் நேர்மை கலந்­தி­ருந்­தது. அத்­து­டன் பொரு­ளா­தா­ர­மும் புத்­தி­சா­லித்­த­ன­மும் நிறைந்­தி­ருந்­தன. இந்­தி­யா­வின் கொள்கை, ஒரே நாடு என்ற தவ­றான நம்­பிக்கை அடிப்­ப­டை­யி­லா­னது. மேலும், அழ­கி­ய­தும், முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­து­மான அந்த பள்­ளத்­தாக்கை சொந்­த­மாக்­கிக் கொள்ள வேண்­டும் என்ற பேரா­சை­யின் அடிப்­ப­டை­யில் ஆனது ஆகும். தற்­போ­தும் எதிர்­கா­லத்­தி­லும் இந்த கொள்­கை­யின் விலை கணக்­கிட முடி­யாத ஒன்று. காஷ்­மீ­ருக்கு விசேஷ சலு­கை­கள் அளித்து இந்­தி­யா­வின் பிற பகு­தி­க­ளில் எதிர்ப்பை உண்­டாக்­கு­வதை விட, அந்த மாநி­லத்தை கைக­ழுவி விடு­வதே சிறந்­தது. அப்­போ­தி­ருந்த நில­வ­ரப்­படி, ஒன்­றை­யொன்று முறைத்­துக் கொண்டு நிற்­கும் இரண்டு படை­க­ளின் கோரப்­பி­டி­யில் காஷ்­மீர் சிக்­கி­யி­ருந்­தது. இந்­தப் பயங்­க­ர­மான சூழல் கால­வ­ரை­ய­றை­யின்றி தொடர்­வது விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய சில­ருக்கு சரி என்று தோன்­ற­லாம். ஆனால், காஷ்­மீர் இந்­தி­யா­வு­டை­யது என்ற அபா­ய­க­ர­மான பெரு­மைக்­காக,'எல்­லா­வற்­றை­யும் இந்­தியா கொடுத்­துக் கொண்டே இருக்­க­வும், காஷ்­மீர் பெற்­றுக் கொண்டே இருக்­க­வும், இந்­தி­யர்­க­ளுக்கு வரிப்­ப­ணம் ஏரா­ள­மாக செலவு ஆகிக்­கொண்டே இருக்­கி­றது. பொரு­ளா­தார நோக்­கங்­கள் சித்­தாந்­தங்­களை விட பிர­தா­ன­மா­ன­தாக இருக்க வேண்­டும் என்­பது முன்­னாள் மார்க்­சிஸ்ட் ஒரு­வ­ரு­டைய வாத­மாக (ஸ்ப்ராட்­டுக்கு அதே கருத்து) இருந்­தது. ஆனால், 1950களில் அந்த வாதம் இந்­தி­யா­வில் பெரும்­பான்­மை­யி­னரை கவர்ந்து இருக்­காது.

இது­தான் நான் பத்­தி­ரி­கைக்கு வரு­வ­தற்கு முன் தெரிந்து கொண்ட பின்­னணி. அந்த சின்ன வய­தில் இத்­தனை விஷ­யங்­களை தெரிந்து கொள்ள ஒரு­வ­னுக்கு ஆர்­வம் வருமா என்ற கேள்வி எழ­லாம். ஆனால் என்­னு­டைய குடும்­பப் பின்­னணி அப்­ப­டிப்­பட்­டது. எங்­கள் வீட்­டில் எப்­போ­தும் ஒரு அர­சி­யல் சர்ச்சை நடந்து கொண்­டே­யி­ருக்­கும். கார­ணம் பத்­தி­ரி­கை­யா­சி­ரி­ய­ராக இருந்த என் தாத்தா காங்­கி­ரஸ் அபி­மானி. என் தந்­தையோ இட­து­சாரி சிந்­தனை கொண்­ட­வர்.

 `காஷ்­மீர்­தான் இந்­தி­யா­வுக்கு பெரிய தலை­வ­லி­யாக இருக்­கப் போகி­றது. நேரு­வின் பேரா­சை­யி­னால் இந்­தியா பெரும் பொரு­ளா­தார நஷ்­டத்தை சந்­திக்­கப் போகி­றது’ என்­பது என் தந்­தை­யின் வாதம்.  `காஷ்­மீரை விட்­டுக்­கொ­டுத்­தால், நாம் பாகிஸ்­தா­னுக்கு அடி­ப­ணிந்­தது போலா­கி­வி­டும். பாகிஸ்­தா­னுக்கு இந்­தியா  மண்­டி­யி­டு­வதா?’ இது தாத்­தா­வின் வாதம்.  இந்த வாதங்­களை கூர்ந்து கேட்­டுக்­கொண்­டி­ருப்­பேன். பெரும்­பா­லான விஷ­யங்­களை அந்த சம­யத்­தில் புரி­யாது. ஆனால், கதை சொல்­வது மாதிரி காஷ்­மீர் விஷ­யத்தை சொல்­லு­வார்.  அவ­ருக்கு தெரி­யாத உலக விஷ­யங்­களே இல்லை என்­கிற அள­வுக்கு எந்த விஷ­யத்தை கேட்­டா­லும், தன் பேரன்­களை பக்­கத்­தில் உட்­கார வைத்­துக்­கொண்டு கதை மாதிரி உலக விஷ­யங்­க­ளைச் சொல்­லு­வார். தாத்­தா­வின் அப்பா பி.ஸ்ரீ.  1926களி­லேயே ஆனந்த விக­டன் பத்­தி­ரி­கை­யில்  பணி­பு­ரிந்­த­வர். 1930களில் ஆனந்த விக­ட­னில் குழந்­தை­க­ளுக்­கும் புரி­யும் வகை­யில் ‘சித்­திர ராமா­ய­ணம்’ தொடர் ஆனந்த விக­ட­னில் எழு­தி­னார். பக்தி இலக்­கி­யங்­க­ளில் அவ­ருக்கு இணை கிடை­யாது.  அப்­போ­தெல்­லாம் மார்­கழி மாதங்­க­ளில் எங்­கள் வீடு காலை­யி­லேயே களை கட்­டி­வி­டும். பாட்டி விடி­யற்­காலை 3 மணிக்கே எழுந்து வாச­லில் பெரிய கோலம் போட்டு அதன் நடுவே சாணத்தை பிடித்து அதன் மேல் தின­மும் ஒரு பூவை வைப்­பது பாட்­டி­யின் பழக்­கம். எதற்­காக மார்­கழி மாதத்­தில் இத்­தனை அமர்க்­க­ளம்  என்று கேட்­கத் தோன்­றாது. கார­ணம், காலை ஆறு மணிக்கு, சுடச்­சுட நல்ல நெய் சொட்ட சொட்ட பாட்டி பொங்­கல் செய்து ஊட்­டு­வாள். அந்த பொங்­க­லுக்கு அப்­ப­டி­யொரு ருசி இருக்­கும்.  ஒரு மார்­கழி மாதத்­தின் போது கொள்­ளுத்­தாத்தா வீட்­டில் இருந்த போது­தான், தாத்தா  என்னை அழைத்­தார். அப்­போது பின்­னால் கிரா­ம­போ­னில் திருப்­பாவை பாடல் பாடிக்­கொண்­டி­ருந்­தது. `ஏன் பொங்­கல் இந்த மாதத்­தில் பாட்­டிக் கொடுக்­கி­றாள் தெரி­யுமா?’ என்று கேட்­டார்.

 நான் பதில் தெரி­யா­மல் விழித்த போது, தாத்தா அப்­போ­து­தான் கதை போல மார்­கழி மாதத்­தின் சிறப்­புக்­களை ஆண்­டாள் என்­கிற கதா­பாத்­தி­ரம் மூல­மாக சொல்ல ஆரம்­பித்­தார். பள்­ளி­யில் ஆசி­ரி­யர்­கள் சொல்­லிக் கொடுப்­பதை விட தாத்தா புரி­யாத விஷ­யங்­க­ளை­யும் கதை போல அழ­காக குழந்­தை­க­ளும் ரசிக்­கும்­ப­டி­யாக சொல்­லு­வார். அப்­போ­து­தான் எனக்கு முதன்­மு­த­லாக ஆண்­டாள் என்­கிற அந்த சூடிக்­கொ­டுத்த சுடர்க்­கொ­டி­யின் மீது ஒரு இனம்­பு­ரி­யாத பக்தி காதல் என்  13 வய­தில் உரு­வா­கத் துவங்­கி­யது.

நான் பள்ளி இறுதி படிக்­கும்­போது, திருப்­பா­வை­ யின் முப்­பது பாடல்­க­ளை­யும் மனப்­பா­ட­மாக சொல்­லு­வேன். அந்­தப் பாடல்­கள் மனப்­பா­டம் ஆனது நான் படித்து மன­னம் செய்­த­தி­னால் அல்ல.  சுப்­ர­பா­தம் என்­றால் எப்­படி எம்.எஸ். சுப்­பு­லட்­சுமி நினை­வுக்கு வரு­வாரோ அதே போல் திருப்­பாவை என்­றால் எங்­கள் பள்ளி நாட்­க­ளில் எங்­கள் நினை­வுக்கு உடனே வரு­ப­வர் எம்.எல்.வசந்­த­கு­மாரி. அவ­ரு­டைய திருப்­பாவை பாடல்­கள்­தான் அப்­போது மிக­வும் பிர­ப­லம். எங்­கள் வீட்டு கிரா­ம­போ­னில் அந்த மாதம் முழு­வ­தும் காலை­யில் எம்.எல்.வியின் திருப்­பாவை ஒலித்­துக்­கொண்­டே­யி­ருக்­கும். அப்­ப­டித்­தான் எனக்கு திருப்­பாவை மனப்­பா­ட­மா­னது. கூடவே தமி­ழின் மீதும் ஒரு அலா­தி­யான காத­லும் வளர்ந்­தது. இப்­படி தாத்­தா­வும், கொள்­ளுத்­தாத்­தா­வும் உலக விஷ­யங்­க­ளை­யும் சமய இலக்­கி­யங்­க­ளை­யும், பார­தி­யின் பாடல்­களை காதில் திணிக்­கும்­போ­து­தான் புத்­த­கம் படிக்­கிற ஆர்­வம் கூடி­யது.

அப்­போது பிரேமா பிர­சு­ரம் மாத நாவல்­க­ளைப் போல ஒரு பழுப்பு காகி­தத்­தில் மாதம் ஒரு மர்ம நாவல் கொண்டு வரு­வார்­கள். பி.டி. சாமி, மேதாவி, சஞ்­சீவி, சுதா­கர் இவர்­க­ளின் கதை­கள் வரும். இதில்­தான் எனக்கு படிக்­கிற ஆர்­வம் முதன்­மு­த­லாக பிறந்­தது. இன்­னும் எனக்கு நன்­றாக நினை­வி­ருக்­கி­றது. இந்த வரி­சை­யில் சுதா­கர் என்­ப­வர் எழு­திய நாவல் ‘மயக்­கும் விழி­கள்.’ இந்த நாவல்­தான் பின்­னா­ளில் ஜெய்­சங்­கர் கதா­நா­ய­க­னாக நடித்து `பொன்­ம­கள் வந்­தாள்’ என்ற பெய­ரில் பட­மாக வெளி­வந்­தது. இந்­தப் படிக்­கிற ஆர்­வம் வந்த போது­தான் நான் திருப்­பாவை என்­னும் பாவையை படிக்க ஆரம்­பித்­தேன்.

(தொட­ரும்)  
Trending Now: