‘காளியம்மா’வை ரொம்ப பிடிச்சு போச்சு! – மவு­னிகா

07-01-2020 06:40 PM

சிறிது இடை­வெ­ளிக்கு பிறகு, மீண்­டும் நடிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார், மவு­னிகா. என் காலத்­துக்கு பிற­கும் நீ நடிக்­க­வேண்­டும் என என்­னி­டம் பாலு {பாலு­ம­கேந்­திரா) சத்­தி­யம் வாங்­கி­யி­ருந்­தார்,  நான் மறு­ப­டி­யும் நடிக்க வந்­த­தற்கு அது­வும் ஒரு முக்­கிய கார­ணம் என்று அவர் சொன்­னார்.

ஏவி.எம்­மின் ‘நிம்­மதி உங்­கள் சாய்ஸ்’ இரண்­டா­வது பாகத்­தின் மூலம் மவு­னிகா சீரி­யல்­க­ளில் நடிக்க ஆரம்­பித்­தார். அதை தொடர்ந்து ‘கலாட்டா குடும்­பம்,’ ‘சொந்­தம்,’ ‘டேக் இட் ஈசி வாழ்க்கை,’ பாலு­ம­கேந்­தி­ரா­வின் ‘கதை நேரம்,’ ‘சொர்க்­கம்,’ ‘சாரதா,’ ‘ஆனந்­தம் விளை­யா­டும் வீடு’ ஆகிய  சீரி­யல்­க­ளில் அவர் நடித்­தி­ருந்­தார். தற்­போது அவர் இரண்டு  சீரி­யல்­க­ளி­லும், படங்­க­ளி­லும் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்.

அவர் சொன்­ன­தா­வது:-

  “சினி­மா­வி­லே­யும், டிவி சீரி­யல்­கள்­ல­யும் இது­வரை மென்­மை­யான கேரக்­டர்­கள்­ல­தான் நடிச்­சி­ருக்­கேன். முதல் தட­வையா ‘ஆயுத  எழுத்து’ சீரி­யல்ல ‘காளி­யம்மா’ மிரட்­ட­லான கேரக்­டர்ல நடிக்­கி­றேன். அதோட தோற்­றம், மிரட்­ட­லான பார்வை, உடல் மொழி........ எனக்கே இப்போ ‘காளி­யம்­மா’வை ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்­சுன்னா பார்த்­துக்­குங்­க­ளேன். ரம­ண­கி­ரி­வா­சன்­தான் அந்த கேரக்­ட­ருக்­குள்­ளேயே என்னை கொண்டு வந்­த­வர். இப்­படி இப்­ப­டித்­தான் பார்க்­க­ணும், பேச­ணும்னு சொல்லி சின்ன சின்ன விஷ­யங்­களை கூட ரசிச்சு செதுக்­கி­னார். அப்­பு­றம், ‘அக்னி நட்­சத்­தி­ரம்’ சீரி­யல்­ல­யும் ரிஷி கேசவ் மனைவி ஜெயந்­தி­யாக நடிக்­கி­றேன்.

  முன்­னாடி ஒரு சொந்த தொழில் பண்­ணிக்­கிட்டு இருந்­தேன். ஆனா, அந்த பர­ப­ரப்பு, உற்­சா­க­மெல்­லாம் பறந்து போயி­டுற மாதிரி தொடர்ச்­சியா சில துக்­கங்­களை சந்­திக்க வேண்­டி­ய­தா­யி­டுச்சு. என் வாழ்க்­கை­யிலே ரெண்டு பேரை அதி­கமா நேசிச்­சுக்­கிட்டு இருந்­தேன். அந்த ரெண்டு பேர் யாருன்னா.... ஒருத்­தர், பாலு­ம­கேந்­திரா. இன்­னொ­ருத்­தர், என்­னோட சகோ­த­ரி­யோட பொண்ணு உதயா. 2014ல பாலு­வும், 2018ல உத­யா­வும் என்னை தவிக்­க­விட்­டுட்டு போயிட்­டாங்க. எவ்­வ­ளவு நாளைக்­குத்­தான் வீட்­டுக்­குள்­ளேயே அழுது புலம்­பிக்­கிட்டு இருக்க முடி­யும்? அது மட்­டு­மல்­லாம, நீ தொடர்ந்து நடிக்­க­ணும்னு பாலு வேற என்­கிட்ட சத்­தி­யம்  வாங்­கிட்­டார். அத­னால, மெல்ல மெல்ல சினி­மா­விலே நடிக்க ஆரம்­பிச்­சேன். இப்போ ரெண்டு சீரி­யல்­கள்ல (‘அக்னி நட்­சத்­தி­ரம்,’ ‘ஆயுத எழுத்து’) நடிச்­சுக்­கிட்டு இருக்­கி­றது அந்த சோக நிலை­மையை கொஞ்­சமா மறக்­க­டிக்­குது.’’Trending Now: