பெண்களுக்கு உண்மை அங்கீகாரம்!

07-01-2020 06:37 PM

கலர்ஸ் தமி­ழில் ‘உயிரே’ புதிய சீரி­யல் திங்­கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

இது ஒரு எளிய அப்­பாவி பெண்ணை பற்­றி­யது. திரு­மண சான்­றி­தழ் இல்­லா­மல் ஒரு குழந்­தையை பெறு­வது ஒரு பெண்­ணின் தனிப்­பட்ட விருப்­பம், உண்­மை­யில் அவ­ளு­டைய உரிமை என்­பது இதன் அடிப்­படை செய்தி. சமூ­கத்­தில் பெண்­க­ளுக்கு உண்­மை­யான முறை­யில் அங்­கீ­கா­ரம் வழங்­கச் செய்­வது இந்த சீரி­ய­லின் முக்­கிய நோக்­க­மா­கும்.

பவித்ரா தனது மறைந்த தந்தை கற்­பித்த போத­னை­களை மன­தில் நிறுத்தி, எளி­மை­யான, நேர்­மை­யான வாழ்க்­கையை வாழ்­கி­றாள். இந்­நி­லை­யில் அவள் ஒரு­வரை காத­லிக்­கி­றாள். அவ­ளது காதலை ஏற்­காத அவ­ளது தாய், காத­லனை கொன்று விடு­கி­றாள். மேலும் ஒரு குழந்­தைக்கு தந்­தை­யான செழி­யன் என்­ப­வரை திரு­ம­ணம் செய்து கொள்ள அவ­ளது தாய் வற்­பு­றுத்­து­கி­றாள். அவர் தனது குழந்­தைக்கு நல்­ல­தொரு தாயை தேடு­கி­றார். தந்­தி­ர­மிக்க அவ­ளது தாய் எப்­ப­டி­யா­வது இந்த திரு­ம­ணத்தை நடத்தி தனது திட்­டங்­களை சாதித்­துக் கொள்ள நினைக்­கி­றாள். இந்த நிலை­யில் தனது காத­ல­னால் தான் கர்ப்­பம் தரித்­தி­ருப்­பதை பவித்ரா உணர்­கி­றாள்.  இப்­படி போகி­றது கதை.

பவித்­ரா­வாக மனிஷா ஜித்­தும், செழி­ய­னாக வீரேந்­திர சவுத்­ரி­யும் இவர்­க­ளு­டன் மற்­றும் பல­ரும் நடிக்­கின்­ற­னர்.Trending Now: