300 சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு + புத்தாடை!

07-01-2020 06:36 PM

சின்­னத்­திரை நடி­கர் சங்­கத்­தின் சார்­பில் உறுப்­பி­னர்­க­ளுக்கு புத்­தாண்டு பரி­சு­கள், புத்­தாடை, இனிப்­பு­கள் வழங்­கும் விழா புத்­தாண்டு அன்று சின்­னத்­திரை நடி­கர் சங்க அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. இவ்­வி­ழா­வில் சின்­னத்­திரை நடி­கர் சங்க  துணைத்­த­லை­வர்  – டைரக்­டர் மனோ­பாலா கலந்து கொண்டு பரி­சு­களை வழங்­கி­னார்.

சின்­னத்­திரை நடி­கர் சங்க தலை­வர் ஏ. ரவி­வர்மா பேசும்­போது –

"சின்­னத்­திரை நடி­கர் சங்­கத்­தின் 16 ஆண்­டு­கால வர­லாற்­றில் உறுப்­பி­னர்­க­ளுக்கு பரி­சு­கள் வழங்­கு­வது இதுவே முதல் முறை­யா­கும். இதற்கு மன­மு­வந்து பங்­க­ளிப்பு செய்த சங்­கத்­தின் உறுப்­பி­னர்­கள் எம்.பி. பாலாஜி, சி. ஈஸ்­வ­ரன் இரு­வ­ருக்­கும்  சங்­கத்­தின் சார்­பாக நன்றி தெரி­வித்­துக்­கொள்கி றேன்.

 நமக்கு நாமே உதவி செய்து ஒத்­து­ழைப்பு கொடுக்க வேண்­டும் என்­கிற உய­ரிய நோக்­கத்­தில் சங்க உறுப்­பி­னர்­களே மற்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பரி­சுப் பொருட்­கள் வாங்­கிக் கொடுத்து உத­வு­வ­தற்கு தொடக்­கப் புள்­ளியை அமைத்­தி­ருக்­கி­றார்­கள். இது மேலும் பல­ருக்கு  உற்­சா­கத்­தை­யும் தூண்­டு­த­லை­யும் கொடுக்­கும்.

இந்த ஆண்டு நடி­கர்­கள், நடி­கை­கள் தலா 150 பேர் என்று மொத்­தம் 300 பேருக்கு பரி­சு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இப்­போது 1800 பேருக்கு மேல் உறுப்­பி­னர்­கள் உள்ள இந்­தச் சங்­கத்­தில் அடுத்த ஆண்டு அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்­கும் புத்­தாண்டு பரிசு வழங்­கு­வ­தாக என் தலை­மை­யி­லான சங்­கம் முடிவு செய்­துள்­ளது. அதற்கு ஒரு ஆரம்­ப­மாக இந்த விழா இருக்­கி­றது.

சங்க நல­னுக்­கான பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றோம். சின்­னத்­திரை நடி­கர் சங்­கம் மலே­சி­யா­வில் நட்­சத்­தி­ரக் கலை­விழா நடத்தி மாபெ­ரும் வெற்றி பெற்­றது அனை­வ­ருக்­கும் தெரி­யும். அதே போல சங்­கத்­தின் வளர்ச்­சிக்­கும் உறுப்­பி­னர்­க­ளின் நல­னுக்­கும் இந்த சங்­கம் தொடர்ந்து பாடு­ப­டும்; உறுப்­பி­னர்­கள்  நல­னுக்கு உத­வக்­கூ­டிய திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தும்’’ என்று குறிப்­பிட்­டார்.

பரி­சு­களை வழங்கி டைரக்­டர் மனோ­பாலா பேசும்­போது –

"இதை எனது குடும்ப விழா­வில் கலந்து கொள்­வது போல் உணர்­கி­றேன். இது ஒரு நல்ல முயற்சி. இது மேலும் தொடர வேண்­டும். வாழ்த்­துக்­கள்’’ என்­றார்.

விழா­வில் சின்­னத்­திரை நடி­கர் சங்க நிர்­வா­கி­கள் மற்­றும் ஏரா­ள­மான சின்­னத்­திரை நடி­கர், நடி­கை­கள் கலந்து கொண்­ட­னர்.Trending Now: