ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 25–12–19

24-12-2019 01:56 PM

இசை ஒன்றுதான்!

(சென்ற வார தொடர்ச்சி...)

தந்­தை­யின், தாத்­தா­வின் கன­வும் ஆசை­யும் பிள்­ளை­கள், பேரன்­கள் மூலம் நிறை­வே­றி­வி­டு­கின்­றன. அந்­நா­ளில் கிரா­மங்­க­ளில் திரு­விழா என்­றாலே தனி மகிழ்ச்­சி­தான். விசேஷ தினங்­க­ளில் கிரா­மங்­க­ளில் உற்­சா­கம் பர­விக்­கி­டக்­கும்.

கர­கம், நாட­கம், பாட்டு என்று ஊர்­மு­ழுக்க திரு­வி­ழாக்­கோ­லம் பூண்­டி­ருக்­கும். பண்­ணை­பு­ரத்­தில் பங்­குனி மாதத்­தில் நடக்­கும் திரு­வி­ழா­வில், கேர­ளா­வில் கங்­கா­ணி­யாக வேலை பார்த்­துக் கொண்­டி­ருந்த ராம­சா­மி­யும் வந்து கலந்து கொள்­வார். நாட­கங்­க­ளில் நடிப்­பார், பாடு­வார். கலை­க­ளில் ஆர்­வம் கொண்­டி­ருந்­தார்.

ராம­சா­மிக்கு ஊரில் தனி மரி­யாதை இருந்­தது. அந்­தக் காலத்­தி­லேயே காரைக்­குடி செட்­டி­மார்­கள் வீடு போல் பெரிய தூண்­கள், வராண்­டாக்­க­ளு­டன் பண்­ணை­பு­ரத்­தில் வீடு கட்­டி­ய­வர் ராம­சாமி. கேர­ளா­வில் வெள்­ளைக்­கார துரை­யு­டன் நெருக்­க­மாக பழக ஆரம்­பித்­த­வர். பிறகு தான் கிறிஸ்­த­வ­ராக மதம் மாறி டேனி­யல் ராம­சாமி என மாற்­றிக்­கொண்­டார். அப்­போதே அவ­ருக்கு ஏலக்­காய்த் தோட்­டம் எல்­லாம் இருந்­தது. அன்று அவர் நாட­கம், பாட்டு, நடிப்பு என ஆர்­வம் கொண்­டி­ருந்­தார். இன்று அவ­ரது பேரன்­கள் கார்த்­திக்­ராஜா, யுவன் ஷங்­கர் ராஜா இசை­ய­மைப்­பா­ளர்­க­ளா­க­வும் பேத்தி பவ­தா­ரிணி பாட­கி­யா­க­வும் இருக்­கி­றார்­கள். கங்கை அம­ர­னின் மகன்­க­ளான வெங்­கட் பிரபு, பிரேம்ஜி போன்ற பேரன்­கள் நடிப்­புத் துறைக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்.  ஆக அன்று தாத்­தா­வின் உணர்­வில் இருந்த கலை இன்று பேரன்­க­ளின் உணர்­வு­க­ளில்.

* ‘‘எங்­கள் வாழ்க்­கை­யில் 1969ம் ஆண்டு மறக்க முடி­யா­தது. எங்­கள் வாழ்க்கை சென்­னை­யில் தொடங்­கி­யது. இளை­ய­ராஜா, பார­தி­ராஜா, நான், பாஸ்­கர் ஆக நாலு பேரும் ராயப்­பேட்­டை­யி­லுள்ள 67, முத்து முதலி தெரு வீட்டு மாடி­யில் ஒரே அறை­யில் இருந்து வந்­தோம். சின்ன ரூம்­தான், எங்­க­ளுக்­குள் எந்த வேறு­பா­டு­மின்றி சேர்ந்து இருந்­தோம். பல நாட­கங்­க­ளுக்கு இசை­ய­மைப்பு செய்து வந்த நேரம் அது” என்­கி­றார் இசை­ய­மைப்­பா­ள­ரும் கவி­ஞ­ரு­மான கங்கை அம­ரன்.

* ‘‘அப்­போது நாங்­கள் கஷ்­டத்­தின் உச்­சக்­கட்­டத்­திலே  இருந்­தோம். நாட­கங்­க­ளின் ரிகர்­சல்­க­ளும் முத­லி­லேயே போய்­வி­டு­வோம். கார­ணம் அங்கு கிடைக்­கிற டிப­னுக்­கா­கவே முன்­வ­ரி­சை­யில் ஆஜ­ரா­கி­வி­டு­வோம். அப்­போது பார­தி­ராஜா கம்­பெ­னி­யில் முன்­னூறு ரூபாய் சம்­ப­ளத்­தில் சேல்ஸ்­மே­னாக இருந்­தார். தின­மும் அவர் நண்­பர்­க­ளி­ட­மி­ருந்து அஞ்சு ரூபாய் வாங்கி வரு­வார். நாங்க நாலு பேரும் (இளை­ய­ராஜா, பார­தி­ராஜா, பாஸ்­கர், கங்கை அம­ரன்) சேர்ந்து சாப்­பி­டு­வோம்.

“அப்­போது ஒரு வேளை முழுசா ஒரு சாப்­பா­டா­வது சாப்­பி­ட­ணும்னு ஆசைப்­பட்டு, சில நாள் திரு­வல்­லிக்­கே­ணி­யிலே குண­சீ­லன் என்­ப­வ­ரி­டம் இருந்து டிபன் கேரி­யர் வாங்கி, பொன்­னு­சாமி ஓட்­ட­லில் இருந்து ஒரு சாப்­பாடு வாங்கி வந்து நாலு பேரும் சேர்ந்து சாப்­பி­டு­வோம்” என தனது 1969ம் ஆண்­டு­கால வாழ்வை நினை­வு­கூர்­கி­றார் கங்கை அம­ரன். கஷ்­டங்­க­ளும் பசி­யும்­தானே அவர்­கள் மாபெ­ரும் கலை­ஞர்­க­ளாக உரு­வாக உறு­தி­யைக் கொடுத்­தன.

* கர்­நா­டக இசை, மேற்­கத்­திய இசை இரண்­டுக்­கும் என்ன வித்­தி­யா­சம் காண்­கி­றீர்­கள் என ஒரு தடவை இளை­ய­ரா­ஜா­வி­டம் கேட்­கப்­பட்­டது. அவர் சொன்ன பதில், “கர்­நா­டக இசை­யில் இருக்­கிற ஏழு சப்­தத்­தி­லும் மேற்­கத்­திய இசை­யில் இருக்­கிற ஏழு சப்­தத்­தி­லும் எந்த வித்­தி­யா­ச­மும் இல்லை. அதே­போல் நமது தாளத்­திற்­கும் மேற்­கத்­திய தாளத்­திற்­கும் எந்த மாறு­த­லும் இல்லை. இசைக்­க­ரு­வி­க­ளும் மொழி­க­ளும் மாறு­ப­டு­கின்­றன. பாடு­வ­தையோ, இசைப்­ப­தையோ மனி­தர்­கள் அவ­ர­வர் மனித தர்­மத்­திற்கு (இஷ்­டத்­திற்கு) ஏற்­ற­வாறு மாற்­றிக் கொள்­கி­றார்­கள். அணி­கிற ஆசை­யைக் கழற்­றி­விட்­டால் எல்லா மனி­தர்­க­ளும் ஒன்­று­தான் என்­ப­து­போல் இசை என்­பது ஒன்­று­தான்.”Trending Now: