சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 423– எஸ்.கணேஷ்

17-12-2019 06:50 PM

நடி­கர்­கள்  :  விஷால், ஐஸ்­வர்யா அர்­ஜூன், சந்­தா­னம், ஜான் விஜய், ஆதித்யா ஓம், மயில்­சாமி மற்­றும் பலர்.பாடல்­கள் : தமன், பின்­னணி இசை  :    சபேஷ்-­­­மு­ரளி, ஒளிப்­ப­திவு : வைத்தி எஸ்., எடிட்­டிங் : ஏ.எல். ரமேஷ், தயா­ரிப்பு :     எஸ். மைக்­கேல் ராயப்­பன், திரைக்­கதை,  இயக்­கம் : பூபதி பாண்­டி­யன்.

காரைக்­கு­டி­யில் திரு­ம­ணங்­க­ளுக்கு சமைக்­கும் பிர­ப­ல­மான சமை­யல்­கா­ரர் கௌர­வம்(சந்­தா­னம்). லோக்­கல் தாதா ஒரு­வ­ரின் திரு­ம­ணத்­துக்­கான ஆர்­டரை ஏற்­றுக்­கொள்­ளும்­படி வற்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார். அவ­ருக்கு உத­வு­வ­தாக கூறி அவ­ரி­டம் உத­வி­யா­ளர்­க­ளாக சர­வ­ண­னும் (விஷால்) அவ­ரது நான்கு நன்­பர்­க­ளும் வந்து சேரு­கி­றார்­கள். இவர்­கள் ஏற்­ப­டுத்­தும் குழப்­பத்­தால் கௌர­வ­மும், நன்­பர்­க­ளும் ஊரை விட்டு ஓடி ஒளிய வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது. திருச்­சிக்கு வரு­ப­வர்­கள் கௌர­வத்­தின் உத­வி­யு­டன் பெரிய ரெஸ்­டா­ரண்ட் திறப்­ப­தற்கு திட்­டம் போடு­கி­றார்­கள். ஆனால் பணத்தை பறி­கொ­டுக்­கும் கௌர­வம் தனி­யா­ளாக அல்­லல்­ப­டு­கி­றான்.

மலைக்­கோட்­டை­யில் முதன்­மு­த­லில் பார்க்­கும் ஐஸ்­வர்­யாவை கண்­ட­வு­டன் காத­லிக்­கி­றார் சர­வ­ணன். அவர்­கள் காத­லுக்கு குறுக்­காக ரவுடி கும்­பல்­கள் வரு­கின்­றன. காசி மற்­றும் மனா­வின் கும்­ப­லோடு மதுரை அண்­ணாச்­சி­யும் களத்­தில் இருக்­கி­றார். திரு­ம­ணத்­திற்­காக மனா ஐஸ்­வர்­யாவை வற்­பு­றுத்த, அவர்­க­ளி­ட­மி­ருந்து ஐஸ்­வர்­யாவை காப்­பாற்­றும் சர­வ­ணன் அவ­ளது பெற்­றோ­ரி­டம் தனது கடந்த கால வாழ்க்­கையை பற்றி கூறு­கி­றார். அண்­ணாச்­சி­யின் மகன் உட்­பட மூன்று நபர்­களை கொன்­ற­தற்­காக சிறைக்­குச் சென்று திரும்­பிய சர­வ­ணனை அனை­வ­ரும் அதிர்ச்­சி­யு­டன் பார்க்­கி­றார்­கள். தான் தங்­கை­யாக நினைத்த அனாதை சிறு­மியை கொன்­ற­தற்கு பழி­வாங்­கவே சர­வ­ணன் அந்த கொலை­களை செய் துள்­ளான்.

தனது மக­னின் இறப்­பிற்கு பழி­வாங்க தேடி­வ­ரும் அண்­ணாச்சி மனா கும்­ப­லு­டன் சேர்ந்து சர­வ­ணனை அழிக்­கத் துடிக்­கி­றான். சர­வ­ணன் இவர்­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்றி ஐஸ்­வர்­யாவை தேர்வு எழுத வைக்­கி­றான். இறு­திப் போராட்­டத்­தில் சர­வ­ணன் மறு­ப­டி­யும் கொலைக் குற்­றத்­தில் மாட்­டா­த­வாறு காசி கும்­பல் அண்­ணாச்­சி­யை­யும் மனா­வை­யும் கொல்­கி­றது. ஐஸ்­வர்­யா­வின் ஆசைப்­படி அவளை மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சேர்க்­கி­றான். தங்­க­ளால் படா­த­பா­டு­பட்ட கௌர­வத்­திற்­காக நன்­பர்­கள் இணைந்து ஓட்­டல் ஒன்றை உரு­வாக்­கித் தரு­கி­றார்­கள்.Trending Now: