ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 18–12–19

17-12-2019 06:48 PM

நகைச்சுவை உணர்வு!

(சென்ற வார தொடர்ச்சி...)

இளை­ய­ரா­ஜா­வுக்கு, நல்ல நகைச்­சுவை உணர்வு உண்டு. ஒரு முறை ராஜா­வும் அம­ர­னும் திருச்­சிக்­குப் பக்­கத்­தில் காரில் சென்று கொண்­டி­ருந்­த­னர்.

“அமர்! பக்­கத்­துல குண­சீ­லம்ங்­கிற ஊரில் கோapல் இருக்கு. அங்கே பைத்­தி­யம் குண­மா­கிற பிர­சித்தி பெற்­றது. நீ அவ­சி­யம் போக­ணும்” என்­றார் ராஜா.

“என்ன விசே­ஷம்>” – கங்கை அம­ரன் கேட்­டார்.

“அங்கே போனா தீராத பைத்­தி­யம்­கூ­டக் குண­மா­யி­டு­மாம்” – என்­றார் ராஜா.

“எனக்கு நம்­பிக்கை இல்லை” – அம­ரன்.

“ஏன்?” – ராஜா.

“ஏற்­க­னவே போயிட்டு வந்த உனக்கே இன்­னும் குண­மா­க­லையே?” – சிரிக்­கா­மல் சொன்­னார் அம­ரன். அதைக் கேட்டு சத்­தம் போட்டு சிரித்­தார் ராஜா.

* அவ­ருக்கு இசை­யில் அதிக நாட்­டம் உண்டு. சரி அந்த டைரக்­ட­ருக்கு யாரு­டைய பாடல்­கள் பிடிக்­கும்?

“பொது­வாக எல்லா இசை­யும் பிடிக்­கும் என்­றா­லும், என் இளை­ய­ரா­ஜா­வின் இசை பிடிப்­ப­து­போல் வேறு எந்த இசை­யும், எந்த நிலை­யி­லும் என் இத­யம் கவர்ந்­த­தில்லை” என்று உணர்ச்சி பொங்க பேசும் அவர் இயக்­கு­நர் இம­யம் பார­தி­ரா­ஜா­தான். இத்­தனை பாசம் கொண்ட இவ­ருக்­கும் ராஜா­வுக்­கும் இடை­யில் ஏன் இடை­வெளி? வறு­மை­யில் வாடும்­போது இருந்த நெருக்­க­மான நட்பு வச­தி­யும் புக­ழும் வந்த பிறகு இயல்­பாக இணைய முடி­ய­வில்லை. அது ஏன்? – வேதனை கலந்த புதிர்!

* ஒரு சம­யம் சிவா விஷ்ணு கோயி­லில் உட்­கார்ந்து கஷ்ட காலம் எப்போ முடி­யும் என மன­சுல நினைச்­சுக்­கிட்டே ஒரு பெரு­மூச்சு விட்­டேன். அரு­கில் ஒரு பெரி­ய­வர் அந்த பெரு­மூச்­சி­லி­ருந்தே என் நிலை­மையை புரிந்து கொண்­ட­வ­ராக என் பக்­கம் திரும்பி அமர்ந்­தார்.

“தம்பி! நாம் எல்­லா­வற்­றை­யும் இழந்து விட்­டா­லும், தைரி­யத்தை மட்­டும் விட்­டு­வி­டக்­கூ­டாது தைரி­யத்தை மட்­டும் நாம் கைக்­கொண்­டு­விட்­டால் எல்­லாமே கைகூ­டி­வி­டும்” என்று கூறி­னார்.

தைரி­ய­லட்­சு­மி­யைக் கைவி­டா­தி­ருந்­த­தால் எப்­படி ஒரு இள­வ­ர­சன் தோல்வி நிலை­யி­லி­ருந்து வெற்றி வீர­னாக மாறி­னான் என்ற கதை­யை­யும் சொன்­னார்.

அதைக் கேட்டு புது நம்­பிக்­கை­யு­டன் அறைக்­குத் திரும்­பு­கி­றேன். இளை­ய­ராஜா, கங்கை அம­ரன், பார­தி­ராஜா ஆகி­யோர் என்­னைப் பார்த்து ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றார்­கள். கையில் காசு இல்­லா­மல் எப்­படி இந்த பாஸ்­கர் உற்­சா­க­மாக இருக்­கி­றான் என நினைப்­ப­து­போல் தெரிந்­தது. அப்­போது வெளி­யி­லி­ருந்து ஒரு குரல் வரு­கி­றது.

“இங்கே ஹார்­மோ­னி­யம், தபேலா, கிடார் வாசிக்­கிற பையன்­கள் இருக்­கி­றாங்­க­ளாமே? அவங்க ரூம் எது?” என்று வாட்ச்­மே­னி­டம் யாரோ விசா­ரிக்­கி­றார்­கள்!

வாடி­யி­ருந்த எங்­கள் முகத்­தில் சந்­தோஷ மலர்ச்சி ஏற்­பட்­டது. இன்­றைய உண­வுக்கு இறை­வன் வழி­செய்து விட்­டான் என நினைத்­துக்­கொண்­டோம். அம­ரன் வெளியே போய் விசா­ரித்த மனி­தரை அறைக்கு அழைத்து வந்­தான். அவர்­தான் முதன்­மு­த­லில் சென்­னை­யில் இசை நிகழ்ச்­சி­யில் எங்­க­ளுக்­கும் எங்­கள் இசைக்­கும் இரை­ய­ளித்­த­வர். அவர் பெயர் நீல­கண்­டன்.

இயக்­கு­நர் எஸ்.ஏ. சந்­தி­ர­சே­க­ரின் மாம­னார் பாடகி ஷோபா சந்­தி­ர­சே­க­ரின் தந்தை. நடி­கர் விஜ­யின் தாத்­தா­தான் அவர். அவர்­தான் சென்­னை­யில் எங்­களை அரங்­கேற்­றி­னார். அவர் இப்­போது இல்லை. கஷ்ட காலத்­தில் அவர் அளித்த வாய்ப்பு மறக்க முடி­யா­தது.

அன்று சிவா விஷ்ணு கோயி­லின் பின்­பு­றம் உட்­கார்ந்து எனக்­குத் தைரி­யம் கொடுத்த அந்­தப் பெரி­ய­வரை நாங்­கள் வெற்றி பெற்ற நேரங்­க­ளில் நினைத்­துக் கொள்­வேன். அவரை பல­முறை தேடி­யி­ருக்­கி­றேன். என் கண்­ணில் பட­வில்லை. ‘தெய்­வம் நல்­ல­வர் ரூபத்­தில் வந்து நல்­லது சொல்­லுமோ…’ என்­கி­றார் ராஜா­வின் அண்­ணன் பாஸ்­கர்.Trending Now: