மே.இ.தீவு அணி - இந்திய அணிக்கு இடையே சென்னையில் கிரிக்கெட் போட்டி: போக்குவரத்தில் மாற்றம்

15-12-2019 03:35 PM

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் இன்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான  ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கத்தைச் சுற்றியுள்ள 5 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதே போன்று, பாரதி சாலையில் காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் உரிய அனுமதி சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

கெனால் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை, வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாலாஜா சாலையில் அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.

காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சாலையில் இருந்து வரும் அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலை செல்ல அனுமதிக்கப்படும். 

அனுமதி சீட்டு இல்லாமல் வரும் வாகனங்கள் கடற்கரை சாலை, சுவாமி சிவானந்தா சாலையிலும் உரிய வழித்தடங்களில் சென்று வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணி ரன் விவரம்

பிற்பகல் 1:30 மணிக்கு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான  ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துவங்கியது.  முதலில் இந்திய அணி மட்டை வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களும்

26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களும்

38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களும்

45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களும்  

47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களும்  

47.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களும்  

50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இதனால் இந்தியா 7 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் 2விக்கெட்டுக்களை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இருவரும் நிதானமாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. 

ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.  அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. 

 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.  இருவரும் அரைசதம் அடித்தனர்.

இந்தியாவின் ஸ்கோர் 36.4 ஓவரில் 194 ரன்கள் எடுத்திருக்கும்போது ஷ்ரேயாஸ் அய்யர் 88 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

39.4 ஓவரில் 210 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பந்த் 69 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 71 ரன்கள் சேர்த்தார்.

கேதர் ஜாதவ் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். 

இறுதியில் ஷிவம் டுபே  9 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது.

மே.இ. தீவு அணி ரன் விவரம்

பின்னர், மேற்கிந்திய தீவுகள் அணி மட்டைவீச்சுக்கு தயாரானது.

மேற்கிந்திய தீவுகள் அணி  7.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 19 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களும்

32 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களும் 

34 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களும்எடுத்து விளையாடி வருகிறது. Trending Now: