என் பெயர் அறிவு!

20-11-2019 03:04 PM

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர், அரசு மேல்நிலைப்பள்ளியில், 1993ல், 6ம் வகுப்பு படித்தேன். எனக்கு ஆண்களுக்கான பெயரை, சூட்டிவிட்டனர் பெற்றோர்.

முதல் நாள் தமிழ் பாடவேளையில், வகுப்பில் பேசியதாக, என் பெயரை கரும்பலகையில் எழுதியிருந்தான் மாணவர் தலைவன். அதை வாசித்து, 'எழுந்து நில்...' என்றார் தமிழாசிரியை.

எழுந்து நின்ற என்னை பார்த்தவர், 'பையன் பெயரை தானே கூறினேன்... நீ ஏன், எழுந்திருக்கிறாய்...' என்றார்.

அது தான் என் பெயர் என்பதை கூறினேன்.

சக மாணவ, மாணவியர் ஏளனமாக சிரித்தனர்; மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.

அவர்களை அதட்டிய ஆசிரியை, 'படிப்பதற்கு பெயர், தடையே இல்லை; இந்த பெயர், வருங்காலத்தில் புகழை பெற்றுத் தரும்...' என்று, ஆறுதல் கூறினார். நன்றாக படித்து, அறிவியல் ஆசிரியையாக பணிபுரிகிறேன். இப்போது, 27 வயதாகிறது; அந்த சம்பவம், மனதை விட்டு மறைய மறுக்கிறது.

- பெயரை விரும்பாத வாசகி, திண்டுக்கல்.Trending Now: