சுயதேடலை நோக்கி பயணிக்கிறேன்! – நீலிமா இசை

19-11-2019 05:43 PM

“சினிமாவிலே நீங்க ஏன் ஹீரோயினா நடிக்கலேன்னு பல பேரும் என்னை கேக்கிறாங்க. எல்லாருக்கும் அந்த ‘ஹீரோயின்’ சான்ஸ் கிடைக்காது. எனக்கும் ஹீரோயினா நடிக்கணும்ங்கிற கனவும் இருந்ததில்லே!” என்று அமைதியாக சொன்னார் நடிகையும் தயாரிப்பாளருமான நீலிமா ராணி. இப்போது அவர் நீலிமா இசை (அவருடைய கணவரின் பெயர், இசை).

‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை தயாரித்துக் கொண்டிருக்கும் அவர், பேட்டியளிக்கும் போது ராதிகாவை மிகவும் உயர்த்தி சொன்னார்.                                                                                                                                              

“என்னோட ஆபீஸ், பெர்சனல்ன்னு எந்த விஷயத்தை எடுத்துக்கிட்டாலும், அதுக்கு மூலக்காரணம் யாருன்னா, அவர் ராதிகா மேம்தான். 1990கள்ல அவரோட சீரியல்கள்ல அவரோட மகளா நடிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு பிறகு, அவர் தயாரிச்ச ‘செல்லமே,’ ‘வாணி ராணி’ உட்பட பல சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அவங்க கூட இருந்தாலே,  நாம எதையாவது சாதிக்கணும்ங்கிற தேடல் நமக்கு தானா வந்திடும். அப்படிப்பட்டவங்க நம்ம கூட இருந்தா, நாமளும் அவங்கள மாதிரியே ஆயிடுவோம். இப்போ பாருங்க... நானே ஒரு சீரியல் புரொடியூசர் ஆயிட்டேன். அதுக்கும் ராதிகா மேம்தான் காரணம். எனக்கு என்னைக்கும் ரோல் மாடல், மேம்தான்.

நான் ‘தேவர் மகன்’ படத்திலே ஒரு குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். சிவாஜி சார்ல இருந்து ஆரம்பிச்ச என்னோட தொழில், இப்போ ராதிகா மேம் வரைக்கும் டிராவல் பண்ண வைக்குது. சிவாஜி சார் கையால நான் வாங்கின அவார்டு என்னைக்கும் எனக்கு பொக்கிஷம். ‘மொழி,’ ‘ராஜாதி ராஜா,’ ‘நான் மகான் அல்ல,’ ‘சந்தோஷ் சுப்பிரமணியம்,’ ‘தம்,’ விரும்புகிறேன்’ உட்பட பல படங்கள்ல நடிச்சிருக்கேன். திருமுருகன் சார் டைரக்க்ஷன்ல உருவான ‘மெட்டி ஒலி’யிலே இருந்து என்னோட சீரியல் வாழ்க்கை ஆரம்பிச்சிச்சு. நான் எதையும் திட்டம் போடுறதில்லே. நம்ம வாழ்க்கையிலே எது, எப்போ நடக்கும்னு தெரியவே தெரியாது. சினிமாவிலே நான் ஏன் ஹீரோயினா நடிக்கலேங்கிறது பல பேரோட கேள்வியா இருக்கு. என்னை ஹீரோயினா நடிக்க வச்சிருந்தாங்கன்னா நான் நடிச்சிருப்பேன்?

கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம். சிவபெருமான், ஷீரடி சாய்பாபா, இயேசுன்னு எல்லாரையும் பாகுபாடு இல்லாம கும்பிடுவேன். கடந்த அஞ்சு வருஷமா நான் ரம்ஜான் நோன்பு இருந்துக்கிட்டு வர்றேன். என்னை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம். யார் ஒருத்தருக்கும் குருமாரோட ஆசீர்வாதம் எப்போதும் தேவை. சத்குருவை குருவா பார்க்கிறேன். ஆசிரியர்கிட்ட கத்துக்கிற மாதிரி குருமார்கள்கிட்ட நல்ல விஷயங்கள், போதனைகளை கத்துக்க முடியும். நான் நிறைய ஆன்மிக தலங்களுக்கு போவேன். நிறைய புக்ஸ் படிப்பேன். ஒரு மனுஷனுக்கு சுயதேடல் முக்கியம்னு நினைப்பேன். அந்த தேடலை நோக்கித்தான் என்னோட பயணம் இருக்கு.

இன்னைக்கு ஜனங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. முன்னெல்லாம் எனக்கு டிஆர்பின்னா என்னன்னே தெரியாது. ஆனா, இப்போ அதையெல்லாம் ஜனங்க தெரிஞ்சு வச்சிருக்காங்க. அதனால, அவங்களோட விருப்பத்துக்கு ஏத்த விஷயங்களை சீரியல்ல கொடுக்க வேண்டியிருக்கு.Trending Now: