அரசியல் ஆளுமைகளோடு நேர்காணல்!

19-11-2019 05:38 PM

கலைஞர் செய்திகள் டிவியில் ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ‘வினா’ ஒளிபரப்பாகிறது.

இது அரசியல் ஆளுமைகளுடனான நேர்காணல் நிகழ்ச்சி. அன்றாட அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில், மக்களின் மனதில் எழும் கேள்விகளோடு விருந்தினர்களை சந்திக்கும் நிகழ்ச்சி. விருந்தினர்களை முழுவதும் பேச அனுமதித்து பிறகு எழும் யதார்த்த கேள்விகளின் அடிப்படையில் பயணிக்கிறது.

தமிழக சட்டசபை எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பார்லிமென்ட் உறுப்பினருமான தொல். திருமாவளவன், பார்லிமென்ட் உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஆந்திர மாநில எம்.எல்.ஏ., ரோஜா போன்ற அரசியல் தலைவர்களோடு பயணித்திருக்கும் இந்த நிகழ்ச்சி, இன்னும் பல அரசியல் தலைவர்களோடும் தொடர்ந்து பயணிக்கிறது.Trending Now: