விஜய் டிவியின் காமெடி சமையல் ஷோ!

19-11-2019 05:37 PM

விஜய் டிவியில் ‘குக்கு வித் கோமாளீஸ்’ நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ரஷன், நிஷா இருவரும் தொகுத்து வழங்குகின்றனர்.

சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள் சமையலில் எதுவும் தெரியாத கோமாளிகளுடன் சமைக்க வேண்டும்.  இரண்டு நபர்களும் சேர்ந்து சமைக்கும் சமையல் அறையில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிகைகள் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், ஞானசம்பந்தம், மோகன் வைத்யா, உமா ரியாஸ், தாடி பாலாஜி, பிரியங்கா, ரோபோ சங்கர், கோமாளிகளாக  பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பப்பு, சக்தி, புகழ், ஷிவாங்கி, பாலா ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்கின்ற னர்.

செப் வெங்கடேஷ் பட், செப் தாமு ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள்.Trending Now: