கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 205

18-11-2019 03:11 PM

காவி வண்ணமும் திருவள்ளுவர் எண்ணமும்

அண்­மை­யில்,  தமிழ்­நாடு பா.ஜ.  ஒரு டுவிட்­டில் திரு­வள்­ளு­வரை காவி உடை­யு­டன் சித்­த­ரித்­த­தும், கீச்­ச­கம் (டுவிட்­டர்) மட்­டுமா அல்­லோல கல்­லோ­லப்­பட்­டது? செய்தி தொலைக்­காட்சி சேனல்­க­ளி­லும் ஒரே அமர்க்­க­க­ளம்! அந்த சேனல்­க­ளின் நெறி­யா­ளர்­கள் அறச்­சீற்­றத்­து­டன் கிளம்­பி­ய­து­தான் அதற்­குக் கார­ணம்!

‘‘எத்­த­னையோ பிரச்­னை­கள் இருக்கு.  ஆனா திரு­வள்­ளு­வ­ரின் காஸ்­டி­யூமை மாற்­று­வ­து­தான் உங்­க­ளுக்கு முக்­கி­ய­மான வேலை­யா­கப் போய்­விட்­டது,’’ என்று தாங்­க­மு­டி­யாத கோபத்­தைத் தன்­னு­டைய சூடான சுவா­சத்­தால் வரை­மு­றை­யின்றி வெளிப்­ப­டுத்­தி­னார், வெறி­யா­ள­ராக   தென்­பட்ட ஒரு நெறி­யா­ளர்.

இன்­னொரு சேன­லின் நெறி­யா­ளினி, ‘‘வள்­ளு­வ­ரின் வண்­ணத்­தை­யும் வகை­ய­றா­வை­யும் அரை நூற்­றாண்­டுக்கு முன்பே மாற்­றி­விட்­டார்­கள்...அவ­ரு­டைய சமய அடை­யா­ளங்­களை எல்­லாம் நீக்­கி­விட்டு அவரை உல­க­ம­யம் ஆக்­கி­விட்­டார்­கள்...நீங்­கள் ஏன் மீண்­டும் காவி­ம­யம் ஆக்­கு­கி­றீர்­கள்?’’, என்று  ‘மதச்­சார்­பற்ற’ திரு­வள்­ளு­வர் வடி­வத்­தின் சார்ப்­பாக, கீறல் விழுந்த இசைத்­தட்­டைப்­போல் கிறீச்­சிட்­டுக்­கொண்­டி­ருந்­தார்.  

ஒரு குறிப்­பிட்ட கட்­சி­யின் அர­சி­யல் பிர­சா­ரத்­திற்­காக அரசு எந்­தி­ரத்­தால்  திரு­வள்­ளு­ வ­ரின் உரு­வம் ஒரு­வி­த­மா­கப் பரப்­பப்­பட்­டி­ருக்­கும்­போது, அவரை வேறு­வி­த­மா­கச் சித்­த­ரிப்­ப­தில் ஏதோ சூழ்ச்சி இருக்­கி­றது என்­ப­து­தான் இன்­றைய ஊடக நெறி­யா­ளர்­க­ளின் அச்­ச­மாக இருக்­கி­றது. பத்­தி­ரி­கைச் சுதந்­தி­ரம், தனி­ந­ப­ரின் கருத்­துச் சுதந்­தி­ரம் என்று சிலிர்த்­துக்­கொள்­ளும் ஊட­கங்­க­ளின் லட்­ச­ணம் இது.

இதை மன­தில் கொண்டு இன்­னொரு விஷ­யத்­தைக் கவ­னி­யுங்­கள். குருட்­சேத்­தி­ரப் போர்க்­க­ளத்­தில் விஜ­ய­னுக்­குத் தேரோட்­டும் கண்­ண­னின் வடி­வத்­தைப் பல ஓவி­யங்­க­ளில் பார்த்­தி­ருப்­பீர்­கள். குறிப்­பாக கீதோ­ப­தேச சித்­தி­ரங்­க­ளில் கவ­னித்­தி­ருப்­பீர்­கள். கண்­ண­னின் மன­தைக் கவ­ரும் கனி­வான வடி­வம்­தான் இத்­த­கைய பல ஓவி­யங்­க­ளில் இருக்­கும். ஆனால், ‘பற்­ற­லர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்­தன் தன் தேர் முன் நின்­றானை’  என்று திரு­மங்­கை­யாழ்­வார் பாடிய திரு­வல்­லிக்­கேணி பார்த்­த­சா­ர­திப் பெரு­மாளை நீங்­கள் தரி­ச­னம் செய்­தால், அத்­த­கைய கனி­வான வடி­வத்­தில் நீங்­கள் அவ­னைக் காண­மாட்­டீர்­கள்.

கோயி­லின் மூல ஸ்தானத்­தில் இருக்­கும் பெரு­மான், முறுக்­கிய மீசை­யு­ட­னும் வானோங்­கும் நெடி­து­யர்ந்த வடி­வத்­து­ட­னும் வித்­தி­யா­ச­மாக விளங்­கு­வ­தைக் காண்­பீர்­கள்.

இந்த வகை­யில் பன்­மு­கத்­தன்­மை­யு­ட­னும் வடி­வங்­க­ளு­ட­னும் மர­பு­சார்ந்த பண்­பாடு விளங்­கும்­ ­போது, அதை ஒற்­றைச் சம்­மட்­டி­யால் தவி­டு­பொ­டி­யாக்­கத் துடிக்­கி­றது, அனைத்­தை­யும் ஒரே சீரு­டைக்­குள் போட்டு அடைக்க நினைக்­கும் இன்­றைய குறு­கிய அடிப்­ப­டை­வாத   ‘மதச்­சார்­பற்ற’  பார்வை!  

சினி­மா­வைப் பிர­சார சாத­ன­மாக்கி, அரசு கட்­டி­லில்  புரண்ட கட்­சி­கள், திரு­வள்­ளு­வரை எத்­தனை முறை திரை ஆரா­தனை செய்­தி­ருக்­கின்­றன என்ற மீள்­காட்­சியை முடுக்­கி­விட்­டால், ‘ஒரு முறை கூட இல்லை’ என்­கிற பதில் கிடைக்­கும்.  ஐந்து முதல்­வர்­க­ளைப் பெற்­றி­ருந்­தும், ஒரு முறை கூட யாரும் திரு­வள்­ளு­வரை திரை­யில் வடிக்­க­வில்லை!

அது­மட்­டு­மல்ல...சுமார் தொண்­ணூறு வரு­டங்­க­ளாக வளர்ந்து வரும் தமிழ் சினிமா சரித்­தி­ரத்­தில், ஒரே ஒரு முறை­தான் திரு­வள்­ளு­வர் திரை நாய­க­ராக வார்க்­கப்­பட்­டி­ருக்­கி­றார் என்­பது விந்­தை­யி­லும் விந்­தை­தான்.

அப்­ப­டியா? திரு­வள்­ளு­வர் திரை­யில் வந்­தாரா, அது­வும் கதை நாய­க­ரா­கவா? எப்­போது? எப்­படி? யாரால்?

முப்­ப­து­க­ளில் சில படங்­களை டைரக்ட் செய்த  வட­நாட்­டுக்­கா­ர­ரான பிரேம் சேத்னா,  3.1.1941 அன்று வெளி­வந்த  ‘திரு­வள்­ளு­வர்’ திரைச்­சித்­தி ­ரத்தை இயக்­கி­னார். ‘அருட்­பெ­ரும் ஜோதி’ என்ற திரைப்­ப­டத்தை 1971ல் எடுத்து,  தன்­னு­டைய நீண்ட திரை உல­கப் பணியை முடித்­துக்­கொண்ட ஏ.டி.கிருஷ்­ண­சாமி அய்­யங்­கார் (திரு­வள்­ளு­வர் பாடல் புத்­த­கத்­தில் ஏ.டி.கே. அப்­ப­டித்­தான் குறிப்­பி­டப்­ப­டு­கி­றார்), உதவி இயக்­கு­ந­ராக இருந்­த­து­டன், ‘திரு­வள்­ளு­வர்’  படத்­தின் உதவி எழுத்­தா­ள­ரா­க­வும் செயல்­பட்­டார். படத்­தின் கதை, வச­னத்தை எழு­தி­ய­வர், பிர­பல நாவ­லா­சி­ரி­யர் ‘வடு­வூர்’ துரை­சாமி அய்­யங்­கார்!  

படத்­தின் தலைமை வேடத்­தில் நடித்­த­வர், அந்­நாள் பிர­பல குணச்­சித்­திர நடி­க­ரான ‘சிறு­க­ளத்­தூர்’ சாமா. தியா­க­ராஜ பாக­வ­த­ரின் வெற்­றிப்­ப­ட­மான ‘சிந்­தா­ம­ணி’­­யில் சாமா கிருஷ்­ண­னாக நடித்­தார்; பாக­வ­த­ரின் ‘அம்­பி­கா­ப­தி’­­யில் கம்­ப­ராக நடித்­தார். எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி நடித்த ‘சகுந்­த­லை’­­யில், சகுந்­த­லை­யின் வளர்ப்­புத்­தந்­தை­யான கண்வ முனி­வ­ராக நடித்­த­வர் இவர்­தான்.

திரு­வள்­ளு­வரை  குறித்து எத்­த­னையோ கேள்­வி­கள் உண்டு. சர்ச்­சை­கள் உண்டு...கதை­கள் உண்டு. அவற்­றை­யெல்­லாம் மீறி ‘திரு­வள்­ளு­வர்’ திரைப்­ப­டம், திரு­வள்­ளு­வ­ரின் வாழ்க்­கை­யை­யும் திருக்­கு­ற­ளின் உயர்­வை­யும் ஒரு­வி­த­மாக முன்­வைத்­தது.

படத்­திற்­குப் பாடல்­கள் எழு­திய ‘பாப­நா­சம்’ சிவன், குற­ளின் பெரு­மையை இவ்­வாறு பாட்­டில் அமைத்­தார்:

‘‘திருக்­கு­றள் எனும் புதை­யல் இருக்க, மற்

றொரு குறை நமக்­கேது

இருக்­குப் புக­லும் அறம், பொருள், இன்­பம்

ஏதும் தரும் வான­மு­தி­னும் இனிய

திருக்­கு­றள் எனும் புதை­யல் இருக்க, மற்

றொரு குறை நமக்­கேது’’.

‘இருக்கு புக­லும்’ என்­ப­தில் ரிக் வேதம் சுட்­டப்­ப­டு­கி­றது. இந்­திய ஞானத்­தின் வழி­யில்­தான் குறள்  அமைந்­தி­ருக்­கி­றது என்­ப­தைப் பாடல் கூறு­கி­றது.

‘‘மயி­லாப்­பூர் என்­கிற மயிலை சேத்­தி­ரத்­தில், ஆதி-­­ப­க­வன் என்­ப­வ­ருக்கு புத்­தி­ர­ராக அவ­த­ரித்து, ஊழ்­வி­னை­யின் பய­னாக அனா­தை­யாகி, மக்­கட் பேறில்லா ஒரு வேளா­ளர் வீட்­டில் வள­ருங்­கால்,  வளர்ப்­புத் தந்­தை­யின் பொறா­மை­கொண்ட பந்­து­மித்­தி­ரர்­க­ளால் அவ­ருக்கு ஏற்­பட்ட இடைஞ்­சல்­க­ளைக் கண்டு சகி­யா­மல், பால வய­தி­லேயே போகர் மலை­ய­டைந்து, திரு­மூ­ல­ரின் சீட­ரா­னார்’’ என்று  செல்­கி­றது ‘திரு­வள்­ளு­வர்’ படத்­தின் திரைக்­கதை. நான் இது­வ­ரைப் படித்த தமிழ் இலக்­கிய வர­லாற்று நூல்­க­ளில் இந்­தத் திரு­வள்­ளு­வர்- திரு­மூ­லர் தொடர்பை  வாசித்­த­தில்லை.

திரு­மூ­ல­ரின் கட்­ட­ளைப்­படி ஒரு கிரா­மத்­திற்­குச் சென்று அங்கு அட்­டூ­ழி­யம் செய்த ஒரு வேதா­ளத்தை சம்­ஹா­ரம் செய்து, பின்பு, அருந்­ததி, அன­சூயா முத­லிய பதி­வி­ர­தை­க­ளுக்கு நிக­ரான வாசு­கி­யைத் திரு­வள்­ளு­வர் மணக்­கி­றார்.    

வாசு­கி­யாக நடித்த ‘திரு­நெல்­வேலி’ பாப்­பா­வு­டன் வள்­ளு­வ­ராக நடித்த சாமா டூயட் பாடி­னார், நெச­வுத் தொழி­லைப் புகழ்ந்து!

வள்­ளு­வர் - சாந்­தம் அளிப்­பது நெய்­தல், உல­கில்

சாந்­தம் அளிப்­பது நெய்­தல்

வாசுகி - பர ஹிம்­சைக்­கொரு பேச்­சில்லை

உப­கா­ர­மு­மாம் நூற்­றி­டு­தல்

வள்­ளு­வர் - உண­வாடை பிறர் கைத்­த­ய­வால்

ஆவ­தெ­னில் அதோர் வாழ்வோ

வாசுகி - பாப­மில்­லா­தோர் தொழி­லி­துவே

பர­ம­யோக சமா­தி­யிதே!

எல்­லோ­ரும் சர்­கா­வில் நூற்­க­வேண்­டும்... குறைந்­த­பட்­சம் தாங்­கள் உடுத்­தும் உடை­க­ளுக்­கான தேவை­யைத் தாங்­களே  பூர்த்தி செய்­து­கொள்­ள­வேண்­டும் என்று காந்­திஜி செய்­து­வந்த பிர­சா­ரத்­தோடு வள்­ளு­வ­ரின் வாக்கு ஒத்­துப்­போ­கும்­படி ‘பாப­நா­சம்’ சிவ­னின் சில வரி­கள் இருக்­கின்­றன.

படத்­தின் ஒரு திருப்­பத்­தில், வள்­ளு­வரை எந்த ஊர் என்று ஒரு­வன் கேட்­கின்­றான். ‘பாப­நா­சம்’ சிவ­னின் தொடுப்­பில், அவர் கூறு­கி­றார்:

‘‘எந்த ஊர் என்­றீர்

இருந்த ஊர் நீ கேளீர்

அந்த ஊர் செய்தி அறி­யீரோ’’.

கண்­ண­தா­சன் இதை ,

‘‘எந்த ஊர் என்­ப­வனே

இருந்த ஊரை சொல்­லவா

அந்த ஊர் நீயும் கூட

அறிந்த ஊர் அல்­லவா’’ என்று தொடுத்­தார், ‘காட்டு ரோஜா’ படத்­தில்!

மயி­லை­யில் நெச­வுத் தொழில் செய்து வாசு­கி­யு­டன் வாழ்ந்த வள்­ளு­வர், ‘தமிழ் வேதம்’ என்று கூறப்­ப­டும் திருக்­கு­றளை இயற்­றி­னார். ‘தமிழ் வேதம்’ என்று அது புக­ழப்­பட்­டது, சமஸ்­கி­ருத மொழி­யில் உள்ள வேதத்­திற்கு விரோ­த­மா­னது என்ற பொரு­ளில் அல்ல, அந்த வேதத்­தைப் போல் உயர்ந்­தது என்ற பொரு­ளில்­தான்!

சமஸ்­கி­ரு­த­மும் தமி­ழும் தாய், தந்­தை­போ­லத்­தான் தமிழ்­நாட்­டில் விளங்­கி­யி­ருக்­கின்­றன...ஆனால் இன்­றைய பல சந்­த­தி­கள், பல­வந்த விவா­க­ரத்­தின் பிள்­ளை­கள்!

தமிழ்ச்­சங்­கப் புல­வர்­க­ளின் கர்வ பங்­கத்­திற்­குப் பிறகு குற­ளுக்கு அங்­கீ­கா­ரம் கிடைப்­ப­தும், மதுரை சொக்­கே­ச­னின்  திரு­வ­டி­யைப் பிடித்­துக்­கொண்டு ‘ஆனந்­தம் ஆனந்­தம் கொண்­டேனே’ என்று திரு­வள்­ளு­வர் அகம் மகிழ்­வ­து­மா­கப் ‘திரு­வள்­ளு­வர்’ திரைப்­ப­டம் நிறை­வ­டை­கி­றது. இந்­தப் படத்­தில், சிவ­பக்­த­ரா­க­வும் திரு­நீறு  தரித்­த­வ­ரா­க­வும் திரு­வள்­ளு­வர் காணப்­பட்­டார்.

‘திரு­வள்­ளு­வர்’ திரைப்­ப­டம் வந்த பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளுக்­குப் பின், ஜெமி­னி­யின் ‘அவ்­வை­யார்’ வந்­தது. இந்­தப் படத்­திலே வள்­ளு­வ­ரும் இடம் பெற்­றார். திரு­வள்­ளு­வ­ராக ஜி.பட்டு அய்­யர் நடித்­தார். சாத்­வீ­க­மா­ன­வ­ரா­க­வும் ஒதுங்­கிப் போகி­ற­வ­ரா­க­வும் ‘அவ்­வை­யா’­­ரில் திரு­வள்­ளு­வர் சித்­த­ரிக்­கப்­பட்­டார். அவ­ருக்­கான அங்­கீ­கா­ரங்­களை, அவ்­வை­யார்­தான் பல அற்­பு­தங்­க­ளைச் செய்து தடா­ல­டி­யாக வாங்­கித் தரு­கி­றார்!

என்­ன­தான் திருக்­கு­றள் தமி­ழின் மிக முக்­கி­ய­மான நூலா­கப் போற்­றப்­பட்­டா­லும், ஆளுமை என்று பார்த்­தால் அவ்­வைப் பாட்டி வள்­ளு­வரை விட பிர­ப­ல­மா­ன­வ­ராக இருந்­தி­ருக்­கி­றார் என்று கூற­வேண்­டும்!

திரைப்­பா­டல்­கள் என்று வரும்­போது, திருக்­கு­றள் ஏரா­ள­மான தமிழ்த் திரைப்­பா­டல்­க­ளின் கையா­ளப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் திருக்­கு­ற­ளின் பெரு­மையை ஒரு முழுப் பாட்­டில் வழங்­கி­யது, ‘அறி­வுக்கு விருந்­தா­கும் திருக்­கு­றளே’ என்ற பாடல் (படம் அறி­வாளி 1963, பாடல் மரு­த­காசி). ‘ஓர் இரவு’ (1951) படத்­தில் தேஷ் ராகத்­தில் வரும் ‘துன்­பம் நேர்­கை­யில்’ பாட­லில் வரும் ஒரு சர­ணம், திருக்­கு­றளை மிக அழ­கா­கக் குறிப்­பி­டு­கி­றது.

‘‘அற­மி­தென்­றும் யாம் மற­மி­தென்­றுமே

அறி­கி­லாத போது, தமிழ்

இறை­வ­னா­ரின் திருக்­கு­ளி­லோர் சொல்

இயம்­பிக் காட்ட மாட்­டாயா’’ என்ற பார­தி­தா­ச­னின் வரி­கள் மிக அற்­பு­த­மா­னவை. ஆனால், பார­தி­தா­சன் தனக்­கிட்­டுக்­கொண்ட பெய­ரைக்­கூ­டக் குறிப்­பி­டு­வ­தற்கு மனம் புழுங்கி, புரட்­சிக்­க­வி­ஞர் கன­க­சுப்­பு­ரத்­தி­னம் என்று குறிப்­பி­டு­கிற வன்­நெஞ்­சர்­க­ளும் தமிழ்­நாட்­டில் இருக்­கத்­தான் செய்­கி­றார்­கள். இத்­த­கைய பிர­கி­ரு­தி­கள், ஒரு நூலின் மூல ஆசி­ரி­ய­ருக்கே திருத்­தங்­கள் போடக்­கூ­டிய அள­வுக்கு அடங்­காமை நிரம்­பி­ய­வர்­கள். திரு­வள்­ளு­வ­ரும் அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்ப முடி­யாது !

 ‘கைராசி’ படத்­தின் டைட்­டில்­கள், வள்­ளு­வ­ரின் ஒரு சில்­லு­வெட் பிம்­பத்­தில் காட்­டப்­பட்டு, குங்­கு­மப் பொட்­டு­ட­னான வள்­ளு­வர் பிம்­பத்­தில் நிறை­வ­டை­கின்­றன.

‘அனைத்­தும் ஆண்­ட­வன் கைராசி’ என்று தொடங்­கும் டைட்­டில் பாடல், ‘பாரி­னில் மக்­கள் நல்ல பண்­பு­டன் வாழ்­வது, வான்­பு­கழ் வள்­ளு­வன் கைராசி’ என்று முடி­கி­றது. வள்­ளு­வன் கைராசி,  தமிழ் திரை உல­கி­லும் கலை உல­கி­லும் மேலும் எப்­ப­டித் தொடர்ந்­தது என்று பார்ப்­போம்.

(தொட­ரும்)Trending Now: