மேகாலயா: வெளியாட்கள் நுழைய தடை!

15-11-2019 03:13 PM

வட கிழக்கு மாநி­லங்­க­ளில் ஒன்­றான மேகா­லயா அரசு சென்ற முதல் தேதி ஒரு அவ­சர சட்­டத்தை பிறப்­பித்­துள்­ளது. இதன்­படி நாட்­டின் வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மேகா­ல­யா­வில் 24 மணி நேரத்­திற்கு மேல் தங்க வேண்­டும் எனில் பதிவு செய்து கொள்­வது கட்­டா­யம். இந்த அவ­சர சட்­டம் மேகா­லயா குடி­மக்­கள் பாது­காப்பு மற்­றும் பாது­காப்பு சட்­டம், 2016ல் [Meghalaya Residents Safety and Security Act, 2016] திருத்­த­மாக செய்­யப்­ப­டும். முன்பு வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மேகா­ல­யா­வில் குடி­யேற வேண்­டும் எனில் கட்­டா­ய­மாக பதிவு செய்து கொள்ள வேண்­டும் என்று இருந்­தது. தற்­போது 24 மணி நேரம் தங்­கு­ப­வர்­கள் கூட, கட்­டா­ய­மாக பதிவு செய்து கொள்ள வேண்­டும் என்று மேகா­லயா அரசு அவ­சர சட்­டத்தை பிறப்­பித்­துள்­ளது. இதன் படி மேகா­ல­யா­வின் அண்டை மாநி­ல­மான அஸ்­ஸா­மில் இருந்து, இந்த மாநி­லத்­திற்கு வரும் பாதை­க­ளில் (சாலை) சோத­னைச் சாவ­டி­கள் அமைக்­கப்­ப­டும். மேகா­ல­யா­வின் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளில் அஸ்­ஸாம் மாநி­லம் அமைந்­துள்­ளது. மேற்கு, தெற்கு பகு­தி­க­ளில் வங்­கா­ள­தே­சம் அமைந்­துள்­ளது.

இந்த அவ­சர சட்­டத்தை பற்றி செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் துணை முதல்­வர் பிரஸ்­டோன் டைசங் தெரி­வித்­தார். அப்­போது செய்­தி­யா­ளர்­கள் இந்த அவ­சர சட்­டத்­திற்­கும், ‘இன்­னர்  லைன் பெர்­மிட்’­டிற்­கும் இடையே உள்ள வேறு­பாடு என்ன? என்று கேட்­ட­னர். அதற்கு பதி­ல­ளிக்­கை­யில், நான் இன்­னர் லைன் பெர்­மிட் பற்றி எதை­யும் கூற­மாட்­டேன். இந்த அவ­சர சட்­டம் விரி­வான ஆலோ­ச­னைக்கு பிறகு பிறப்­பிக்­கப்­பட்­டது என்று பதி­ல­ளித்­தார்.

 ‘இன்­னர் லைன் பெர்­மிட்’ என்­பது பாது­காக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் வெளி ஆட்­கள் செல்ல வேண்­டும் எனில் அனு­மதி பெறு­வது. பழங்­குடி மக்­கள் வாழும் பகு­தி­களி பாது­காக்­கப்­பட்ட பகு­தி­க­ளாக கூறப்­ப­டு­கின்­றன. தற்­போது வட கிழக்கு மாநி­லங்­க­ளான மிஜோ­ரம், அரு­ணா­சல பிர­தே­சம், நாகா­லாந்­தின் பெரும் பகு­தி­யில் இன்­னர் லைன் பெர்­மிட் முறை அம­லில் உள்­ளது. இதே போல் மேகா­ல­யா­வி­லும் அமல்­ப­டுத்த வேண்­டும் என்று பழங்­குடி மக்­கள் நீண்­ட­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். 2013ல் இன்­னர் லைன் பெர்­மிட் முறையை அமல்­ப­டுத்த கோரி, மேகா­ல­யா­வில் நடை­பெற்ற போராட்­டம் வன்­மு­றை­யாக மாறி நான்கு பேர் பலி­யா­னார்­கள்.

மத்­திய அரசு கூடிய விரை­வில் குடி­மக்­கள் (திருத்த) சட்­டம் கொண்­டு­வர திட்­ட­மிட்­டுள்­ளது. இந்த சட்ட திருத்­த­தின் படி முஸ்­லீம் அல்­லாத இந்து உட்­பட மற்ற மதங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், குடி­யே­றி­யி­ருந்­தால், அவர்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கப்­ப­டும். இத­னால் வட கிழக்கு மாநி­லங்­க­ளில் பழங்­குடி மக்­க­ளுக்கு சொந்­த­மான இடங்­க­ளில், மற்­ற­வர்­கள் குடி­யேற தொடங்­கு­வார்­கள் என்ற அச்­சம் அம்­மக்­க­ளி­டையே உரு­வா­னது. மேகா­ல­யா­வில் வெளி­யாட்­கள் குடி­யே­று­வதை தடுக்க சட்­டம் கொண்டு வர வேண்­டும் என்று பழங்­குடி மக்­கள் மாநில அர­சுக்கு அழுத்­தம் கொடுக்க தொடங்­கி­னார்­கள்.

மேகா­லயா அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கூறு­கை­யில், இந்த மாநி­லத்­தில் மக்­கள் குழுக்­கள் மத்­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டுள்­ளதை தணிக்­கவே,இந்த அவ­சர சட்­டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது என்­கின்­ற­னர். ஷில்­லாங் டைம்ஸ் நாளி­தழ் ஆசி­ரி­யர் பாட்­ரி­சியா முகிம் கூறு­கை­யில், இந்த அவ­சர சட்­டத்தை பற்றி ஒவ்­வொ­ரு­வ­ரும் பல­மா­திரி கூறு­கின்­ற­னர். மாநில அர­சுக்கு கொடுத்த நெருக்­க­டி­யால், மாநில அரசு அவ­சர கோல­மாக அவ­சர சட்­டத்தை பிறப்­பித்­துள்­ளது” என்று கூறி­னார்.

ஆனால் அரசை நிர்ப்­பந்­திக்­கும் குழுக்­கள், இன்­னர் லைன் பெர்­மிட் முறையை தொடர்ந்து வலி­யு­றுத்­து­வோம். வெளி­யாட்­கள் மாநி­லத்­திற்­குள் நுழைய பதிவு செய்து கொள்­வது மட்­டும் போதாது என்­கின்­ற­னர். அத்­து­டன் இந்த அவ­சர சட்­டத்­தில் வெளி­யாட்­கள் எத்­தனை நாட்­கள் இருக்­க­லாம் என்­பது பற்றி எது­வும் குறிப்­பி­ட­வில்லை. தற்­போது அண்டை மாநி­லங்­க­ளில் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் தற்­கா­லிக இன்­னர் லைன் பெர்­மிட்­டில் 15 முதல் 30 நாட்­கள் வரை தங்­கி­யி­ருக்க முடி­யும். மற்­ற­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் இன்­னர் லைன் பெர்­மிட்­டில் ஆறு மாதம் வரை தங்­கி­யி­ருக்க முடி­யும். ஆனால் அந்த மாநி­லத்­தில் வசிக்­கும் பழங்­குடி இனத்­தைச் சேர்ந்­த­வர் பொறுப்­பேற்­றுக் கொள்ள வேண்­டும்.

மேகா­ல­யா­வில் இன்­னர்­லைன் பெர்­மிட் முறையை அமல்­ப­டுத்த போராட்­டம் நடத்­தி­வ­ரும் கரோ மாண­வர் சங்க தலை­வர் டெங்­சாங் மோமின் கூறு­கை­யில், “வெளி­யாட்­கள் நுழை­வதை தடுக்க கட்­டுப்­பா­டு­கள் தேவை. இதை கறா­ராக அமல்­ப­டுத்த இன்­னர் லைன் பெர்­மிட் முறையே சிறந்­தது. இது வேறு நாட்­டிற்கு செல்ல விசா எடுப்­பது போன்­றது” என்று கூறி­னார். வட கிழக்கு மாநி­லங்­க­ளில் வாழும் பல்­வேறு பழங்­குடி இன குழுக்­க­ளும், டெங்­சாங் மோமின் கூறு­வதை போலவே இன்­னர் லைன் பெர்­மிட் முறை வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கின்­றன. அஸ்­ஸாம், மணிப்­பூர் மாநி­லங்­க­ளில் பெரும்­பான்­மை­யாக இல்­லாத பழங்­கு­டி­யின மக்­கள், இன்­னர் லைன் பெர்­மிட் முறை வேண்­டும் என்று போராட்­டம் நடத்­து­கின்­ற­னர்.

பிரிட்­டிஷ் ஆட்சி காலத்­தில் வட கிழக்கு மாநி­லங்­க­ளில் முதன் முத­லில் இன்­னர் லைன் பெர்­மிட் முறை அறி­மு­கப்­ப­டுத்­திய போது, தற்­போது இது வேண்­டும் என வலி­யு­றுத்­தும் பழங்­கு­டி­யின குழுக்­கள் அப்­போது எதிர்ப்பு தெரி­வித்­தன. இதை மீறி செயல்­பட்­டன.

1873ல் இந்­தி­யாவை ஆண்ட பிரிட்­டிஷ் அரசு பெங்­கால் ஈஸ்­டர்ன் பிரண்­ட­யர் ரெகு­லே­ஷன் ( வங்­காள கிழக்கு எல்லை ஒழுங்­கு­முறை) என்ற பெய­ரில் இன்­னர் லைன் பெர்­மிட் முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்­கள். இதன் நோக்­கம் பழங்­கு­டி­யின மக்­களை பாது­காப்­ப­தல்ல. அவர்­களை புறக்­க­ணிப்­பதே.

பிரிட்­டிஷ் ஆட்­சி­யின் போது வட கிழக்கு பிர­தே­சங்­க­ளில் மலை பகு­தி­க­ளை­யும். சம­வெளி பகு­தி­க­ளை­யும் ஒன்­றாக இணைப்­ப­தற்கே இன்­னர் லைன் பெர்­மிட் முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்­கள். வட கிழக்கு பிராந்­தி­யத்­தில் தங்­க­ளது வர்த்­தக நோக்­கத்தை நிறை­வேற்­றிக் கொள்­ளவே, இவ்­வாறு செய்­த­னர். ஏனெ­னில் மலை பகு­தி­க­ளில் வாழ்ந்த பழங்­கு­டி­யின மக்­கள் பிரிட்­டிஷ் அரசு கட்­டுப்­பாட்­டில் இல்லை. இத­னால் இன்­னர் லைன் பெர்­மிட் முறையை கொண்டு வந்து, இந்த பழங்­கு­டி­யின மக்­கள் வர்த்­தக வாய்ப்பு உள்ள சம­வெளி பகு­தி­யில் நுழைய முடி­யா­மல் தடுப்­பதே நோக்­கம். அதே நேரத்­தில் மலை­ப­கு­தி­க­ளில் வாழும் பழங்­கு­டி­யின மக்­கள் அடிக்­கடி தேயிலை தோட்­டங்­க­ளில் அத்­து­மீறி நுழைந்­த­னர்.

இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்த பிறகு, பிரிட்­டி­ஷார் என்­பதை இந்­திய குடி­மக்­கள் என­வும், பிரிட்­டிஷ் அரசு கட்­டுப்­பாட்­டில் இல்­லாத பகு­தி­கள் பாது­காக்­கப்­பட்ட பகு­தி

­கள் என மாற்­றப்­பட்­டது. இதை விளக்­கும் வகை­யில் 2013ல், மத்­திய உள்­துறை அமைச்­ச­கம், “இன்­னர் லைன் பெர்­மிட் என்­பது, பழங்­கு­டி­யின மக்­களை பாது­காக்க, மற்ற மாநி­லங்­க­ளில், பகு­தி­க­ளில் இருந்து பழங்­கு­டி­யின மக்­கள் வாழும் பகு­தி­க­ளில் குடி­யே­று­வதை தடுப்­பதே என்று விளக்­க­ம­ளித்­தது. இதை வட கிழக்கு மாநி­லங்­க­ளில் வாழும் எல்லா பழங்­கு­டி­யின குழுக்­க­ளும் ஏற்­றுக் கொண்­டன.

பிரிட்­டிஷ் ஆட்­சி­யைப் போலவே, மத்­திய அர­சும் இன்­னர் லைன் பெர்­மிட் முறையை சுய­லா­பத்­திற்­காக பயன்­ப­டுத்­திக் கொள்­கி­றது. மிஜோ­ரம், நாகா­லாந்து ஆகிய மாநி­லங்­க­ளில் பிரி­வி­னை­வா­தி­க­ளால் ஏற்­ப­டும் வன்­மு­றை­யை­யும், ராணு­வத்­தி­ன­ரின் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளை­யும் செய்­தி­யாக சேக­ரிக்க முடி­யா­மல் பத்­தி­ரிகை­யா­ளர்களை தடுக்­கவே இன்­னர் லைன் பெர்­மிட் முறையை அரசு பயன்­ப­டுத்­து­கி­றது என்ற விமர்­ச­னங்­க­ளும் எழுந்­தன.

வட கிழக்கு பிராந்­தி­யத்­தில் பழங்­கு­டி­யின மக்­கள் அதி­கம் வாழும் மேகா­லயா மாநி­லம் மட்­டுமே இன்­னர்­லைன் பெர்­மிட்  இல்­லாத மாநி­லம் என்று பழங்­கு­டி­யின மக்­கள் தொடர்ந்து சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். இதற்கு கார­ணம் மேகா­ல­யா­வில் உள்ள காசி, ஜய்­னிதா மலைப்­ப­கு­தி­கள் பெங்­கால் ஈஸ்­டர்ன் பிரண்­ட­யர் அதி­கார வரம்­பிற்­குள் இருந்­ததே. அத்­து­டன் அஸ்­ஸாம் மாநி­லத்­து­டன் மேகா­லயா ஒன்­றாக இருந்­ததே. ஒரு காலத்­தில் ஷில்­லாங் பிரிக்­கப்­ப­டாத அஸ்­ஸாம் மாநி­லத்­தின் தலை­ந­க­ர­மாக இருந்­தது.

2012ல் அஸ்­ஸாம் மாநி­லத்­தில் போடா­லாந்­தில் வன்­முறை வெடித்­தது. இதற்கு கார­ணம் போடோ சுயாட்சி பிராந்­தி­யத்­தில் முஸ்­லீம்­கள் நிரந்­த­ர­மாக குடி­யே­றி­யதே. இவர்­களை வெளி­யேற்­று­வ­தற்­காக தொடங்­கிய போராட்­டம் வன்­மு­றை­யாக மாறி­யது. போலோ­லாந்து பகுதி போடோ இன மக்­க­ளுக்கு மட்­டுமே உரி­மை­யா­னது என்று வலி­யு­றுத்­தி­னர். இதன் எதி­ரொ­லி­யாக 2013ல் மேகா­ல­யா­வி­லும் வெளி­யாட்­க­ளுக்கு எதி­ரா­க­வும், இன்­னர் பெர்­மிட் முறை அமல்­ப­டுத்த வேண்­டும் என்று போராட்­டம் வெடித்தது. இது வன்­மு­றை­யா­க­வும் மாறி­யது. மத்­திய அரசு இதை சட்­ட­வி­ரோ­தம் என்று கூறி, மேகா­ல­யா­வில் இன்­னர் பெர்­மிட் முறையை அமல்­ப­டுத்த மறுத்­து­விட்­டது.

ஆனால் பழங்­கு­டி­யின மக்­கள் போராட்­டத்தை கைவி­டு­ வ­தாக இல்லை. மாநில அரசு வெளி­யாட்­க­ளின் நட­மாட்­டத்தை கட்­டுப்­ப­டுத்த மேகா­லயா குடி­மக்­கள் பாது­காப்பு மற்­றும் பாது­காப்பு சட்­டத்தை கொண்டு வந்­தது. இதன்­படி அண்டை மாநி­லத்­தில் இருந்து நுழை­யும் பகு­தி­யில் சோதனை சாவ­டி­கள் அமைக்­கப்­பட்­டன.

மேகா­ல­யா­வில் இன்­னர் லைன் பெர்­மிட் முறையை வற்­பு­றுத்­தும் அமைப்­பு­கள், தற்­போ­தைய அவ­சர சட்­டம், முந்­தைய சோதனை சாவடி முறையை விட சிறிது மேம்­பட்­டது என்­கின்­ற­னர். “புதிய மொந்­தை­யில் பழைய கள்” போன்­றது என்­கின்­றார் கரோ மாண­வர் சங்க தலை­வர் டெங்­சாங் மோமின்.  

அதே நேரத்­தில் தற்­போது பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள அவ­சர சட்­டத்­தால், சுற்­றுலா பய­ணி­க­ளின் வருகை குறைந்து விடும் என்று மேகா­லயா அரசு அச்­சப்­ப­டு­கி­றது. சுற்­றுலா துறை பாதிக்­கப்­ப­டுமோ என்ற அச்­ச­மும் எழுந்­துள்­ளது. இந்த மாநி­லத்­திற்கு சுற்­றுலா பய­ணி­கள் மூலம் கிடைக்­கும் வரு­வாய் முக்­கிய நிதி ஆதா­ர­மாக உள்­ளது.

மேகா­லயா அரசு நவம்­பர் முதல் தேதி பிறப்­பித்த அவ­சர சட்­டத்­திற்கு விளக்­க­ம­ளிக்­கும் வகை­யில் ஐந்­தாம் தேதி, தற்­ச­ம­யம் மேகா­ல­யா­வில் வெளி­யாட்­கள் நுழை­வதை பதிவு செய்­யும் முறை தொடங்­கப்­ப­ட­வில்லை. இது அமல்­ப­டுத்­தும் போது, மிக எளி­மை­யாக இருக்­கும். மாநி­லத்­திற்­குள் நுழைய பெர்­மிட் வாங்­கு­வ­தற்கு, நீண்ட வரி­சை­யில், நீண்­ட­நே­ரம் காத்­தி­ருக்க வேண்­டி­தில்லை. வெளி­நாட்டு, உள்­நாட்டு சுற்­று­லாப் பய­ணி­களை வர­வேற்­கின்­றோம் என்று விளக்­க­ம­ளித்­துள்­ளது.

நன்றி: ஸ்கோரல் இணை­ய­த­ளத்­தில் அரு­ணாப் சைகியா.
Trending Now: