அரசியல்மேடை : ஸ்டாலின் ‘சர்வாதிகார’ சீற்றம்...!

15-11-2019 03:11 PM

திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பொதுக்­கு­ழுக் கூட்­டம், கடந்த 10ம் தேதி ஞாயி­றன்று சென்­னை­யில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில் பேசிய திமுக தலை­வர் ஸ்டாலின், கட்­சியை அழிக்க நினைக்­கும் வெளிப்­பகை, உள்­பகை என்­பது குறித்­தெல்­லாம் பேசி, கட்­சி­யின் நலன் காக்க சர்­வாதி காரி­யா­கவே மாறு­வேன் என்று சூளு­ரைத்­துள்­ளார்.

ஸ்டாலினை ஆவே­சப்­ப­டுத்­தும் அள­வுக்கு திமு­க­வில் ‘உள்­பகை’ அதி­கம் இருக்­கி­றதோ எனும் சந்­தே­கம் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.

இனி, நீக்கு போக்­கான அணு­கு­முறை சரிப்­ப­டாது, அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுத்­தால்­தான் கட்­சியை கட்­டுக்­கோப்­பாக கொண்டு செல்ல முடி­யும் என்ற முடி­வுக்கு ஸ்டாலின் வந்து விட்­டார் என்­ப­தன் அடை­யா­ளம் தான் அவ­ரது ‘சர்­வா­தி­கார’ பேச்சு என்று அவ­ரது கட்­சி­யி­னரே கூறு­கின்­ற­னர்.

‘இன்­றைய நிலை­யில் வெளிப்­பகை நம் மீது அவ­தூ­று­களை அள்ளி வீசி அழிக்க நினைக்­கி­றது. அதனை எதிர்­கொள்ள வேண்­டு­மென்­றால் உள்­பகை இல்­லாத உன்­னத நிலையை கட்­சி­யில் உரு­வாக்­கிட வேண்­டும். அதைத்­தான் பொதுக்­கு­ழு­வில் உரை­யாற்­றும் போது எடுத்­து­ரைத்­தேன்’ என்ற விளக்­கத்­தை­யும் கட்­சி­யி­னர்க்கு எழு­திய கடித அறிக்கை மூலம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார். திமுக.வை பொறுத்த வரை 1946ம் ஆண்டு அண்­ணா­துரை இக்­கட்­சியை தொடங்­கி­யது, நெடுஞ்­செ­ழி­யன், மதி­ய­ழ­கன், என்.வி.நட­ரா­ஜன், ஈ.வெ.சி.சம்­பத் ஆகி­யோ­ரோடு அண்­ணா­வும் இணைந்து ஐம்­பெ­ரும் தலை­வர்­க­ளாக கட்­சியை வழி­ந­டத்தி சென்­ற­னர். அதன் பின்­னர், அவர்­க­ளோடு இணைந்து கரு­ணா­நிதி, சி.பி. சிற்­ற­ரசு, ஆசைத் தம்பி,.கே.வில்­வம், சத்­தி­ய­வாணி முத்து உள்­ளிட்ட பேச்­சா­ளர்­க­ளும், எழுத்­தா­ளர்­க­ளும், கட்சி வளர்ச்­சிக்கு பாடு­பட்­ட­னர்.

எந்­த­வொரு பிரச்­னை­யா­னா­லும், எத்­த­கை­ய­தொரு முடிவு எடுப்­ப­தாக இருந்­தா­லும் கட்­சி­யின் உயர்­மட்­டக் குழு நிர்­வா­கி­கள் கூடி விவா­திப்­பார்­கள். திமுக.வின் வளர்ச்­சி­காக்க பாடு­பட்ட, அக்­கட்­சிக்கு கணி­ச­மான வாக்கு வங்­கி­களை திரட்­டித் தந்த எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., எஸ்.எஸ்.ஆர்., கே.ஆர்.ராம­சாமி, டி.வி.நாரா­ய­ண­சாமி ஆகி­யோ­ருக்கு திமுக வளர்ச்­சி­யில் குறிப்­பி­டத் தகுந்த பங்கு உண்டு.

அந்­தக் கால­கட்­டங்­க­ளில் திமு­க­வின் செயற்­குழு, பொதுக்­கு­ழுக் கூட்­டங்­கள் இரண்டு, மூன்று நாட்­கள் நடை­பெ­றும். தீர்­மா­னங்­கள் வாசிக்­கப்­பட்டு அதன் மீது விவா­தங்­கள் நடை­பெ­றும். பெரும்­பான்­மை­யோர் விரும்­பாத தீர்­மா­னம் என்­றால், அந்த தீர்­மா­னம் திருத்­தப்­ப­டும் அல்­லது நிரா­க­ரிக்­கப்­ப­டும். அப்­ப­டிப்­பட்ட ஜன­நா­யக நெறி­மு­றை­க­ளோடு கூடிய கட்­சி­யாக, வலு­வான கட்­ட­மைப்பு உள்ள கட்­சி­யா­கவே திமுக  இருந்து வந்­தது.

1969–ம் அண்டு அண்ணா மறைந்த பிறகு, அது­வ­ரை­யி­லும் பொதுச் செய­லா­ள­ரின் முழு கட்­டுப்­பாட்­டில் கட்சி இருந்த நிலையை மாற்றி, கட்­சிக்கு புதிய தலை­வர் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­காக கட்­சி­யின் விதி­க­ளில் மாற்­றம் கொண்டு வந்து கரு­ணா­நிதி கட்சி தலைமை பொறுப்பை ஏற்­றார். எம்.ஜி.ஆர். உள்­ளிட்ட முன்­ன­ணி­யி­னர் ஆத­ர­வோடு ஆட்­சிக்­கும் தலை­மைப் பொறுப்பை கரு­ணா­நி­தியே ஏற்­றார்.

1971–ம் ஆண்டு நடை­பெற்ற தமி­ழக சட்­ட­மன்­றப் பொதுத் தேர்­த­லில் திமு­க­வுக்கு அமோக வெற்றி கிடைத்­தது. 184 எம்.எல்.ஏக்­க­ளு­டன் மீண்­டும் திமுக ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­தது. ஆட்­சி­யும், கட்­சி­யும் தம் கைவ­சம் என்ற நிலை உரு­வான போது கரு­ணா­நிதி சர்வ அதி­கா­ர­மிக்­க­வ­ராக தம்மை மாற்­றிக் கொண்­டார். சம்­பி­ர­தா­யத்­திற்­காக கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்­தா­லும் எல்லா முடி­வு­க­ளை­யும் கரு­ணா­நி­தியே எடுத்­தார். தம் முடி­வுக்கு அடுத்த கட்­டத் தலை­வர்­களை உடன்­பட வைத்­தார்.

அதில் குறிப்­பி­டத்­தக்­கது திமு­க­வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளி­யேற்­றப்­பட்­டது. ‘அண்­ணா’வே தயங்­கிய, அவ­ருக்கு மற்­ற­வர்­கள் மூலம் நெருக்­கடி வந்த நிலை­யி­லும், எம்.ஜி.ஆரை வெளி­யேற்ற விரும்­பாத அவ­ரின் நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாறி கரு­ணா­நிதி இம்­மு­டிவை எடுத்­தார். அதன் விளைவு திமுக மிகப் பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தது, 13 ஆண்­டு­கள் ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வர­மு­டி­யாத பரி­தாப நிலைக்கு தள்­ளப்­பட்­டது.

ஆனா­லும் கூட இறு­தி­வரை போராடி, எம்.ஜி.ஆர். மறை­வுக்கு பிறகு திமுக.வை உயிர்­பெ­றச் செய்­தார். அடுத்­த­டுத்து ஆட்­சி­க­ளை­யும் கைப்­பற்­றி­னார். அவர் உயி­ரோடு இருந்த வரை, அதா­வது முழு­மை­யாக செயல்­பட முடி­யாத நிலை­யி­லும் கூட கரு­ணா­நி­தியே தலை­வர் பொறுப்­பில் இருந்­தார். அவ­ரது மறை­வுக்கு பிறகு கட்சி தலை­மைப் பொறுப்­பேற்ற ஸ்டாலி­னுக்கு ஒட்டு மொத்த இளை­ஞர் அணி­யின் ஆத­ரவு இருந்­ததே தவிர மூத்த நிர்­வா­கி­க­ளி­டம் ஒரு­வித நெரு­டல் இருந்து வந்­ததை, அவரே சில கூட்­டங்­க­ளில் இலை­மறை காயாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

 சேலம், ராம­நா­த­பு­ரம், தூத்­துக்­குடி, உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளில் உள்­பகை வெடித்­துக் கிளம்­பி­யது. அதை சரிப்­ப­டுத்த ஸ்டாலின் மிக­வும் சிர­மப்­பட்­டார். ‘தலை­வர்’ சொன்­னால் சரி என்று கரு­ணா­நிதி காலத்­தில் ஏற்­றுச் செயல்­பட்ட மாநில, மாவட்ட நிர்­வா­கி­கள் தங்­கள் உரி­மைக்­காக குரல்­கொ­டுத்த நிலை­யெல்­லாம் ஏற்­பட்­டது. மாவட்ட செய­லா­ளர்­கள் குறு­நில மன்­னர்­க­ளா­கச் செயல்­பட்­ட­னர். அத­னால்­தான் கட்சி சார்­பாக இருந்த சுமார் 52 மாவட்­டங்­களை 65 மாவட்­டங்­க­ளாக பிரித்­தார். ஆனா­லும் கூட இன்­னும் ‘உள்­பகை’ ஆங்­காங்கே தென்­ப­டு­கி­றது. அவ்­வப்­போது அதை கட்­டுப்­ப­டுத்த ஸ்டாலின் எடுத்த முயற்சி பல­ன­ளிக்­கா­த­த­லேயே ‘கட்சி நலன் காக்க சர்­வா­தி­கா­ரி­யாக மாறு­வேன்’ என்ற போர்க்­கு­ரலை ஓங்கி ஒலித்­தி­ருக்­கி­றார்.

‘‘நமக்­குள் ஒற்­றுமை வேண்­டும், ஒருங்­கி­ணைப்பு வேண்­டும், அடி­மட்­டத் தொண்­டர்­களை அர­வ­ணைக்க வேண்­டும்; மக்­க­ளி­டம் நாம் செல்ல வேண்­டும். அப்­போ­து­தான்  மக்­கள் நம்­மி­டம் வரு­வார்­கள்’’ என்­ப­தை­யெல்­லாம் ஸ்டாலின் பொதுக்­கு­ழு­வி­லும், அடுத்­த­டுத்த அறிக்­கை­கள் மூலம் வலி­யு­றுத்தி வரு­கி­றார்.

கட்­சி­யில் இப்­போ­தைக்கு ஒற்­று­மை­யும், ஒருங்­கி­ணைப்­பும் கேள்­விக்­கு­றி­யாக இருப்­ப­தால்­தான், இக்­க­ருத்தை ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­ய­து­டன், இதற்கு மேலும் கட்­சிக் கட்­டப்­பாட்டை  மீறி எவ­ரும் செயல்­பட்­டால், அவர்­களை தூக்­கி­யெ­றி­ய­வும் தயங்க மாட்­டேன் என்ற எச்­ச­ரிக்­கை­யின் வெளிப்­பா­டாக சர்­வா­தி­கார கருத்தை ஸ்டாலின் முன் மொழிந்­துள்­ளார். கட்­சியை சிந்­தா­மல், சித­றா­மல் வெற்­றிப் பாதையை நோக்கி அழைத்­துச் செல்ல சர்வ அதி­கா­ர­மிக்க தலை­வர் தேவை­தான். இது வர­வேற்­கத்­தக்­கதே என திமுக முன்­ன­ணி­யி­னர் சிலர் இதை வர­வேற்­கின்­ற­னர்.Trending Now: