துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 55

15-11-2019 03:09 PM

இசை தூண்கள் கொண்ட சுசீந்திர திருத்தலம்

கன்­னி­யா­கு­மரி நக­ரின் வடக்கே சுமார் 12 கிலோ மீட்­டர் தூரத்­தில் சுசீந்­தி­ரம் உள்­ளது. இங்­குள்ள சிவத்­த­லம் மிக­வும் பழ­மை­யும், சிறப்­பும் வாய்ந்­தது. இத்­தி­ருக்­கோ­யில் கிரேதா யுகத்­தில் தோன்­றி­ய­தாக புரா­ணங்­கள் கூறி­ய­போ­தி­லும் வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் ௮ம் நூற்­றாண்­டில் இக்­கோ­யில் கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று கூறு­கின்­ற­னர். இந்­தி­ரன் சாப­நீக்­கம் பெற்ற இட­மாக கரு­தப்­ப­டு­வ­தால், இதற்கு சுசீந்­தி­ரம் என்ற பெயர் உரு­வா­னது என்­றும் கூறு­வர்.

மிகப் புரா­த­ன­மான இத்­தி­ருக்­கோ­யி­லின் 7 நிலை­கள் கொண்ட கோபு­ரச் சுவர்­க­ளில் இந்­தி­ர­னு­டைய கதை­களை சொல்­லும் காட்­சி­கள் அழ­காக வரை­யப்­பட்­டி­ருக்­கும்.

கோயில் வளா­கத்­தில் பிர­மன், விஷ்ணு, சிவன் என்­னும் மும்­மூர்த்­தி­க­ளின் விக்­கி­ர­கங்­களை இந்­தி­ரனே நிறு­வி­ய­தாக புரா­ணம் கூறு­கின்­றது. அது­மட்­டு­மல்ல, இன்­ற­ள­வும், இரவு நேரத்­தில் இந்­தி­ரனே இத்­தி­ருக்­கோ­யி­லுக்கு வந்து பூஜை செய்­வ­தாக மக்­கள் நம்­பு­கின்­ற­னர். இதற்­கா­கவே, இக்­கோ­யி­லில் ஒரு நாள் பூஜை செய்­யும் குருக்­கள் மறு­நாள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்.

தானு­மா­லய சுவாமி திருக்­கோ­யில் எனப் பெயர் பெற்ற இந்த சுசீந்­தி­ரம் கோயில் திரா­வி­டக் கட்­ட­டக் கலை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டது. இதில் உள்ள சிற்­பங்­கள் மிக­வும் சிறந்­தவை. ஏழு நிலை மாடங்­கள் கொண்ட இதன் உயர்ந்த கோபு­ரங்­கள் பல கிலோ மீட்­டர் தொலை­வில் இருந்­தும் பார்க்­கக் கூடி­ய­தாக இருக்­கும். பெரிய மண்­ட­பங்­க­ளும் இக்­கோ­யி­லில் அமைந்­துள்­ளன.

இத்­தி­ருக்­கோ­யி­லின் கிழக்கு கோபுர வாசலை 1545ம் ஆண்­டில் விஜ­ய­ந­கர பேர­ர­சர் கட்­டி­ய­தாக வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர். இங்­குள்ள ஊஞ்­சல் மண்­ட­பம், திருக்­கொன்­றை­யடி செண்­ப­க­ரா­மன் மண்­ட­பம், அலங்­கார மண்­ட­பம், உதய மார்த்த மண்­ட­பம் ஆகி­யவை அழ­கிய சிற்­பங்­கள் கொண்­ட­வை­யாக எழில்­மிகு தோற்­றம் அளிக்­கும்.

செண்­ப­க­ரா­மன் எனும் பண்­டைய காலத்து சேர மன்­ன­ரால் கட்­டப்­பட்ட மிகப்­பெ­ரிய மண்­ட­பம்­தான் இன்­ற­ள­வும் அவ­ரது பெய­ரால் அழைக்­கப்­ப­டு­கி­றது. அதே போல, வீர­பாண்­டிய மணி­மண்­ட­பத்தை முந்­தை­ய­கால பாண்­டிய  மன்­னர்­க­ளில் ஒரு­வ­ரால் கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் எனத் தெரி­கி­றது. அலங்­கார மண்­ட­பம் என்­பது மிக­வும் அழ­கிய உணர்­வோடு கட்­டப்­பட்­டுள்­ளது. இதன் மேற்­கூரை ஒரே கல்­லால் ஆனது.  இந்த மேற்­கூ­ரையை நான்கு பெரிய தூண்­க­ளும், ௧௨ சிறிய தூண்­க­ளும், தாங்கி நிற்­பது, காண்­போரை வியக்க வைக்­கும்.

இந்த மண்­ட­பங்­க­ளி­லுள்ள அனைத்து தூண்­க­ளி­லும் அழ­கான சிற்­பங்­கள் மிக நுணுக்­க­மாக செதுக்­கப்­பட்­டி­ருக்­கும். இவை 11, 12ம் நூற்­றாண்டை சேர்ந்­தவை. மண்­ட­பங்­கள் மற்­றும் பிர­கார மேற்­கூ­ரை­க­ளி­லும் பல்­வே­று­வித தெய்­வீக காட்­சி­கள், தத்­ரூப ஓவி­ய­மாக தீட்­டப்­பட்­டி­ருக்­கும்.

இத்­தி­ருக்­கோ­யில் வளா­கத்­தில் திரு­மலை நாயக்க மன்­ன­ரு­டைய சிலை­யும், நாயக்க மன்­னர்­க­ளின் சிலை­க­ளும் காணப்­ப­டு­கின்­றன.

சுசீந்­தி­ரம் கோயி­லின் மிகப்­பெ­ரிய சிறப்­பாக கரு­தப்­ப­டு­வது, இங்­குள்ள பெரிய தூண் ஒன்­றில் சிறிய அள­வி­லான 24 தூண்­கள் செதுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சிறு தூண்­களை தட்­டி­னால், ஒவ்­வொரு தூணி­லும், ஒவ்­வொரு வித­மான இசை எழும், இக்­கோ­யி­லுக்கு வரும் பக்­தர்­கள் இதை அதி­ச­யத்­து­டன் பார்த்து, கேட்­டுச் செல்­வதை இன்­ற­ள­வும் காண­மு­டி­யும்.

இங்­குள்ள மிகப்­பெ­ரிய நந்தி, வெண்­கல்­லால் செதுக்­கப்­பட்­டுள்­ளது. இதே போல 10 அடிக்­கும் அதிக உய­ர­முள்ள ஆஞ்­ச­நே­யர் சிலை­யும் உள்­ளது. இக்­கோ­யி­லின் பிர­கா­ரத்­தி­லும், உட்­பு­றச்­சு­வர் பகு­தி­க­ளி­லும் பழங்­கால வட்­டெ­ழுத்­துக்­க­ளு­டன் இப்­போது வழக்­கி­லுள்ள தமிழ் எழுத்­துக்­க­ளும் உடைய கல்­வெட்­டு­கள் உள்­ளன. கோயி­லின் சிறப்பு, எந்­தெந்த கால­கட்­டங்­க­ளில் யார் கோயிலை நிர்­வ­கித்­தது. கோயிலை புன­ர­மைத்­த­வர்­கள், திருப்­பணி செய்­த­வர்­கள் ஆகிய விவ­ரங்­கள் இந்த கல்­வெட்­டுக்­க­ளில் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. இங்கு அமைந்­துள்ள கைலா­சர் கோயி­லுக்கு அரு­கே­யுள்ள பாறையே, இக்­கோ­யில் மிக­வும் பழ­மை­யான புரா­த­ன­மான கோயில் என்­பதை பறை­சாற்­றும். இக்­கோ­யி­லுக்கு அரு­கே­யுள்ள தெப்­பக்­கு­ள­மும், அதன் நடுவே அமைந்­துள்ள மண்­ட­ப­மும் மிக­வும் அழ­கு­ட­னும், பொலி­வு­ட­னும் காணப்­ப­டும்.

சுசீந்­தி­ரம் திருக்­கோ­யி­லுக்­குள் உள்ள கொன்றை மரம் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது என்று கூறு­கின்­ற­னர். இது ஆதி­கா­லத்­தில் வில்வ மர­மாக இருந்­த­தா­க­வும், இதன் அடி­யில் இருந்த சிவ­லிங்­கத்தை அகஸ்­தி­யர் உள்­ளிட்ட முனி­வர்­கள் பல­ரும், ஆதி சங்­க­ராச்­சா­ரி­யார் உள்­ளிட்ட ஆன்­மி­கப் பெரு­மக்­க­ளும் வழி­பட்­ட­தாக ஐதீ­கம்.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­துக்கு சுற்­றுலா வரும் பொது­மக்­கள் சுசீந்­தி­ரம் திருக்­கோ­யி­லுக்கு சென்று பக்­தி­யு­டன் வழி­ப­டு­வ­து­டன், அதன் தொன்­மை­க­ளை­யும், சிற்­பச் சிறப்­புக்­க­ளை­யும் கண்டு அதி­ச­யித்­துச் செல்­வர்.Trending Now: