பிற்பட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலை குழுக்களை அமைக்க கட்காரி பரிந்துரை

14-11-2019 08:15 PM

புதுடெல்லி

தேசிய ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் எம்எஸ்எம்இ அமைச்சர் நிதின் கட்காரி தொழில் வளர்ச்சி இல்லாத பிற்பட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைக் குழுக்களை LEATHER INDUSTRIES CLUSTERS ) அமைக்கும்படி தொழில் துறையினருக்கு ஆலோசனை கூறினார்.

பிற்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தின் விலை குறைவாக இருக்கும், தொழிலாளர்களுக்கான ஊதியமும் குறைவாக இருக்கும். அதனால் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஏற்றுமதி பொருட்களின் விலையும் அதனால் குறைவாக இருக்கும் என நிதின் கட்காரி தெரிவித்தார்.

இவ்வாறு அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்குவிப்புச் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அத்தகைய தோல் தொழிற்சாலைக் குழுக்களில் உள்ள இடங்களில் ஆய்வகங்கள், டிசைன் மையங்கள் ஆகியவற்றை தோல் தொழிலுக்காக அரசு அமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கட்கரி தெரிவித்தார்.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு தோல் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொழிற்சாலை நிறுவனங்கள் அத்தகைய தோல் தொழிற்சாலைக் குழுக்களுக்கான கொள்கையை உருவாக்க வேண்டும். அந்தக் கொள்கையின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என அமைச்சர் கூறினார். அத்தகைய தொழிற்சாலை குழுக்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்க முயற்சிகள் மேற்கொள்வ தாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்..

இந்தியாவில் தற்பொழுது 22 புதிய கிரீன் எக்ஸ்பிரஸ் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. உதாரணமாக டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே ஒரு புதிய கிரீன் எக்ஸ்பிரஸ் இருப்புப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த தடம் மிகவும் பிற்பட்ட பகுதிகள், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் ஊடுருவி செல்கிறது. அத்தகைய பகுதிகளை நீங்கள் தொழிற்சாலை அமைக்க தேர்வு செய்ய வேண்டும். டெல்லியிலும் கான்பூரிலும் தொழிற்சாலை அமைக்க இடம் தேடினால் நிலத்தின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.

தற்பொழுது தோல் தொழிற்சாலைகளில் 92% எம்எஸ்எம்இ தொழிற்சாலைப் பிரிவில் உள்ளன.

இந்த அளவை 99 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதின் கட்காரி கூறினார்.

இத்தகைய தோல் தொழிற்சாலை குழுக்கள் ஒவ்வொன்றிலும் ஆய்வு மையம் இருக்க வேண்டும். திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்கள் இருக்க வேண்டும். ஆய்வகங்கள், டிசைன் மையங்களும் இருக்க வேண்டும் என அவர் கூறினார். தற்போது தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி ரூ 42000 கோடியாக உள்ளது அத்தோடு தொழிற்சாலைகளை ஒட்டுமொத்த பெற்று வரவு 83 ஆயிரம் கோடியாக உள்ளது.

ஏற்றுமதியில் வெற்றி பெற மூன்று அடிப்படையான விஷயங்கள் மிகவும் அவசியமானவை. ஒன்று-போதுமான அளவு மூலதனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும், இரண்டு-குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும், உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைக்க வேண்டும்.

இந்த மூன்று அடிப்படை வசதிகளும் குறைவான விலையில் தொழிற்சாலைகளுக்கு கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் குறைவான விலையில் சர்வதேச அளவில் போட்டியிடக் கூடிய தரத்தில் பொருள்களை நாம் உற்பத்தி செய்யமுடியும்.

சிறு தொழிற்சாலைகளுக்கு நமது வங்கிகள் கடன் தருவதற்கு இன்னும் தயக்கம் காட்டுகின்றன.

அந்நியச் செலாவணியில் தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்க முடியுமா என்று ஆலோசிக்கப்படுகிறது.

ஏற்கனவே உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்குகின்ற தொழில் நிறுவனங்கள் அவற்றின் தரமான உற்பத்தி, சந்தை வாய்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த ரேட்டிங் வழங்கும் முறை குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக யுத்தம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய ஏராளமான வாய்ப்புகளை நமக்கு வழங்கி உள்ளது எனவும் கட்காரி தெரிவித்தார்,Trending Now: