எங்கள் தலைவிதி...

13-11-2019 04:18 PM

ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த சிறுவன், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில், வயலில் விவசாயிகள் வேலை முடிந்து, கெட்டுப் போயிருந்த ரொட்டி துண்டுகளை, ஆவலோடு சாப்பிடுவதை கவனித்தான்.

'இவ்வளவு மோசமான உணவை ஏன் சாப்பிடுகிறீர்...' என்று கேட்டான்.

'எங்கள் தலை விதி; இதை விட நல்ல உணவு கிடைக்காது...'

'வயலில் கடுமையாக உழைத்து, தானியங்களை விளைவிக்கிறீர்கள்; உங்களுக்குத் தானே, நல்ல உணவு கிடைக்க வேண்டும்...' என்றான் சிறுவன்.

'நீ கூறுவது உண்மை தான்; ஆனால், நாங்கள் பாடுபட்டு விளைவித்ததை அரசு அள்ளி எடுத்து விடுகிறதே. அரசு போடும் பிச்சையைத் தான், சாப்பிட வேண்டியிருக்கிறது...' என்றனர் விவசாயிகள்.

அந்த கூற்று, சிறுவனை உணர்ச்சி வசப்பட வைத்தது.

'எதிர்காலத்தில் இந்த அநீதியை எதிர்க்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த சிறுவன் யார் தெரியுமா... ஐரோப்பா, ஆசியாவை உள்ளடக்கிய ரஷ்யா, சோவியத் யூனியனாக இருந்து போது, அதன் மாபெரும் தலைவராக திகழ்ந்த, ஜோசப் ஸ்டாலின் தான்.Trending Now: