நான் திமுகவில் இல்லை: திமுக பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?- மு.க. அழகிரி காட்டம்

13-11-2019 12:19 PM

காரைக்குடி,

நான் திமுகவில் இல்லை ; திமுகவை பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள், என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் பதில் கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் நவம்பர் 15-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்களுக்கு எச்.ராஜா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தார். மு.க. அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவை காரைக்குடியில் அவரது வீட்டில் மு.க. அழகிரி இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.

இருவரும் தனி அறையில் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வெளியே வந்த மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், 

நவம்பர்15-ம் தேதி நடைபெற இருக்கும் எச்.ராஜாவின் மகளின் திருமண விழாவிற்கு என்னால் வர முடியாத காரணத்தால் முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வந்தேன்.

நான் திமுகவில் இல்லை. திமுகவை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.

திமுக பொதுக்குழு குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று மு.க. அழகிரி கூறினார்.

சமீபத்தில் திமுக பொதுக்குழு நடந்து முடிந்த நிலையில் மு.க.அழகிரி, எச்.ராஜாவை சந்தித்திருப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.Trending Now: