ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 13–11–19

12-11-2019 11:54 AM

ராஜா ரசி­கர்­க­ளின் பேவ­ரிட் பாடல்!

(சென்ற வார தொடர்ச்சி...)

“இசை ஒரு பெருங்­க­டல்.. நான் செய்­தது, ஒரு சிப்­பி­யில் கொஞ்­சம் அள்­ளி­யது மட்­டுமே” – - இது இளை­ய­ராஜா சொன்­னது. இவர் சிப்­பி­யில் அள்­ளி­ய­வற்­றி­லேயே நாம் ரசிக்­கா­மல் விட்­டது எத்­த­னை ­யெத்­தனை?

அப்­ப­டி­யான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்­வப்­போது பார்க்­க­லாம். இதோ ஒன்­பது பாடல்­கள். இவற்­றில் ஒரு பாட­லை­யா­வது ‘அட.. இப்­படி ஒரு பாட்டா.. எப்­படி மிஸ் பண்­ணி­னோம்!’ என்று நினைப்­பீர்­கள். சில பாட்­டு­க­ளில், ‘ப்ச்.. இதெல்­லாம் எனக்­குத் தெரி­யும்ப்பா’ என்­றும் நினைப்­பீர்­கள்.

5.  நீல­வேணி அம்மா நீல­வேணி...

'சாமி போட்ட முடிச்சு'  – 1991. வந்த புதி­தில், டீக்­க­டை­யெங்­கும் கேட்­டுக் கொண்­டி­ருந்த பாடல். மலே­சியா வாசு­தே­வன், சித்ரா பாடிய பாடல். ஒரே நேர்க்­கோட்­டில் செல்­லும் இசை­தான். பல்­லவி ஒரு ஜான­ரும், சர­ணம் ஒரு ஜான­ரு­மாக இருக்­கும். பல்­லவி  பெப்­பி­யாக இருக்­கும். சர­ணத்­தில் நல்ல மெல­டி­யாக மாறும். இரண்­டாம் சர­ணத்­தில் மலே­சி­யா­வின் ஆளு­மையை நிச்­ச­யம் ரசிக்க முடி­யும். நல்­ல­தொரு மெட்டு.  

6. மங்கை நீ மாங்­கனி

'இன்­னிசை மழை' என்­றொரு படம். 1992ல் வெளி­வந்­தது. ஷோபா சந்­தி­ர­சே­கர் இயக்­கம். அந்த படத்­தின் பாடல்­தான் இது. கேசட் வாங்கி, முதல் முறை கேட்­ட­போது, சர­ணத்­தின்­போது கத்­தி­யது இன்­னும்  ஞாப­கம் இருக்­கி­றது. கார­ணம், எஸ்.என். சுரேந்­தர் பல்­ல­வி­யில் ஆரம்­பிக்­கும். இடை­யிசை முடிந்து  சர­ணத்­தி­லி­ருந்து ராஜா குரல்! தபேலா விளை­யா­டும் இன்­னொரு பாடல்.  சர­ணத்­தின் இரண்­டி­ரண்டு வரி­க­ளுக்­கும் தபேலா இசை மாறும். கடைசி இரண்டு வரி­க­ளில் மெட்டு அருவி போல விழும். இரண்­டா­வது சர­ணத்­தில் ‘பா... மாலை சூட்டி’ சங்­க­தி­யும், ‘எங்­கே­யும் உன் தோற்­றம்’ பாடும்­போது ஒரு மயக்­க­மும் ஸ்பெஷ­லாக இருக்­கும். கேட்­டுப் பாருங்­கள். அதே போல, ‘தாத்­ததா.. ராத்­ததா... தராரா.. தராரா....’ என்று வரும்  பாட­லின் எண்­டிங்.. என்­னமோ சொல்­லு­வாங்­களே.. ஆங்... சான்சே இல்ல!  

7. தாலாட்­டும் பூங்­காற்று...

'கோபுர வாச­லிலே' (1991) படத்­தில் ''ப்ரிய­சகி,'' ''தேவதை போலொரு'' பாட்­டெல்­லாம் கேட்­டுத் தீர்த்­தி­ருப்­பீர்­கள். இந்­தப் பாடல், ஒரு படி அதி­க­மாக  கொண்­டா­டப்­ப­ட­வேண்­டிய பாடல். ராஜா ரசி­கர்­க­ளின் பேவ­ரிட். முன்­னரே சொன்­னது போல புல்­லாங்­கு­ழல் துவக்­கத்­தி­லேயே இழுக்­கும். எஸ். ஜான­கி­யின் குரல். இடை­யி­சை­யில் வய­லின் விளை­யா­டும். சர­ணம் ஆரம்­பித்­த­தும் தபேலா. ஒவ்­வொரு வரி முடி­வி­லும் புல்­லாங்­கு­ழல். அங்­கங்கே மாறும் தபேலா இசை. கூடவே வரும் வய­லின். சர­ணம் முடி­யும்­போது, தாளக்­கட்டு மாறி.. நின்று தொட­ரும் தபேலா.  பாட­லின்­போது எந்த இசைக்­க­ரு­வியை எங்கே நிறுத்த வேண்­டு­மென்­பது கன­கச்­சி­த­மாய் தெரிந்­த­வர்­தானே ராஜா! இதில் அதை ரசிக்­க­லாம். இரண்­டாம் இடை­யிசை முடிந்து, சர­ணம் தொடங்­கும் முன் தபேலா இசை.. டக்­கென்று ஆரம்­பிக்­கும். அட்­ட­கா­சம் பண்­ணி­யி­ருப்­பார்.

8. மாது­ளங்­க­னியே.. நல்ல மலர்­வ­னக்­கி­ளியே....  

இது­வும் 'சாமி போட்ட முடிச்சு'-தான். இளை­ய­ராஜா -–- எஸ். ஜானகி குரல்­கள். இன்­னொரு ‘கண்ணை மூடிக்­கொண்டு கேட்­க­லாம்ப்பா’ பாடல். துள்­ள­லாக ஆரம்­பிக்­கும் இசை முடிந்­த­தும், ஆரம்­பிக்­கும் ராஜா குரல். தபேலா இசை கலக்க, முதல் இடை­யி­சை­யில் புல்­லாங்­கு­ழல் வசீ­க­ரிக்­கும். சர­ணத்­தின் மெட்­டும், தபேலா விளை­யாட்­டும் இன்­னும் வசீ­க­ரம். எஸ். ஜானகி, சிரிப்பு, ஆலாப் என்று புகுந்து விளை­யா­டும் பாடல்.  

9. ஏஞ்­சல் ஆடும் ஏஞ்­சல்...

இந்த லிஸ்ட்­டின், முதல் பாடலை, பெரும்­பா­லா­னோர்  கேட்­டி­ருக்க மாட்­டீர்­கள். அதே போல, பெரும்­பா­லா­னோர் கேட்­காத இன்­னொரு செம சர்ப்­ரைஸ் சாங் கடை­சி­யாக இருக்க வேண்­டும் என்று இதை வைத்­தி­ருந்­தேன். 1986ல் வெளி­யான 'நானும் ஒரு தொழி­லாளி' படப்­பா­டல். முதன்­மு­றை­யாக நான் கேட்­ட­போதே, ‘எப்டி இதை மிஸ் பண்­ணி­னேன்?’ என்று நினைத்த பாடல். அந்­தப் புல்­லாங்­கு­ழல் ஆரம்­பம், நிச்­ச­யம் உங்­களை இழுக்­கும். 'வளை­யோசை,' 'பனி­வி­ழும்' இந்­தப் பாடல் என்று புல்­லாங்­கு­ழல் ஆரம்­பத்­தில் இழுக்­கும் பாடல்­கள் என்று ஒரு லிஸ்ட்டே போட­லாம். பி. சுசீலா குரல். அப்­படி ஒரு ஸ்லோ மெலடி.  1.12ல் துவங்­கும் சாக்­ஸ­போன் இடை­யிசை உங்­களை மயக்­க­வில்லை என்­றால்.... இல்லை என்­றால் என்ன.. மயக்­கும். கேட்­டுப்­பா­ருங்­கள்.

அதைத் தொடர்ந்து வரும் ஜல­த­ரங்க பாணி  கீபோர்ட் இசை­யும்.. சர­ணத்­தின் மெட்­டும்.. ‘ராஜா சார்..  ஏன் இப்­படி மயக்­கு­றீங்க?’ என்று கேட்க வைக்­கும்.  உடனே டவுன்­லோட் பண்ணி, பேவ­ரிட் லிஸ்ட்­டில் வைக்­கச் சொல்­லும் பாடல்.Trending Now: