அமைதி காக்கும்படி முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள்

09-11-2019 10:17 AM

சென்னை,       

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தமிழக மக்கள் அமைதி காக்கும்படி முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ரம் இன்று தீர்ப்பு வழங்க இருப்பதை யொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவப்படை வீரர்கள் 4 1000 பேரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, கண்காணிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதையொட்டி தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதையொட்டி அனைத்து மத தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு இடம் தராமல், தமிழகத்தை அமைதிப்பூங்காவாக திகழச் செய்யுங்கள்.

சாதி, மத பூசல் இன்றி தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக விளங்குவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.Trending Now: