ஜேப்பியார் குழுமத்தில் 2 வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு

08-11-2019 03:46 PM

சென்னை,

ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்று 2 வது நாளாக நீடித்து வருகிறது.

சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் மீன்பிடி துறைமுகத்திலும் நேற்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடபெற்றது.

வரி ஏய்ப்பு சம்பந்தமாக இந்த சோதனை நடப்படதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2 வது நாளாக சோதனை நீடித்து வருகிறது.

சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறையின் 11 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர், முட்டம் ஜேப்பியார் மீன்பிடி துறைமுக அலுவலகம், படகு தளம், விசைப்படகுகளின் எண்ணிக்கை குறித்து சோதனை நடத்தினர், அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணையும் நடத்தினர்.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. Trending Now: