அரசியல்மேடை : உள்ளாட்சித் தேர்தல் : வெல்லப் போவது யார்?

07-11-2019 05:54 PM

ஒரு வழி­யாக உள்­ளாட்­சித் தேர்­தல் வந்தே தீரும் என்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. ஆட்­சி­யி­ன­ரும் எப்­ப­டி­யும் வரும் டிசம்­பர் மாதம் தேர்­தலை நடத்­து­வது என்று முடி­வெ­டுத்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த தேர்­தலை எதிர்­கொள்ள அதி­முக கூட்­ட­ணி­யும், திமுக கூட்­ட­ணி­யும் தயார் நிலை­யில் உள்­ளது. குறிப்­பாக அதி­முக தரப்­பில், மாநில, மாவட்ட அள­வி­லான ஆலோ­சனை கூட்­டங்­கள், தொகுதி வாரி­யான செயல் வீரர் கூட்­டங்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த 2016–ம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 17,19 தேதி­க­ளில் நடை­பெ­றும் என்று செப்­டம்­பர் மாதம் 16–ம் தேதி தமிழ்­நாடு மாநில தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­தது. பின்­னர் 19–ம் தேதி­யன்று சென்னை மாந­க­ராட்­சிக்­கான தேர்­தல் அறி­விப்­பி­னை­யும் வெளி­யிட்­டது. இந்த அறி­விப்பு வெளி­யா­ன­வு­டன் அதி­முக, சார்­பில் வேட்­பா­ளர்­கள் பெயர்­கள் அறி­விக்­கப்­பட்டு மனுத்­தாக்­கல் தொடங்­கி­யது. திமுக தரப்­பி­லும் முதல்­கட்ட பட்­டி­யலை வெளி­யிட்­ட­னர்.

இந்­நி­லை­யில் திமுக அமைப்பு செய­லா­ள­ரான ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் ஒரு மனுத்­தாக்­கல் செய்­தார். அந்த மனு­வில் கடந்த மாதம் தமிழ்­நாடு மாநில தேர்­தல் ஆணை­யம் வெளி­யிட்ட உள்­ளாட்சி அமைப்­புப் பட்­டி­ய­லில் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு சுழற்சி முறை­யில் உரிய இட ஒதுக்­கீடு வழங்­கப்­ப­ட­வில்லை. சென்­னை­யில் உள்ள 200 வார்­டு­க­ளில் ஒரு இடத்­தில் கூட பழங்­கு­டி­யி­ன­ருக்கு இட ஒதுக்­கீடு வழங்­கப்­ப­ட­வில்லை. இது அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­திற்­கும், பஞ்­சா­யத்து ராஜ் சட்­டத்­திற்­கும் எதி­ராக இருப்­ப­தால், இதற்­காக தமி­ழக அரசு பிறப்­பித்த அர­சா­ணை­களை ரத்து செய்து விட்டு சுழற்சி முறை­யை­யும், முறை­யான இட ஒதுக்­கீட்­டை­யும்  பின்­பற்ற உத்­த­ர­விட வேண்­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த மனுவை விசா­ரித்த உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி கிரு­பா­க­ரன் உள்­ளாட்சி தேர்­த­லை­யே­ரத்து செய்து விட்­டார். மாநில தேர்­தல் ஆணை­யம் பிறப்­பித்த அர­சா­ணை­க­ளுக்­கும் அவர் தடை விதித்­தார். இதை­ய­டுத்து மாநில தேர்­தல் ஆணை­யம் உள்­ளாட்­சித் தேர்­தலை முறை­யாக நடத்­து­வ­தற்கு உரிய அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்து வந்­தது.

பெண்­கள் மற்­றும் பழங்­கு­டி­யி­ன­ருக்­கான இட ஒதுக்­கீடு, வார்டு மறு வரை­ய­றைப்­ப­ணி­கள், வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்ப்பு பணி­களை மேற்­கொண்­டது. இதில் கால­தா­ம­தம் ஏற்­பட்­ட­தால், திமுக தரப்­பி­லும், பொது வழக்­கா­க­வும், பலர் நீதி மன்­றத்­துக்கு சென்­ற­னர். 5 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை உள்­ளாட்­சித் தேர்­தலை ஜன­நா­யக முறை­யில் நடத்தி மக்­கள் பிரதி நிதி­களை தேர்வு செய்ய வேண்­டும் என்ற சட்­டத்­தின் படி, தாம­தம் இன்றி விரை­வாக தேர்­தலை நடத்த வேண்­டும் என உயர் நீதி­மன்­ற­மும், உச்ச நீதி­மன்­ற­மும் உத்­த­ர­விட்­டன.

இத­னால் அர­சும், மாநி­லத் தேர்­தல் ஆணை­ய­மும் உள்­ளாட்­சித் தேர்­தலை வரு­கிற டிசம்­பர் மாதத்­திற்­குள் நடத்த முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தாக தெரி­கி­றது. தேர்­தலை நடத்­து­வ­தற்கு உரிய முன்­னேற்­பா­டு­களை செய்­யு­மாறு மாவட்ட கலெக்­டர்­க­ளுக்கு தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது. தேர்­தல் அதி­கா­ரி­கள் மற்­றும் அலு­வ­லர்­களை நிய­மிக்­கும் பணி­களை விரை­வு­ப­டுத்­து­மா­றும், வாக்­குப்­ப­திவு எந்­தி­ரங்­களை தயார் நிலை­யில் வைக்­கு­மா­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டை­யில் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இது தவிர, இந்த தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­காக, அதி­முக சார்­பில், ஆங்­காங்கே கட்­சி­யின் செயல்­வீ­ரர் கூட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. கடந்த 6–ம் தேதி புதன்­கி­ழமை, சென்னை ராயப்­பேட்டை பகு­தி­யி­லுள்ள அதி­முக தலைமை கழக அலு­வ­ல­கத்­தில் தலைமை கழக நிர்­வா­கி­கள், அமைச்­சர்­கள், எம்.பி, எம்.எல்.ஏக்­கள், மாவட்ட செய­லா­ளர்­கள் கட்­சி­யின் செய்­தித் தொடர்­பா­ளர்­கள் பங்­கேற்ற ஆலோ­சனை கூட்­டம் நடை­பெற்­றது. உள்­ளாட்சி தேர்­தலை எதிர்­கொள்­வது தொடர்­பாக இக்­கூட்­டத்­தில் ஆலா­சிக்­கப்­பட்­டுள்­ளது. அதி­முக அணி­யில் இடம் பெற்­றுள்ள கூட்­ட­ணிக் கட்­சி­க­ளி­டம் இடப்­பங்­கீடு அமைப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு குழு அமைக்­க­வும் தீர்­மா­னித்து உள்­ள­னர். திமுக தரப்­பி­லும் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளி­டம் இடப்­பங்­கீடு தொடர்­பாக விரை­வில் பேச இருப்­ப­தாக அறி­வா­லய வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நடை­பெற்று முடிந்த நாடா­ளு­மன்ற பொதுத் தேர்­த­லில் அப­ரி­மி­த­மான வெற்­றியை பெற்ற திமுக, அதே உற்­சா­கத்­தோடு, உள்­ளாட்­சித் தேர்­த­லை­யும் சந்­தித்து அதிக இடங்­களை கைப்­பற்­ற­லாம் என கணக்கு போட்­டது. படு­தோல்­வியை சந்­தித்த நிலை­யில் உள்­ளாட்­சித் தேர்­தலை எப்­படி எதிர்­கொள்­வது என்ற தயக்­கத்­தில் இருந்த ஆட்­சிக் கட்­சி­யான அதி­மு­க­வுக்கு விக்­கி­ர­வாண்டி, நாங்­கு­நேரி தொகுதி, சட்­ட­மன்ற இடைத் தேர்­தல்­க­ளில் கிடைத்த வெற்றி புதிய தெம்பை கொடுத்­தி­ருக்­கி­றது. இதே வேகத்­தில் உள்­ளாட்சி தேர்­தலை நடத்­தி­வி­ட­லாம் என்று கருதி அக்­கட்­சி­யும் களத்­தில் இறங்க முடிவு செய்­து­விட்­டது. விரை­வில் இரண்டு கட்­சி­க­ளின் சார்­பி­லும் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளு­டன் பேச்­சுக்­களை தொடங்க வாய்ப்­புண்டு

இரண்டு அணி­யி­ன­ருமே, நாடா­ளு­மன்ற தேர்­தல் கூட்­டணி தொட­ரும் நாங்­கள் முகாம் மாற­மாட்­டோம் என உறு­தி­ப­டக் கூறி­யுள்­ள­னர். ஆனால், இடப்­பங்­கீட்­டில் சிக்­கல் ஏற்­ப­டு­மே­யா­னால் அதி­ருப்தி உரு­வா­னால், எது­வும் நடக்க வாய்ப்பு உண்டு. திமுக அணி­யில் இடம் பெற்­றுள்ள காங்­கி­ரஸ் கட்சி நாடா­ளு­மன்ற இடப்­பங்­கீட்டு அடிப்­ப­டை­யில், சுமார் 30 சத­வீத இடங்­களை உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் தர­வேண்­டும் என கோரிக்கை வைக்க இருப்­ப­தாக, அக்­கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­களே கூறு­கின்­ற­னர். கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளும், விடு­த­லைச் சிறுத்­தை­க­ளும் கூட தங்­க­ளுக்கு கணி­ச­மான அள­விற்கு இடங்­கள் தேவை என வலி­யு­றுத்த வாய்ப்­பு­கள் உண்டு.

திமு­கவை பொறுத்­த­வரை சுமார் 70 சத­வீத இடங்­க­ளில் திமுக போட்­டி­யி­டு­வது என்­றும், மீத­முள்ள 30 சத­வீத இடங்­களை மட்­டுமே கூட்­ட­ணிக் கட்­சிக்கு வழங்க முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தா­க­வும் கூறு­கின்­ற­னர். இதை கூட்­டணி கட்­சி­யி­னர் ஏற்­பார்­களா? எனத் தெரி­ய­வில்லை.

இதே போன்று அதி­முக கூட்­ட­ணி­யி­லும் சிக்­கல் உரு­வாக வாய்ப்பு உள்­ளது. இக்­கூட்­ட­ணி­யில் உள்ள பா.ம.க. வடக்கு மற்­றும் மேற்கு மாவட்­டங்­க­ளில் மாந­க­ராட்சி, நக­ராட்சி, மாவட்­டக் கவுன்­சி­லர், ஒன்­றிய தலை­வர் உள்­ளிட்ட பல்­வேறு பொறுப்­பு­க­ளுக்­கும், கவுன்­சி­லர் பத­வி­க­ளுக்­கும் கனி­ச­மான இடங்­களை கோரிப்­பெற திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. எதிர்­வ­ரும் 2021 சட்­ட­மன்ற பொதுத் தேர்­த­லில் அதிக இடங்­ளில் போட்­டி­யி­டத் திட்­ட­மிட்­டி­ருக்­கும் பா.ஜ. அதற்கு முன்­னோட்­ட­மாக உள்­ளாட்­சித் தேர்­த­லில் சுமார் 25 சத­வீத அள­விற்கு இடங்­களை பெறு­வ­தற்கு முயற்சி மேற்­கொள்­ளும் என்று அக்­கட்சி வட்­டா­ரத்­தில் கூறு­கின்­ற­னர். இது தவிர த.மா.கா, தேமு­திக உள்­ளிட்ட கட்­சி­க­ளும் உள்­ளன. இவர்­க­ளுக்­கும் இட ஒதுக்­கீடு வழங்க வேண்­டும். இது அதி­மு­க­வுக்கு மிகப்­பெ­ரும் தலை­வ­லி­யாக இருக்­கும். ஆனா­லும், தங்­க­ளி­டம் உள்ள கூட்­ட­ணிக் கட்­சி­களை திருப்­திப்­ப­டுத்தி, இந்த இரண்டு திரா­வி­டக் கட்­சி­க­ளும் உள்­ளாட்சி தேர்­தலை சந்­திக்­கும் போது யார் கை ஓங்­கும், எந்த கட்­சி­யின் கூட்­டணி அதிக இடங்­களை கைப்­பற்­றும் என்­ப­து­தான் பெரும் கேள்­வி­யாக எழுந்து நிற்­கி­றது.Trending Now: