தாய்லாந்தில் போராட்டக்காரர்கள் துப்பாக்கிச்சூடு: கிராம மக்கள் 15 பேர் பலி

06-11-2019 05:30 PM

பாங்காக்

தாய்லாந்தில் பிரிவினைவாத போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிராம மக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள யாலா  மாகாணத்தில், 2 வாகன சோதனை சாவடி வழியாக சில வாகனங்கள் செல்ல முயன்றுள்ளன.

இந்த வாகனங்களை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றபோது வாகனங்களில் வந்தவர்களுக்கும் அங்கு உள்ள கிராம மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதும், வாகனங்களில் வந்தவர்கள் கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் கிராம மக்கள் 15 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கிராம மக்கள் மீதான தாக்குதலை பிரிவினைவாத போராட்டக்காரர்கள்   நடத்தியிருக்க கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Trending Now: