சூரிய ஒளிக்­கும் குட­லுக்­கும் என்ன தொடர்பு

06-11-2019 05:10 PM

நம் தோலின் மீது தின­மும் சிறி­த­ள­வா­வது சூரிய ஒளி பட­வேண்­டும் என்­பது மருத்­து­வர்­கள் சொல்­வ­துண்டு. ஆனால், தோல் மீது சூரிய ஒளி­ ப­டு­வ­தற்­கும், நம் குட­லுக்­குள் வசிக்­கும் லட்­சக்­க­ணக்­கான நல்ல நுண்­ணு­யி­ரி­க­ளுக்­கும் நேரடி தொடர்பு இருப்­பதை, முதல் முறை­யாக கன­டா­வைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் கண்­ட­றிந்­து­உள்­ள­னர்.

சூரிய கதி­ரி­லுள்ள புற­ஊதா கதிர்­கள், தோலின் மீது படும்­போது, வைட்­ட­மின் - டி, நம் உட­லில் உற்­பத்­தி­யா­கி­றது. குட­லில் உள்ள நுண்­ணு­யி­ரி­கள் பல்­கிப் பெரு­கு­வ­தற்கு, இந்த வைட்­ட­மின் - டி மிக­வும் அவ­சி­யம். இந்த வகை­யில் குட­லின் ஆரோக்­கி­யத்­திற்கு, குறிப்­பாக, குட­லில் உள்ள நுண்­ணு­யி­ரி­க­ளின் பல்­லு­யிர் பெருக்­கத் தன்­மைக்கு சூரிய ஒளி மிக­வும் முக்­கி­யம் என்­பதை, மனித சோத­னை­கள் மூலம் கனடா விஞ்­ஞா­னி­கள் நிறு­வி­யி­ருப்­ப­தாக, 'பிரான்­டி­யர்ஸ் இன் மைக்­ரோ­ப­யா­லஜி' இதழ் தெரி­வித்­துள்­ளது.Trending Now: