மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 16

06-11-2019 05:08 PM

விஸ்­வ­நா­தன் ஜாதி கண்­ணோட்­டம் இல்­லா­த­வர்; பாப­நா­சம் சிவனை தலைக்கு மேல் வைத்­துக் கொண்­டா­டு­ப­வர்  என்­பது வாலிக்கு தெரி­யும். அத­னால் வாலி­யின் ஜாதி­யைப் பற்றி அவர் தெரிந்­து­கொள்ள விரும்­பி­யி­ருக்­கி­றார் என்று வாலி தீர்­மா­னித்­துக் கொண்­டார்.. அடுத்து என்ன நடந்­தது?

பிறகு விஸ்­வ­நா­தன், வாலி­யி­டம்`­ஏ­தா­வது பல்­ல­வியை எழு­திக் கொடுங்­கள்’ என்­றார். பாட்­டுக்­கான காட்சி விளக்­கத்தை இயக்­கு­நர் முக்தா சீனி­வா­சன் சொன்­னார். உடனே வாலி ஒரு பல்­ல­வியை எழுதி அவ­ரி­டம் நீட்­டி­னார். `பூ வ­ரை­யும் பூவைக்கு பூமாலை போடவா? பொன்­ம­களே வாழ்க வென்று பாமாலை படவா?’ என்­ப­து­தான் அந்த பல்­லவி. ` பூவைக்கு என்­ப­தெல்­லாம் டியூ­னுக்கு சரி­யாக வராது’ என்­றார் விஸ்­வ­நா­தன்.  உடனே `பூங்­கொ­டியே’ என்று மாற்­றிக் கொடுத்­தார் வாலி. இவர் எழு­திக் கொடுத்த பல்­ல­விக்கு 5 நிமி­டங்­க­ளில் ஐந்து வித­மாக மெட்­ட­மைத்து விஸ்­வ­நா­தன் பாடி­ய­தைக் கேட்டு வாலி வியந்து போனார்.  `சர­ணத்­திற்கு நான் கொடுக்­கும் மெட்­டுக்­குத்­தான்  நீங்­கள் பாட்டு எழுத வேண்­டும்’ என்ற விஸ்­வ­நா­தன் சர­ணத்­திற்­கான மெட்டை வாசித்­தார்.

கால் மணி நேரத்­தில் நான்­கைந்து சர­ணங்­களை விஸ்­வ­நா­தன் கொடுத்த மெட்டுக்கு எழுதி அவ­ரி­டம் நீட்­டி­னார்.  சர­ணங்­களை வாங்­கி­ய­வர் அவற்றை பாடா­மல் திரும்­பத் திரும்ப இரண்டு மூன்று முறை மன­திற்­குள் படித்­துப் பார்த்­தார் விஸ்­வ­நா­தன்.  பிறகு வாலி­யி­டம் ஒரே ஒரு கேள்வி கேட்­டார். `இவ்­வ­ளவு நாளா எங்கே இருந்­தீங்க?’ என்­ப­து­தான் அந்த கேள்வி. வாலி கண்­க­லங்கி மவு­ன­மா­னார். சர­ணங்­க­ளுக்கு  உடனே `மள­ம­ள’­வென்று பாடி­னார். `சீனு அண்ணா, அடுத்த சிச்­சு­வே­ஷ­னை­யும் இவர்­கிட்ட சொல்­லுங்க’ என்­றார் விஸ்­வ­நா­தன்.  சொன்­னார் சீனி­வா­சன்.  வாலி உடனே எழு­தி­னார்.

‘ஒடி­வது போல் இடை இருக்­கும்

 இருக்­கட்­டுமே.

 அது ஒய்­யார நடை நடக்­கும்

நடக்­கட்­டுமே.

சுடு­வது போல் கண் சிவக்­கும்

சிவக்­கட்­டுமே.

அது சுட்டு விட்­டால் கவி பிறக்­கும்

 பிறக்­கட்­டுமே.’

விஸ்­வ­நா­தன் மகிழ்ந்­தும் நெகிழ்ந்­தும்  போனார்.

 உடனே வித­வி­த­மான மெட்­ட­மைத்து பாடிக்­காட்­டி­னார். வழக்­கம்­போல் அவர் கொடுத்த மெட்­டுக்கு வாலி சர­ணங்­களை எழுதி முடித்­தார்.

மாலை 3 மணி­யி­லி­ருந்து 4.30 மணிக்­குள் இரண்டு பாடல்­க­ளும் நிறை­வ­டைந்­தன.

விஸ்­வ­நா­தன் அடுத்த கம்­பெ­னிக்கு புறப்­பட்­டு­விட்­டார். பிறகு கம்­பெனி கம்­பெ­னி­யாக எம்­எஸ்வி., வாலி­யைப் பற்றி சொன்­ன­தன் பய­னாக வாய்ப்­பு­கள் வாலிக்கு வந்­தன.  `சாரதா’ படத்­திற்கு பிறகு புகழ் ஏணி­யில் ‘மள­ம­ள’­வென்று ஏறி நின்று தமிழ் கூறும் நல்­லு­ல­கம் எங்­கும் `இயக்­கு­நர் தில­கம்’ எனப் போற்­றிப் புக­ழப் பெற்ற கே. எஸ். கோபா­ல­கி­ருஷ்­ண­னி­டம் இருந்து ஒரு நாள் வாலிக்கு  அழைப்பு வந்­தது. சென்­றார்.

`உங்­க­ளை­பத்தி எம்­எஸ்வி சொன்­னாரு. ஒரு பாட்டு தற்­றேன். எழு­துங்க. அப்­பு­றம் பாப்­போம் என்­றார் கே.எஸ்.ஜி.. `விஸ்­வ­நா­த­னுக்கு எழு­தின  ஏதா­வது ஒரு பாட்டை சொல்­லுங்க’ என்­றார்.

‘உறவு என்­றொரு சொல்­லி­ருந்­தால்

பிரிவு என்­றொரு பொரு­ளி­ருக்­கும்

காதல் என்­றொரு கதை இருந்­தால்

 கனவு என்று முடிவு இருக்­கும்’

` இத­யத்­தில் நீ’ படத்­திற்­காக எழு­திய பாட்டை அவ­ரி­டம் மெட்­டோடு  பாடிக் காண்­பித்­தார் வாலி.

` ஓகே’ ஒரு பானை சோற்­றுக்கு ஒரு சோறு பதம். நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க வண்டி அனுப்­பு­றேன்’ என்­றார் கோபா­ல­கி­ருஷ்­ணன்.  சந்­தோ­ஷ­மாக தன் இருப்­பி­டம் வந்து சேர்ந்­தார் வாலி.. அன்று இரவு முழு­வ­தும் வாலி கே.எஸ்.ஜியைப் பற்­றியே சிந்­தித்­துக் கொண்­டி­ருந்­தார். தமிழ்­சி­னி­மா­வில் கே. எஸ். கோபா­ல­கி­ருஷ்­ண­னுக்கு ஒரு தனித்த இடம் உண்டு. எத்­தனை அற்­பு­த­மான படங்­களை அவர் எழு­தி­யி­ருக்­கி­றார். இயக்­கி­யி­ருக்­கி­றார்.

திரைப்­பட கலை­ஞர்­க­ளுக்கு எல்­லாம் பிதா­ம­கன் உடு­மலை நாரா­ய­ண­க­வி­யோடு உட­னி­ருந்து  `குட்­டக்­கவி’ என்று நாம­க­ர­ணம் செய்­யப்­பட்­ட­வர் கே. எஸ். கோபா­ல­கி­ருஷ்­ண­னன்.  மிக சிறந்த கவி­ஞர் வரி­சை­யில் ஒரு­வர் என்­ப­தற்கு எத்­த­னையோ பாடல்­கள் இன்­ற­ள­வும் சான்­றாக நிற்­கின்­றன. `எதிர்­பா­ரா­தது’ படத்­தில் கேஎஸ்ஜி எழு­திய` காதல் வாழ்­வில் நானே கனி­யாத காயாகி போனேன்,’ ` அம­ர­தீ­பம்’ படத்­தில் `நாண­யம் மனு­ஷ­னுக்கு அவ­சி­யம். இது நல்­லோர்­கள் சொல்லி வைத்த நன்­மை­யான ரக­சி­யம்’ என்ற பாட­லும் அவர் சொன்ன பாணி­யி­லேயே சொல்­வ­தா­னால் ஒரு பானை சோற்­றுக்கு இரண்டு அரிசி பத­மாக நிற்­கின்­றன.

வச­னங்­க­ளில் இது­வரை அவரை மிஞ்சி ஒரு­வ­ரும் வர­வில்லை. அவ­ரு­டைய வச­னங்­க­ளில் பண்பு சார்ந்த பழந்­த­மிழ் கொடி கட்டி பறக்­கும். எளி­மை­யும் வலி­மை­யும் ஒரு சேர நின்று கேட்­போர் செவி­க­ளை­யும் சிந்­த­னை­யை­யும் இங்­கு­மங்­கும் அசை­ய­வி­டா­மல் கட்­டிப்­போ­டும். நவாப் ராஜ­மா­ணிக்­கம் கம்­பெ­னி­யில் நன்கு பட்டை தீட்­டப்­பட்ட வைரம் ஆகும்.

ஒரு புட­வையை வைத்து ‘பணமா பாசமா’ படத்­தின் உச்­சக்­கட்ட காட்­சியை மெச்­சத்­த­குந்த விதத்­தில் நிறுத்­திக் காட்­டிய மேதை அவர்.

அனு­ப­வத்­தையே ஆசா­னா­கக் கொண்டு ஒரு மனி­தன் அறிவு செல்­வத்தை சேமித்­துக் கொள்­ள­லாம் என்று நிரூ­பித்­துக் காட்­டிய ஆதர்ச புரு­ஷன் என்று கே.எஸ். ஜியை சந்­தே­க­மின்றி சொல்­ல­லாம்.

 இசை­ய­றி­வும், மொழி­ய­றி­வும் அவ­ருக்கு தண்­ணீர் பட்ட பாடு.  பெரும்­பா­லான இயக்­கு­நர்­க­ளுக்­குப்­பா­ட­லா­சி­ரி­யர்­க­ளி­டம் இன்­னது வேண்­டும், இன்­னது வேண்­டாம் என்­றெல்­லாம் எடுத்­துச் சொல்­லத் தெரி­யாது.

கட்­டிய வீட்­டிற்கு பழுது சொல்­வது போல எழு­திக் கொடுத்த பாட்டை வைத்­துக் கொண்டு ஏடா­கூ­ட­மாக கருத்­துச் சொல்­லும் இயக்­கு­நர்­கள் பலரை வாலி பார்த்­தி­ருக்­கி­றார் கே.எஸ்.ஜி. தான் சொல்ல வந்த கருத்­தில் தெளி­வாக இருப்­பார்.

`கண்­ண­தா­சன் மள­ம­ள­வென்று இரு­பது சர­ணங்­க­ளைச் சொன்­னார். நான் எதை வைத்­துக் கொள்­வது என்று தெரி­யா­மல் தவித்­தி­ருக்­கி­றேன்’ என்­றெல்­லாம் அசட்­டுத்­த­னம் பேசும் அரை­வேக்­கா­டான தன்­மையை கே.எஸ். ஜியி­டம் காண முடி­யாது. இரு­பது சர­ணங்­க­ளும் சிறப்­பாக இருப்­பின், முதல் சர­ணத்­திற்­கும் அந்த சிறப்பு பொருந்­து­மல்­லவா? அது ஏன் ஆரம்­பத்­தி­லேயே அந்த இயக்­கு­ந­ரின் அறி­வுக்கு எட்­ட­வில்லை? இசை­ய­றி­வும், மொழி­ய­றி­வும் இல்­லா­த­வர்­கள் அதிர்ஷ்­ட­சா­லி­க­ளாக இருப்­ப­தால்­தான் இத்­தகு அபத்­தங்­கள் நேர்­கின்­றன. கே.எஸ். ஜி. எதிர்­பார்க்­கும் கருத்து, கவி­ஞர் சொல்­லும் பல்­ல­வி­யிலோ, முதல் சர­ணத்­திலோ அமைந்­து­விட்­டால் அடுத்­தது எழுத அவர் கவி­ஞர்­களை அனு­ம­திக்க மாட்­டார்.  ` உனக்கு வேணும்னா, நீ எழுதி வீட்­டுக்கு எடுத்­துட்­டுப் போ; எனக்கு இது போதும்’ என்­பார். அவ்­வ­ளவு தன்­னம்­பிக்கை, அவ்­வ­ளவு தீர்க்­க­மான தெளி­வான முடிவு அவ­ரது தீர்ப்­பில் தென்­ப­டும். தனது பேனா­வில் மையை நிரப்­பா­மல், மெய்யை நிரப்பி – யதார்த்­த­மான உரை­யா­டல்­கள் எழுதி, நம் நாடி நரம்­பு­களை சுண்­டிப் பார்த்­த­வர் கே.எஸ். கோபா­ல­கி­ருஷ்­ணன். மறு­நாள் கே.எஸ். ஜியின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து வாலிக்கு வண்டி வந்­தது.  விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி தங்­கள் இசைக்­கு­ழு­வோடு அங்கே இருந்­தார்­கள்.  கே.எஸ்.ஜி. தாலாட்டு பாட்­டுக்­கான ஒரு சிச்­சு­வே­ஷனை சொன்­னார். ஒரே பல்­ல­வி­தான் எழு­தி­னார் வாலி. பல்­ல­வியை விஸ்­வ­நா­த­னி­டம் கொடுத்­தார் வாலி. அவர் படித்­து­விட்டு, எந்­தக் கருத்­தும் சொல்­லா­மல் கே.எஸ்.ஜியி­டம் கொடுத்­தார். அது என்ன பல்­லவி? அதற்கு கே.எஸ். ஜி. என்ன சொன்­னார்?

(தொட­ரும்)
Trending Now: