பாரம்பரிய கலை வளர கரம் கொடுக்கிறேன்!

06-11-2019 05:04 PM

சென்னை நங்­க­நல்­லுாரை சேர்ந்­த­வர் காத்­தி­யா­யினி. பாங்க் ஒன்­றின் மேலா­ள­ராக இருந்­த­வர், தான் பார்த்­து­வந்த வேலையை உத­றி­விட்டு பாரம் ப­ரிய பொம்­மை­கள் தயா­ரித்து விற்­பனை செய்து வரு

­கி­றார். இவ­ரது தயா­ரிப்­பு­கள் அமெ­ரிக்கா உள்ளிட்ட பல வெளி­நா­டு­க­ளில் வர­வேற்பை பெற்­றுள்­ளன.

காத்­தி­யா­யினி பிரகாஷ். படித்து முடித்­து­விட்டு பாங்க் ஒன்­றில் மேலா­ள­ராக உத்­தி­யோ­கம் பார்த்­து ­வந்­தார். இவ­ரது மாமி­யார் சரோஜா பாரம்­ப­ரிய முறைப்­படி துணி­யால் பொம்­மை­கள் செய்­யத் தெ­ரிந்­த­வர்.

இவ­ரி­டம் இருந்து பொம்­மை­கள் செய்­யக்­கற்­றுக் கொண்டு, செய்த பொம்­மை­களை தெரிந்­த­வர்­க­ளுக்கு கொடுத்­தார். நல்ல வர­வேற்பு இருக்­கவே ஏன் இதையே முழு­நேர தொழி­லாக செய்­யக்­கூ­டாது என்று முடிவு செய்­தார். பார்த்­து­ வந்த வேலையை விட்­டு­விட்டு தற்­போது முழு நேர­மும் பொம்­மை­கள் செய்­து­ வ­ரு­கி­றார்.

தனது பொம்மை தயா­ரிப்பு நிறு­வ­னத்திற்கு ‘ஓலைப்­பெட்டி’ என்று பெயர் வைத்­துள்­ளார்.  சுற்­றுச்

சு­ழ­லுக்கு கேடு தராத பொம்­மை­கள் மட்­டுமே தயா­ரிப்­பது என்று உறுதி கொண்­டுள்­ளார். இதன் அடிப்­ப­டை­யில் களி­மண் மற்­றும் துணி பொம்­மை­கள் மட்­டுமே செய்­து ­வ­ரு­கி­றார். மிக­வும் அழ­கா­க­வும் நேர்த்­தி­யா­க­வும் பொம்­மை­கள் காணப்­ப­டு­கின்­றன.

இந்த துணி பொம்­மை­க­ளில் என்ன மாதி­ரி­யான உரு­வங்­களை வேண்­டு­மா­னா­லும் கொண்டு வர­லாம், சேத­ம­டை­யாது. நீண்ட நாட்­கள் இருக்­கும். பரா­ம­ரிப்­பது எளிது. விலை­யும் குறைவு.

கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக முழு வீச்­சில் பொம்­மை­கள் தயா­ரித்­து ­வ­ரும் இவர் ராமா­ய­ணம், மகா­பா­ர­தம் போன்ற இதி­கா­சங்­க­ளில் வரக்­கூ­டிய காட்­சி­களை தத்­ரூ­ப­மாக வடி­வ­மைப்­ப­தில் வல்­ல­வர்.

பிளாஸ்­டிக் ஒழிப்பு, மரம் வளர்ப்பு, பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­களை நினைவுபடுத்­தல் போன்ற இவ­ரது பொம்­மை­களை பள்­ளி­க­ளில் கண்­காட்­சி­யாக வைக்­கி­றார்­கள். அதே போல திரு­ம­ணம் நடை­பெ­றும் வீடு­க­ளில் திரு­ம­ணத்­தின் போது நடை­பெ­றும் சடங்­கு­களை வரி­சை­யாக காட்­சிப் ப­டுத்­து­கின்­ற­னர். இந்த அடிப்­ப­டை­யி­லான இவ­ரது பொம்­மை­க­ளுக்கு நல்ல வர­வேற்பு உள்­ளது.

தமி­ழ­கத்­தில் உள்ள பல கிராம மக்­க­ளு­டன் தொடர்பு கொண்டு அவர்­களை பனை ஓலை பொருட்­களை தயார் செய்­யச் சொல்லி வாங்­கிக் கொள்­கி­றார். பனை­ ஓ­லை­யால் செய்­யப்­ப­டும் பல்­வேறு வித­மான ஓலைப்­பெட்­டி­க­ளுக்கு எப்­போ­துமே டிமாண்டு உண்டு. அசாம்,நாக­லாந்து போன்ற வட மாநி­லங்­க­ளுக்கு சென்று அங்கு மட்­டுமே கிடைக்­கக்­கூ­டிய சணல் பொருட்­களை பொம்­மை­களை வாங்­கி ­வந்து விற்­கி­றார்.

இதன் கார­ண­மாக நேரி­டை­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் ஐம்­பது குடும்­பங்­க­ளுக்கு இவ­ரால் வாழ்­வா­தா­ரம் கிடைத்­து­ வ­ரு­கி­றது. வரு­டம் முழு­வ­தும் பொம்­மை­கள் தயா­ரிப்­பில் பிசி­யாக இருக்­கும் இவர் நவ­ராத்­திரி போன்ற நாட்­க­ளில் இன்­னும் பிசி­யா­கி­வி­டு­வார்.

புது­மை­யா­ன­தும்,தர­மா­ன­து­மான இவ­ரது பொம்­மை­களை அமெ­ரிக்கா மற்­றும் சிங்­கப்­பூர் போன்ற நாட்­டில் உள்­ள­வர்­கள் விரும்பி வாங்­கி­வ­ரு­கின்­ற­னர். ‘சாய் சரித்­திரா’ என்ற சாய்­பாபா கதை சொல்­லும் பொம்­மை­க­ளும், மெரினா கடற்­கரை வாழ் சிறு வியா­பா­ரி­கள் பொம்­மை­க­ளும் இந்த வரு­டம் பிர­ப­ல­மா­கி­விட்­டது.

‘‘பாங்க்கில் வேலை பார்த்

திருந்­தால் நான் மட்­டுமே நன்­றாக இருந்­தி­ருப்­பேன். இப்­போது என்­னைச் சுற்றி உள்ள பல குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து நானும் நன்­றாக இருக்­கி­றேன், என்­னால் இவ்­வ­ளவு பேருக்கு வேலை கொடுக்க முடி­வதை எண்ணி மகிழ்­கி­றே.ன் அதை விட பாரம்­ப­ரி­ய­மான நமது கலை­கள் வளர நானும் கரம் கொடுக்­கி­றேன் என்­ப­தில் இன்­னும் மகிழ்ச்சி அடை­கி­றேன்’’ என்கிறார் காத்­தி­யா­யினி.

தொடர் எண்: 98416 95164.Trending Now: